உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது. மேற்கத்திய (அ)நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம். ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக் என்ற புத்தகத்திலும், அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள "பட் ஆஃப்" என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும், மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம், அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம். அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும், 2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும், கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம் விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம் தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி). இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு. இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர். வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம், ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.
சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம். அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார். மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன். கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.
சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர். இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.
தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது. இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம். இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம். கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.
இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள். வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?. இந்த கூத்தில் இஸ்லாமிய நாடான கத்தார் 2022ம் வருட உலக கால்பந்து போட்டியை நடத்த உள்ளது. எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும், பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.
எனக்கு பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். "கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்" என்று இறைத்தூதர்(ஸல்) கூற கேட்டிருக்கிறேன் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (நூல் புகாரி- அத்தியாயம்-1- ஹதீஸ்-81)
No comments:
Post a Comment