Saturday, July 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர ஆலோசனைக கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் 12/07/2012 அன்று இரவு 11 மணிக்கு கிளை செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்குகளை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டி, தெளிவுபடுத்தினார்கள். 
பிறகு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்: "அழைப்பு பணியின் அவசியம்" என்ற தலைப்பில், நமது கிளையின் அழைப்பு பணிகள் எவ்வாரெல்லாம் அமைய வேண்டும் என்றும், அதற்கான அறிவு திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? என்பதையும், அதனால் கிடைக்கவிருக்கம் நன்மைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்மேலும் தபூக் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், தபூக் கிளை மர்கஸில் ரமலான் மாதம் முழுவதும் [இப்தார்] நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.  மேலும் ரமலானில் தனி நபர் அழைப்பு பணிகள், பிற மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கினார்கள்இந்த செயற்குழுவில் தபூக் பகுதியைசேர்ந்த கொள்கை சகோதரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment