Monday, January 30, 2012

இந்திய கான்சுலேட் அறிவிப்பு

Consulate General of India

Jeddah

Press  Advisory

 

       The Kingdom of Saudi Arabia has extended amnesty period for the following category of over stayers till 8 March 2012.

 

Haj Overstayers

Umra Overstayers

Visit Visa Overstayers

 

       Indian nationals who fall under the above categories should have to   approach the Deportation Centre (Tarheel) immediately   with the Passport and air ticket to get the exit visa stamped on their travel documents after finger prints scan. The passport must have the visa sticker on it.  If the passport is in damaged condition, the applicant has to get the computer print out from Jawazat (Passport/Immigration Department) confirming his visa status before approaching Tarheel authorities.

All Indian nationals are directed to avail this amnesty opportunity without fail. If anyone found staying after 8 March 2012 will have to face severe punitive measures by the authorities.

 

(28 Jan. 2012)


TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய தாயும்,சேயும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 26/01/2012 அன்றுதொல்காப்பியர் சதுக்கம்தஞ்சாவூரை சேர்ந்தவரும் [King Abdul Aziz] மிலிட்டரி மருத்துவமனையில் இயற்பியல் நிபுனராக பனியாற்றி வரும் சகோ, அப்துர்ரஹ்மான்[சகோ.பத்மநாபன் சில மாதங்களுக்கு முன் தூய இஸ்லாத்தினை தன் வாழ்க்கை நெறியாக சில மாதங்களுக்கு முன் தபூக் கிளை முயற்ச்சியினால் ஏற்று அப்துற் ரஹமான் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார் என்பது நினைவுகொள்ளதக்கது, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்பொழுது அவர்களின் குடும்பத்தினரும் சத்திய மார்க்கத்தில் இணைந்துள்ளனர்] அவர்களின் மனைவி மல்லிகா அவர்களும், மகன் வரதன் ஆகியோரும் சத்தியஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். தங்களது பெயர்களை கதீஜா-அப்துர்ரஹ்மான் மற்றும் இபுராஹீம் என்றும் மாற்றிக்கொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்!                                         
இவர்களுக்கு கிளைத்தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் மற்றும் கிளைச்செயலாளர் சகோ, நிஜாம் ஆகியோரின் முன்னிலையில் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களின் துனைவியார் சுமையாஹ் அவர்கள் இஸ்லாத்தின்அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் சகோPJ அவர்களின் தர்ஜுமாவும், மற்றும் 5 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்                             

ஜித்தா ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையின் சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 27-01-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்றது.
அதில் சகோ. பி.ஜே அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்-தில் நாம் ஏன் இருக்க வேண்டும் எனும் தலைப்பில் உரையாற்றிய குறுந்தகட்டின் உரையை புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா தபூக் கிளையில் வாராந்திர தர்பியா………..!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  "தபூக்"கிளையில்  26/01/2012  இரவு  11/30 to 12/30  வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது இதில் கிளைத்தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் "TNTJ கூறும் அக்கீதா"  அடிப்படை கொள்கையை ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்று புத்துணர்ச்சியுடன் களைந்து சென்றனர்அல்ஹம்துலில்லாஹ்.............                                                                                   

TNTJ ஜித்தா தபூக் கிளை வாராந்திர பயான்!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 27/01/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் " [TNTJவும் பிற இயக்கங்களும்] ஓர் ஒப்பீட்டு பார்வை! " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சகோ, நிஜாம் அவர்கள் "தாயகத்தில் TNTJவின் அரும்பணிகள்!" என்ற தலைப்பிலும் மேலும் சகோ, முஜாஹீத் அவர்கள் "பைபில் இறை வேதமா?" என்ற விவாதத்தின் சாரம்சங்களை பற்றியும் சிற்றுரையற்றினார்கள். 40திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  

TNTJ ஜித்த-செனையா குர்ஆன் ஹதீஸ் பதாகைகள்

கம்பெனிகளின் கேம்ப்களில் குர்ஆன் ஹதீஸ் பதாகைகளை வைத்து இஸ்லாத்தை இந்த வழியிலும் எடுத்துரைக்கும் தாவா பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை செயல்பட்டு வருகின்றது. இது போல் பல கம்பெனி கேம்ப்களில் வாராவாரம் வசனங்களை மாற்றி தங்களது தாவாவை செய்து கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா-செனைய்யா பெரியவர்களுக்கான வாராந்திர குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை சார்பாக வாராவாரம் நடத்தப்படும் குர்ஆன் வகுப்பு இந்த வாரம் 20.01.2012 அன்று நடந்தது. பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். கடந்த சிலமாதங்களாக முதல் ஆரம்பகல்வி தொடங்கிய பல சகோதரர்கள் இன்று சரளமாக குர்ஆன் ஓத கற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ். 

TNTJ-ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு பொதுக்குழு போட்டோ


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.01.2012 அன்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாவாழ்- கடையநல்லூர் சகோதரர்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு மண்டல துணைத்தலைவர் சகோ.ரஃபீக் அவர்கள் தலைமையில் மண்டல துணைசெயலாளர் சகோ.கவுஸ் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் சகோ.அப்துல் காதர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துவக்கவுரை பொருளார் சகோ. அமீன் செய்தார். தொடர்ந்து மண்டல துணைத்தலைவர் சகோ.ரஃபீக் "அழைப்பு பணியின் பயன் என்ன" என்ற தலைப்பில் சொர்பொழிவு நிகழ்த்தினார். தனது உரையின் அழைப்புப்பணியின் அவசியத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து செயலாளர் சகோ.ஹனீஃபா தாயகம் செல்வதால் புதிய செயலாளராக சகோ.கும்மாளி அப்துல் பாசித் போட்டியின்றி மண்டல துணைத்தலைவரால் தேர்வு செய்யப்பட்டார். இதில் கூட்டமைப்பின் பொருளாளர் சகோ. அமீன் கணக்குகளை சமர்ப்பித்தார்.புரொஜக்டர் மூலம் கணக்குகளும், உறுப்பினர்கள் சந்தா விபரமும் அகன்ற திரையில் காட்டப்பட்டது. செயலாளர் ஹனீஃபா கூட்டமைப்பின் கடந்த வருட செயல்பாடுகளை விளக்கினார். சகோ.அப்துல் பாசித் கடையநல்லூரின் கிளைகள் செய்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை விளக்கினார். சகோ. அமீன் அந்த கிளைகளின் செயல்பாடுகளை அகன்ற திரையில் புகைப்படங்களுடன் விளக்கினார். துணைத்தலைவர் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் டவுண்கிளையிலிருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார். அனைத்து மாவட்டங்களிலும் நடத்த இருக்கும் போராட்டம் பற்றி விளக்கப்பட்டது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகமான உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். துஆ வுடன் கூட்டம் நிறைவுற்றது. 

இலவச திருக்குர் ஆனுக்கான நன்கொடை

அல்லாஹ்வி்ன் கிருபையால் கடந்த 12-01-2012 வியாழன் அன்று ஜி்த்தாவில் சசோ. அப்துல் கரீம் அவர்கள் 50 இலவச குர்ஆனுக்கான நன்கொடைக்காக இந்திய ரூபாய் 17000-க்கான காசோலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டல, செயலாளர் சகோ. அப்துல் பாரி அவர்களிடம் வழங்கினார்.



தானே புயல் நிவாரண நிதிக்கான நன்கொடை

அல்லாஹ்வி்ன் கிருபையால் கடந்த 12-01-2012 வியாழன் அன்று ஜி்த்தாவில் சசோ. அப்துல் கரீம் என்பவர் தானே புயல் நிவாரண நிதியாக இந்திய ரூபாய் 15000-க்கான காசோலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி அவர்களிடம் வழங்கினார்.








Saturday, January 21, 2012

மாநில தலைமையில் டிசம்பர் மாத செயல்பாட்டு மதிப்பெண்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள மண்டல & கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக்கடிதம் உங்களை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், நமது மாநில நிர்வாகம் கடந்த மாத (டிசம்பர்-2011) செயல்பாட்டு தரவரிசை மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நமது ஜித்தா மண்டலம் 1100 மதிப்பெண்களை பெற்று 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளது. வளைகுடா கிளைகளின் செயல்பாட்டு மதிப்பெண் பட்டியலில் தபூக் கிளை 540 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் நமது மண்டலம் முதல் இடத்தினை அடைய நமது செயல்பாடுகளையும், பங்களிப்புகளையும் இன்னும் அதிகமதிகம் செய்ய முயற்ச்சி செய்வோம். அதேபோல் ஒவ்வொரு கிளைகளும், தங்கள் கிளைகளின் செயல்பாடுகளை அதிக படுத்தி அதன்மூலம் நமது மண்டலமும் தொடர்ந்து முன்னிலை பெறசெய்ய உறுதி எடுத்து பணிகளை முடுக்கிவிடவும். 

நல்ல விஷயங்களில் நாம் ஒருவருக்கொருவர்(மண்டலங்கள் மற்றும் கிளைகளுக்கிடையே) போட்டியிடுவதில் தவறேதுமில்லை. இந்த போட்டி நாம் நல்ல விஷயங்களை அதிகபடுத்தவே உதவும், இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு மறுமையில் நமக்கு வெற்றியினை தர து.ஆ செய்வோம்.

அதே சமயம் 21 & 22 மற்றும் 28 & 29ம் தேதிகளில் கிறிஸ்தவர்களுடன் நமது ஜமாத் நடத்தும் விவாதத்தில் சத்தியதிற்க்கு வெற்றியினை தர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து.ஆ செய்வோம். 

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Tuesday, January 17, 2012

மாற்றுமத சகோதரர்களுக்கு அழைப்பு பணி!

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் தபூக் கிளையில், தபூக் ஏர் பேஷ்ஷில் உள்ள   மெஸ்ஹாலில்  பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 12/01/2012 அன்று அஸருக்கு பிறகு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்  "இஸ்லாமும் பிற மதங்களும்" என்பதைப் பற்றி சிறப்பான முறையில்  எடுத்துரைத்தார். இறுதியில் ஆர்வத்துடன் அவர்கள் இஸ்லாத்தைக்குறித்த அவர்களின் கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  மற்றும் பல 30 நூல்களும் வழங்கப்பட்டது. அல் ஹம்து லில்லாஹ்                                                                 

Feb 14ல் வாழ்வுரிமைப் போராட்டம்! நோட்டிஸ் விநியோகம்.

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
 
குறித்த நோட்டிஸ் தபூக் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்!

                                                       அல்லாஹ்வின் பேரருளால்TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 13/01/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சகோ, முஜாஹித் அவர்கள் "Feb 14ல் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும், முஹம்மது சாலிஹ் அவர்கள் "நபிவழியே நம்வழி" என்ற தலைப்பிலும் உரையற்றினார்கள். துஆவுடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  

TNTJ “தபூக்”கிளையிள் இஸ்லாத்தை ஏற்றஇருவர்!

TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை TNTJ மர்கஸில் 11/01/2012 அன்று TABUK AL DREES பெட்ரோல் பம்பில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த சகோ,ஜீஜியிம், இலங்கை யாழ்பானத்தைச் சேர்ந்த சகோ,அருள்தாஸ் அவர்களும்; சத்தியமார்க்கம் இஸ்லாத்தை "கலீமா மொழிந்து" தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்  கொண்டார்கள்! அல்ஹம்துலில்லாஹ். சகோ, அருள்தாஸ் தனது பெயரை முஹம்மது அலி என்றும், சகோ, ஜீஜி தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக் கொண்டார்கள்! அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்  மார்க்கத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன் PJவின் தமிழாக்கம் 2, திருமறை தோற்றுவாய்,மாமனிதர் நபிகள் நாயகம்,வருமுன் உரைத்த இஸ்லாம் 6. மற்றும் 10 இஸ்லாமிய நூல்களையும், 15 CD களையும் வழங்கினார். அல் ஹம்து லில்லாஹ்.

                                     


TNTJ ஜித்தா மண்டலம் & நகர கிளைகளின் மக்கா பயணம்


Monday, January 16, 2012

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை பொதுக்குழு

அல்லாவின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை பொதுக்குழு 13.01.2012 அன்று வெள்ளி மாலை ஜித்தாமண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி தலைமையில், துணைசெயலாளர் முஹம்மது கபீர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கிளைச் செயலாளர் சகோ.யாகூப் தொகுத்து வழங்கினார். கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் கிளையின் கடந்த வருட செயல்பாடுகள் மற்றும் தொடங்கிய வருடத்தின் சில செயல் திட்டங்களையும் விளக்கினார். தொடர்ந்து தமிழகத்தில் மாநில தலைமையின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான மாணவர் ஸ்பான்ஸர் கணக்குகள் சமர்பித்தார். கிளை தற்காலிய பொருளாளர் சகோ. அப்துல் காதர் கிளைக்கணக்குகளை சமர்பித்தார். வட்டியில்லா கடன் உதவித்திட்டத்தின் கணக்குகளை அதன் பொருப்பாளர் சகோ.அப்துல் ஹலீம் சித்தீக் சமர்பித்தார். ஜித்தா மண்டல பொதுச்செயலாளர் சகோ.அப்துல் பாரி மாநில தலைமைக்கு இடம் வாங்கும் விபரத்தை விளக்கினார்கள் அதற்கு பல உறுப்பினர்கள் நன்கொடை எழுதினார்கள், தர்ஃபியா நடத்த இருக்கும் தகவலையும் விளக்கினார்கள். உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல பொதுக்குழு

my;yh`;tpd; fpUigahy; fle;j 12-01-2012 md;W jkpo;ehL jt;`Pj; [khmj;-[pj;jh kz;lyj;jpd; nghJf;FO $l;;lk; \ugpah gFjpapy; eilngw;wJ. mjpy; rNfh. md;rhup mtu;fs; jt;`Pj; [khmj;-jpy; ehk; Vd; ,Uf;f Ntz;Lk; vd;w jiyg;gpy; 4 mk;rq;fis vLj;Jiuj;jhu;. mjid njhlu;e;J fl;bl epjp jpul;LtJ rk;ge;jkhfTk;> jhth gzpfis mjpfg;gLj;JtJ rk;ge;jkhTk;> ju;gpah Kfhk; elj;JtJ rk;ge;jkhTk; fye;J MNyhrpf;fg;gl;lJ. kz;ly nghUshsu; rNfh. A+D]; mth;fs; 2011f;fhd tUlf;fzf;Ffis rku;gpj;jhu;. JMTld; epfo;r;rp ,dpNj epiwT ngw;wJ. my;`k;Jypy;yh`;. 

ஜித்தா-சலாமா கிளை

ஜித்தா மண்டல அல்-சலாமா கிளை, மண்டலத்திற்க்கு இரத்தத்தில் குளுகோஸின் அளவை கணக்கிடும் (குளுகோ மீட்டர்) கருவியை,அவசரத்திற்க்கு இலவசமாகவும், மற்ற நேரங்களில், குறைந்த கட்டணத்தினை பெறுவதன் மூலம், மண்டலத்திற்க்கு பொருளாதாரம் ஈட்டும் வகைக்கு நன்கொடையாக கடந்த 12-01-2012 வியாழன் அன்று மண்டல து.தலைவர் ரஃபீ மற்றும் செயலாளர் பாரியிடம் கிளை தலைவர் சகோ.முஸ்தபா வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, January 14, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை மார்க்க சொற்பொழிவு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 13-01-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின்,இஷா வரை ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. சௌகத் ஹுசைன் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் அதிகமாக ஆர்வமுடன் கலந்துகொண்டனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்




Thursday, January 12, 2012

ஜித்தா மண்டல நிர்வாகிகள் & பேருந்து ஓட்டுனரின் மனித நேய சேவை

கடந்த 05-01-2012 அன்று ஜித்தா மண்டலம், நகர கிளைகளுடன் இணைந்து மதீனா ஜியாராஹ் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 200 பேர்கள், இந்த பயணத்தில் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். அப்பொழுது துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்த ஜி.சி.டி கம்பெனியில் பணிபுரியும் சகோ. ஷேக் ஃபரீதின் இக்காமா என்ற குடியிறுப்பு அட்டையும், 2500 ரியால் பணமும் பர்ஸுடன் காணாமல் போய்விட்டதாக மண்டல நிர்வாகிகளான சகோ.யூனுஸிடமும், பாரியிடமும் புகார் செய்தார். உடனே அவர்கள், துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பேருந்தின் ஓட்டுனராகிய பர்மாவை சேர்ந்த சகோ. இஸ்மாயிலை தொடர்பு கொண்டனர். அவர் பஸ்ஸின் உள்ளே அல்லாமல் வெளியில் கீழே கிடந்த ஒரு பர்ஸை நான் கண்டெடுத்து அது என்னிடம் உள்ளது. இன்றுதான் பேருந்தில் சென்றவர் விபரபட்டியலை பார்த்து அது உங்களுடையதுதான் என்று தெரிந்து கொண்டேன், அந்த பர்ஸ் என்னிடம்தான் உள்ளது, வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறவே,நிர்வாகிகள் உடன் சென்று அவரிடம் பர்ஸை பெற்று, உரியவரிடம் ஒப்படைத்தார்கள், ஷேக் ஃபரீத் மனமுவந்து 100 ரியாலை அந்த ஓட்டுனருக்கு அளித்தார், அவரும் அதனை சந்தோஷமுடன் பெற்றுக்கொண்டார். 
தன்னிடம் இல்லை என்று அந்த ஓட்டுனர் கூறிவிட்டால், நாம் ஒன்றும் செய்திருக்க முடியாது. என்றாலும், இறையச்சத்தின் பேரில் அந்த ஓட்டுனர் நடந்து கொண்டவிதம், பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-மதீனா கிளையில் துண்டுபிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 05-1-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதினா கிளையில் ஸபர் மாதம் பீடை மாதமா? என்ற விளக்கம் அடங்கிய நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா-மதீனா கிளை நிர்வாக கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 05-1-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா கிளையில் நிர்வாக கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி அவர்களின் தலைமையிலும், மண்டல் பொருளாளர் சகோ.யூனுஸ் முன்னிலையிலும் நடந்தது. இதில் வரும் நாட்களில் செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொள்வதென்று விரிவாக விவாதிக்கப்பட்டது. சகோ.பாரி அவரகள் மண்டலத்தின் மற்ற கிளைகளின் செயல்பாடுகளை விளக்கி மதீனா கிளை செயல்பாட்டை எப்படி விரிவாக்கம் செய்வது என்று ஆலோசனைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து உஹது போர் தந்த படிப்பினை எனும் தலைப்பில் சகோ. அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 11, 2012

ஜித்தா-துறைமுக கிளை மதீனா பயணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம், துறைமுகம் கிளை இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, இதில் பயண துஆ வுடன் புறப்பட்ட 50 பேர்கள் கொண்ட பேருந்திற்க்கு மண்டல பொருளார் சகோ.யூனுஸ், மற்றும் கிளைத்தலைவர் சகோ.மெஹ்பூப் பொறுப்பாளர்களாக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார்கள்.
பேருந்தில் நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை மற்றும் மதீனாவின் சிறப்புகள் ஆகியவை பற்றி உரை நிகழ்த்தப்பட்டது, ஸபா மஸ்ஜித், மற்றும் உஹது மலைக்கும் அழைத்து செல்லப்பட்டு அதன் விபரங்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மஸ்ஜிது நபவியில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிய பின் மதிய உணவு முடிந்து ஜித்தா திரும்பும்பொழுது பேருந்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது..
தொண்டர் அணியின் பணி பாராட்டத்தக்கவகையில் இருந்தது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

சுலைமானியா &சலாமா கிளைகள் மதீனா பயணம்


Tuesday, January 10, 2012

சுலைமானியா &சலாமா கிளைகள் மதீனா பயணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம், சுலைமானியா & சலாமா கிளைகள் இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, , பயண துஆவுடன் புறப்பட்ட 50 பேர்கள் கொண்ட பேருந்திற்க்கு கிளைத்தலைவர் சகோ.முபாரக் மற்றும் சகோ.நூர் பொறுப்பாளர்களாக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார்கள்.

பேருந்தில் நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை மற்றும் மதீனாவின் சிறப்புகள் ஆகியவை பற்றி உரை நிகழ்த்தப்படது. மேலும் குபா மஸ்ஜித், கிப்லதைன் மஸ்ஜித், ஸபா மஸ்ஜித், மற்றும் உஹது மலைக்கும் அழைத்து செல்லப்பட்டு அதன் விபரங்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மஸ்ஜிது நபவியில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிய பின் மதிய உணவிற்க்கு முடிந்து ஜித்தா திரும்பும்பொழுது பேருந்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது..

தொண்டர் அணியின் பணி பாராட்டத்தக்கவகையில் இருந்தது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது துஆ மற்றும் நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

ஜித்தா - ஷர்ஃபியா கிளை மதீனா பயணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம், ஷர்ஃபியா கிளை இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, இதில் பயணத்துஆவுடன் புறப்பட்ட 50 பேர்கள் கொண்ட பேருந்திற்க்கு கிளைத்தலைவர் சகோ.முஸ்தபா மற்றும் கிளை செயலாளர் ஹனீஃபா பொறுப்பாளர்களாக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார்கள்.

பேருந்தில் நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை மற்றும் மதீனாவின் சிறப்புகள் ஆகியவை பற்றி சகோ. செய்யது முஸ்தபா உரை நிகழ்த்தினார்கள். மேலும் குபா மஸ்ஜித், கிப்லதைன் மஸ்ஜித், ஸபா மஸ்ஜித், மற்றும் உஹது மலைக்கும் அழைத்து செல்லப்பட்டு அதன் விபரங்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மஸ்ஜிது நபவியில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிய பின் மதிய உணவிற்க்கு முடிந்து ஜித்தா திரும்பும்பொழுது பேருந்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஷர்ஃபியா கிளை சார்பாக 20 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டது. ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது..

தொண்டர் அணியின் பணி பாராட்டத்தக்கவகையில் இருந்தது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.