Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, January 4, 2017

ஹதீஸில் துஆக்கள்

காலையில் ஓத வேண்டிய துவா: நமது நபிகள் நாயகம் சொல்லி கொடுத்தது நாமும் ஓதுவோம்
காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யெவ்மி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி ஹாதல் யெவ்மி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள் : (அல்லாஹ்வின் கிருபையால்) நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே! புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே எல்லா புகழும் உரியது. அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். என் இரட்சகா! இந்நாளின் நன்மை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் இரட்சகா! நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்


Sent from my iPhone

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள்
எம். ஷம்சுல்லுஹா
குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 55
அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 660
இறந்தவருக்காக தர்மம்
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 1388, 2756


Sent from my iPhone

Saturday, March 23, 2013

தொழுகை

உங்களுக்குத் தொழ வைக்குமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.. ஆம் முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னதமான ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.
திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.இத்தொழுகை எனும் இறைவணக்கம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த, காண்பித்து கொடுத்துள்ள முறையில்மஸாயில்களை அறிந்து நிறைவேற்ற வேண்டும்..இறைவன் கூறுகிறான்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றிபெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோர் என்றால்,  தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.மேலும்அவர்கள்தம்தொழுகைகளை குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன்23:1,2,9 )
உள்ளச்சம்((خشوع என்றால் இந்த இடத்தில் இறைவனை பயந்து, நாம் அவனை பார்க்காவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தொழுகவேண்டும். இரண்டாவது விளக்கம் தொழுகையை விளங்கி தொழுவது அதன் பர்ளு,வாஜிபு,சுன்னத் போன்றவைகள்.மூன்றாவதாக பேணுதல் அவசியம்,இன்று பேணுதல் என்றால் என்னவென்றே தெரியாமல் தொழுது கொண்டிருக்கிறோம். நிலையில்(நிற்பதில்) சொரிந்து கொண்டே நிற்பது,ஆடைகளை சரிசெய்வது,தாடியை கோதிவிடுவது,எங்கே பார்வையை 
செலுத்துவது என்று தெரியாமல் நிர்ப்பது, கைகட்டுவது, ருகூவு, சுஜூது செய்வது என்று தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து சலாம் கொடுக்கின்றவரை பேணுதல் அவசியம்.அதைத்தான் நமது இமாம்கள் தொழுகையின் பார்ளு நான்கு, வாஜிபு பதினெட்டு,சுன்னத் ஐம்பத்தி ஒன்று என்று அழகிய முறையில் அற்புதமான சட்டங்களை சொல்லித்தந்துள்ளார்கள் யார் இவைகளை நல்லமுறையில் படித்து விளங்கி அமல் செய்கின்றார்களோ அவர்களிடத்தில் பேணுதல் வந்துவிடும் 
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள்அறிவில்லாதமக்களாகஇருப்பதேயாகும். (அல்குர்ஆன்5:58) 
அல்லாஹ் தஆலா அவனது வேத நூலில் அதிகமான இடங்களில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும்,அதை ஒழுங்குர பாதுகாத்து ஜமாத்தாக நிறைவேற்றுவது பற்றியும் குறிப்பிடுகின்றான்.அத்துடன் சோம்பல் காரணமாக தொழுகையை அலட்சியம் செய்வது,அல்லது தொழுகையின் பக்கம் அழைப்பு கொடுத்தால் அதனை அலட்சிய படுத்துவதோடு மட்டுமல்லாமல் அழைப்பவரையும் பரிகாசம் செய்வது நயவஞ்சகர்களின் அடையாளமாகும்.
நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையைப் பற்றி ஒரு நாள் கூறி கொண்டிருந்தார்கள்.அப்போது யார் அதை பேணி நடக்கின்றானோ அவனுக்கு ஒரு பிரகாசமும், இறைவனிடம் ஓர் ஆதாரமும், கியாமத்து நாளில் வெற்றியும்ம் கிடைக்கும் என்றும், யார் அதைப்பேணி (தொழுகையை)நடக்கவில்லையோ அவனுக்கு பிரகாசமும் கிடைக்காது, ஆதாரமும் கிடைக்காது,வெற்றியும் கிடைக்காது,அவன் கியாமத்து நாளில் பிர்அவ்ன், காரூன்,ஹாமான் போன்ற பெரும் பாவிகளுடன் சேர்ந்திருப்பான் என்றும் சொன்னார்கள் (பைஹகி) மனிதனின் பிராகாசம் தொழுகையில்தான் உள்ளது,இந்த தொழுகைதான் நரகிலிருந்து விடுதலை பெருவதற்கு காரணமாகவும் ஆதாரமாகவும் உள்ளது ஆதாரம் என்பது நமது சஜ்தா செய்யும் ஏழு உறுப்புக்கள் தான் இதே தொழுகைதான் நாளை கியாமத் நாளில் நாம் வெற்றி பெறுவதற்கும் ஈடேற்றம்பெறுவதற்கும் காரணமாகவும் அமையும். அது அல்லாமல் எந்த ஒரு மனிதனாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பானேயானால் அவனின் இறுதிமுடிவு படு பயங்கரமானதாக இருக்கும் அல்லாஹ்வின் விரோதிகலாகிய கொடியவர்களுடன் தான் தொழுகாதவனும் எழுப்பப்படுவான்,என அல்லாஹ்வின் தூதர் எச்சரித்துள்ளார்கள். மேலும் அல்லாஹ் கூறுவதை படியுங்கள் 
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்6:72 )
எவர்கள் வேதத்தை உறுதியாக பற்றி பிடித்துக்கொண்டு, தொழுகையையும் நிலை நிறுத்துகிறார்களோ(அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்கமாட்டோம். (அல்குர்ஆன்7:170)அல்லாஹ் தொழுகையாளிகளை நல்லவர்கள் என்று கூறுகிறான்.அதுமட்டுமல்ல அவர்களுக்குண்டான கூலியும் நிரப்பமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தருகின்றான். நிரப்பமான கூலி என்றால் ஒரு மனிதன் தொழவேண்டும் என்று மனதால் நினைத்தான் ஆனால் தொழ வில்லை என்றாலும் நிய்யத்திற்கு கூலி 
வழங்கப்படும். நபிகளார் (ஸல்)அவர்கள் தொழுகையை (தொழவேண்டும்) என்று ஒருவன் நாடினாலும்கூட (அவன் 
நன்மையைப் பொறுத்த அளவில்)தொழுகையிளிருப்பவனைப் போலவே இருக்கிறான் என்றாகள்.ஆக நிய்யத்திற்கே கூலி என்றால் தொழுதவனின் கூலி எப்படி வீணாகும். கூலி வழங்குவதில் அல்லாஹ்வே மிகச்சிறந்தவன்.இவர்கள்தான் இறைவனின் அருளுக்குரியவர்கள். மேலும் அல்லாஹ் கூறுகிரான். நிச்சயமாக நாம்தான் அல்லாஹ்! என்னை தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர்வணங்கும்,என்னை தியானிக்கும்பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன்(20:14) 
அல்லாஹ் மாத்திரமே வணங்குவதற்கு தகுதியானவன் மனிதனது உள்ளத்தால்,உறுப்புக்களால் (உடலும் உள்ளமும் சேர்ந்து ) நிறைவேற்றப்படும் அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டுமே தவிர வேறு எவனுக்காகவும் நிறைவேற்றுவது கூடாது.காரணம் அவன்தான் நம்மை படைத்தவன் அதுமட்டுமல்ல அவனின் தன்மைகளைப் பாருங்கள்,அல்லாஹ்தான் அனைத்தையும் படைப்பதில்,பரிபாளிப்பதில் தனித்தவன்.அவ்வாறே அண்டசராசரங்கள் அனைத்திலுமுள்ள படைப்பினங்கள் யாவற்றையும் பரிபாளிக்கக்கூடியவனும் அல்லாஹ்வே ஆவான்,மேலும் படைத்தல், பரிபாளித்தல், போஷித்தல், ஆட்சி செய்தல்,உயிர்பித்தல்,மரணிக்கச் செய்தல்,இவை யாவும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தம்..மனிதர்களாகிய நாம் அவனின் அடிமைகள். நமது அடிமைத்தனத்தை தொழுகையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். காரணம் வழிபாட்டு சடங்குகளில் தொழுகைதான் முதன்மையானது இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று,இறை நம்பிக்கையாளனின் அடையாளமே தொழுகைதான். இரண்டு,இறைவனுடன் நேரிடையாக தொடர்பை ஏற்படுத்துவதுடன் அவனது கட்டளைக்கு பணிந்து வாழ்வேன் என்று வாக்களித்து இறைவனின் வழிகாட்டுதலை மட்டுமே விரும்பி வேண்டி பெறுவதால் மனிதன் பாவத்திலிருந்து பரிசுத்தமாகிவிட வாய்ப்பு ஏற்படுகிறது. .அல்லாஹ் கூறுகிறான் உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம் )மேலும் .உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம் எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிப்பாயாக (1:4-5)………. 
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகி விடும்.இஸ்லாம் என்பது இறைவனின் மார்க்கம். முழு மனித சமுதாயத்தின் ஈருலக ஈடேற்றத்திற்கு இறைவனால் தரப்பட்ட இனியமார்க்கம்.ஆக இஸ்லாம் என்றாலே இறைவனுக்கு கட்டுப்படுவது கீழ்படிவது இணங்கி நடப்பது என்பதுபொருள் (சாந்தி சமாதானம் எனவும் பொருளுண்டு) எனவேதான் ஒவ்வொரு ரகஅத்திலும் உன்னையே வணங்குகிறோம் உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம் என்று வரும் சூரா ஃபாதிஹாவை அல்லாஹ் தொழுகையுடன் சம்பந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். எவனொருவன் இதை ஓதவில்லையோ அவனின் தொழுகையே கூடாது மேலும் தொழுகையின் மூலமாகத்தான் நேர்வழியும் பிரகாசமும் கிடைக்கின்றது. மறுமையில் வெற்றியும் ஈடேற்றமும் கிடைக்கின்றது, இதற்கு மாற்றமாக எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான் ,உபை இப்னு ஃகலப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,அம்ருஇப்னு ஆஸ் (ரழி) நூல் : அஹ்மத்

Friday, March 15, 2013

ஆயிரம் நன்மை

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம்.அப்போது அவர்கள், " உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா ?'' என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர் ஒருவர் , " எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும் ? '' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை "சுப்ஹானல்லாஹ் ' என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : முஸ்லீம் 5230.

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்:-

உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில்
இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பித்த நீர்ச்சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். இது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.

Wednesday, March 13, 2013

News from Consulate General of India

Consulate General of India 
Jeddah
March 11, 2013
PRESS RELEASE

The Consulate General of India, Jeddah has been receiving queries from the Indian expatriate community in Saudi Arabia regarding media reports of a likely 'Amnesty' to be announced by the Government of the Kingdom of Saudi Arabia allowing expatriates, who have overstayed beyond their visa period, to exit the Kingdom without penal action. The Consulate General would like to clarify that it has not received any communication in this regard from the Government of the Kingdom of Saudi Arabia. The Consulate General would notify the expatriate community if any such notification is received. 

The Consulate General of India, Jeddah would like to further inform all Indian nationals in Saudi Arabia that the travel document (Emergency Certificate) issued during any Amnesty is meant  for one way return journey to India only. Those Indian nationals who posses valid passports need not apply for Emergency Certificate during the Amnesty.

Tuesday, March 12, 2013

அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்

அல்லாஹ்வை நினைவு கூறுவது எந்தச் சிரமத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று கூறினால் அந்த வார்த்தைகள் அதிக நன்மைகளைப்பெற்றுத் தருகின்றன. இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563.

நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்?

ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலமு அலைக்கும்[வரஹ்]

நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்? இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1525

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ
مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F]முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா

இதன் பொருள் :

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச்செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதைவிடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1525

போப் பெனடிக் XVI தூய இஸ்லாத்தை தழுவினார்

கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்!

சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI, தற்சமயம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான் உண்மையான ஒரே இறைவன்'' என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டதாக தெரிவித்தார் கிறிஸ்தவ உலகை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்செய்தி வேண்டுமென்றே ஊடகங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும் இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவ உலகின் வழிகாட்டியே இஸ்லாத்தைத் தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற மதத்தவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. கல்வியறிவு மிகைத்திருக்கும் இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கமாக இருக்க முடியும் என்பது தான் இறுதி முடிவாக இருக்க முடியும்.

இஸ்லாத்தைத் தழுவியபின் அவர் மக்களுக்கு அளித்த உரையின் இடையில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையை (அஸர் வக்த்) நிறைவேற்றினார். 'போப்' ஆக இருந்தபோது இஸ்லாத்தை தவறாக அவர் விமர்சித்தைதைப்பற்றி வினவியபோது, அப்பொழுது தான் சிறுவராகவும் அறியாதவராகவும் இருந்ததாகவும், தற்போது தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார். கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும் அமெரிக்க பத்திரிகைகள் (முன்னால்)போப் கிறிஸ்தவ உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்(!!!) என்று தங்களது வெறுப்பை உமிழ்ந்துள்ளன.

அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகிறன்னோ அவர்களை எவராலும் வழிதவறச் செய்துவிட முடியாது. சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி: Ramdam NET.Co. சகோதரன் .லுத்ஃபி.

Monday, March 11, 2013

சௌதி அரசாங்க பொதுமன்னிப்பு பற்றி


அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புள்ள சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. 

சில தினங்களுக்கு முன் சவுதி பத்திரிக்கைகளில் இந்திய வெளியுறவு அமைச்சரும், சவுதி வெளியுறவு அமைச்சரும் பேசி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதியில் ஒப்பந்த காலத்தை மீறி வேலை செய்துகொண்டிருக்கும் பணியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும், அப்படி இருப்பவர்கள், இந்திய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ அனுகுமாறு செய்தி வந்தது. அதனை தொடர்ந்து நமது மக்கள் வலைதளங்களிலும், முகநூல்களிலும், அதற்க்கான அவசர பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகளை இட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நம்மை பல ஊர்களில் இருந்தும் தொடர்புகொண்டு நாங்கள் வந்தால் உடன் தாயகம் திரும்ப முடியுமா என்று பலர் கேட்டுவருகின்றனர். இதனை உறுதி செய்ய ஜித்தாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை நாம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவர்கள் உங்களை போல் நாங்களும் அந்த செய்தியை பத்திரிக்கைகளில்தான் பார்த்தோம், இதுவரை அதிகாரப்பூர்வமான் எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை, அப்படி வந்தால் உடன் செய்து தருகின்றோம், இப்பொழுதைக்கு அதுபோன்று எதுவும் எங்களால் செய்யமுடியாது என்று கூறியதுடன் இதனை மக்களிடம் இதை கொண்டு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். 

எனவே இந்த செய்திகளை நம்பி யாரும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். பின்பு இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் உடன் தெரியப்படுத்துகின்றோம். அல்லாஹ் போதுமானவன்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Sunday, March 10, 2013

ATM கொள்ளையை தவிர்க்க

நீங்கள் இந்திய ATM செண்டரில் பணம் எடுக்கும்போது கயவர்கள் உங்களை அதிகம் பணம் எடுத்து தரும்படி மிரட்டினால் உடன் நீங்கள் செய்யவேண்டியது. உங்களின் ரகசிய திறப்பு எண்ணை தலைகீழாக அழுத்தவேண்டும். உதாரணத்திற்க்கு உங்களது ரகசிய திறப்பு எண் 1234 என்று வைத்துக்கொள்வோம், அதனை நீங்கள் 4321 என்று அழுத்தவேண்டும். அப்படி செய்யும்போது பணம் வரும், ஆனால முழுவதும் வராமல் பாதியில் எடுக்கமுடியாத அளவு சிக்கி நின்றுவிடும், உடன் தானே தகவல் காவல் நிலையத்திற்க்கு சென்று திருடனை காட்டி கொடுத்துவிடும். அனைத்து ATM நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அறிவதுடன் பிறர்க்கும் பகிரவும்.

Saturday, March 9, 2013

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க 
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய 
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய 
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – 
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க 
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

நம்மால் இதை விடவே முடியாதா ?

கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு, எரிச்சல், சோர்வு, தலைவலி, பார்வைக் கோளாறு... இவையெல்லாம் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அறிகுறிகள். நிலத்தில் பாடுபடும் விவசாயி கூட நிலத்தைவிட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம். ஆனால் கம்ப்யூட்டரை நாம் விடவே முடியாது போலிருக்கிறது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதை விட மோசமானது, கண்களைக் கெடுத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது. கண்ணும் கெடாமல், கம்ப்யூட்டரையும் விடாமல் இருக்க என்ன செய்வது? 

* மானிட்டரை உங்கள் முகத்திலிருந்து 20 அங்குல தூரத்துக்கு அப்பால் வையுங்கள். மானிட்டர் 20 டிகிரி சாய்வாக இருக்கட்டும். 

* ஜன்னல் பக்கத்தில் மானிட்டர் இருந்தால் வெளி வெளிச்சமும், கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சமும் கண்களைக் கூச வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

* கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடும். எனவே அவ்வப்போது கண்களை மூடித் திறங்கள். 

* 20 - 20 - 20 விதியைக் கடைப்பிடியுங்கள். அதாவது 20 அங்குல தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும். 20 நிமிடத்துக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்காமல் 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 

* எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாஸ்ட் ஃபுட்டை ஒரு பிடி பிடிக்காமல், கண்களுக்கு வளம் சேர்க்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.

மாரடைப்பு: ஆண்களுக்கு அறிகுறிகள் என்ன?

பொதுவாக மருத்துவப் பரிசோதனைகள் நம் உடலில் தோன்றும் ஆரம்ப அறிகுறிகளிலிருந்தே தொடங்குகிறது. உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை மூலம் நலக் குறைவை நம் உடல் உணர்த்துகிறது. இந்த ஆரம்ப அறிகுறிகள் நோயின் தன்மையைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. 

உதாரணமாக ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலியிருக்கும்; ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், அவருக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். எனவே, ஒருவரின் வலியைப் பொருத்து நோயின் தீவிரத்தைக் கணிக்க முடியாது. எனவே, மருத்துவப் பரிசோதனையின் போது உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மிகச் சரியாக டாக்டரிடம் கூற வேண்டும். அதாவது உடல் உறுப்புகளில் எங்கிருந்து வலி ஆரம்பமாகிறது, அது மற்ற பாகங்களுக்குப் பரவுகிறதா அல்லது குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் உள்ளதா, ஓய்வின்போது வலி குறைகிறதா, இரவு-பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். 

மாரடைப்பு என்றால் என்ன? ஒவ்வொரு இதய நோயும் மாறுபட்ட அறிகுறிகளை உடையது. மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை எப்படி அறிவது? மாரடைப்பு என்பது இதயத் தசைகள் இறந்து சிதைவுறுதலாகும். இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்:- 

1. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; 
2. அதிக வியர்வை; 
3. நெஞ்சு இறுக்கம்; 
4. மூச்சுத் திணறல்; 
5. இடது தோள்பட்டை, கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல். 

ஆண்களுக்கு பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும். பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி, வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றும். "ஆஞ்சைனா பெக்டோரிஸ்' (இதயத் தமனி நோய்) இதய தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படுகிறது. அதிக வேலை, மன அழுத்தம், மன அதிர்ச்சியின்போது பெரும்பாலானவர்களுக்கு லேசான நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கம் தோன்றி சரியாகிவிடும். "வாசோஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா': இந்த நிலை இதயத் தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் தோன்றும். இதனால் இரவு நேரங்களில் இதயம் படபடப்புடன் இயங்கி தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. உங்கள் அறிகுறிகளை தெளிவாகக் கேட்ட பிறகு, மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகளைச் செய்து நோயின் விவரங்களை அறிவார். அவை:- 

1. நகங்கள், நாக்குகளில் ஆக்ஸிஜன் குறைந்து நீலம் பாயந்திருக்கிறதா? 
2. கை, கணுக்கால்களில் வீக்கம் உள்ளதா? 
3. நாடித்துடிப்பு நிலை கண்டறிதல்; 
4. இதயத் துடிப்பின் வேகம், எண்ணிக்கையை ஸ்டெதஸ்கோப் மூலம் கண்டறிதல்; 
5. "மர்மர்' - இதய ரத்த ஓட்ட தடையினால் ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டத்தில் இரைச்சல் கேட்கும் நிலையை அறிதல். 

இவை தவிர, மேலும் சில மருத்துவப் பரிசோதனைகளை இதய நோயின் பாதிப்பு இருக்கிறதா என் அறிய செய்ய வேண்டியிருக்கும்.இதயப் பிரச்னைகளை அறிய செய்யப்படும் பரிசோதனைகளான "எக்கோ', "ஆஞ்சியோகார்டோகிராம்' ஆகியவை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் வலியில்லாமல், ஊசிகூட துளைக்காமல் செய்யப்படுகிறது.

Friday, March 8, 2013

பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். 

பொதுவாக பற்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால், பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது. 

ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப்பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது. 

உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்றுதான் சீஸ். சீஸை சாப்பிடும் போது, அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது. அனைவருக்குமே சாக்லேட் மிகவும் பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.

எய்ட்சை விட அபாயகரமானது

நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம், வயிறு உப்புசம் என, தற்காலத்தில் அடிக்கடி அனைவருக்கும் ஏற்படுகிறது. இது, மேற்கத்திய நாடுகளில் மட்டுமேதான், முன்பு இருந்தது. மேற்கத்திய பாணி வாழ்க்கையை நாம் பின்பற்ற ஆரம்பித்தவுடன், இந்தக் கோளாறு நம்மை தொற்றிக் கொண்டுவிட்டது.  பள்ளி செல்லும் குழந்தைகள் கூட, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பதும், சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவதும், "டிவி' பார்த்துவிட்டு இரவு தாமதமாகத் தூங்குவதும், அடிக்கடி மன அழுத்தம், டென்ஷன் என இருப்பதும், நெஞ்சு எரிச்சல் ஏற்படக் காரணம்.பெரும்பாலான மக்களுக்கு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், மலம் இளகிப் போகுதல், மலத்துடன் சளி போன்று வருதல், அடிவயிறு வலித்துக் கொண்டே இருப்பது, சரியாக மலம் வெளியேறாமல் இருப்பது ஆகிய உபாதைகள் உள்ளன. இவையெல்லாம் ஐ.பி.எஸ்., நோய்க்கான அறிகுறி. இவை, நாம் சரியான வாழ்க்கை முறையுடன் வாழாததால் வந்த விளைவு.தினமும் உடற்பயிற்சி செய்பவர்களின் உடல் எடை போடாமல், வயிறு லேசாக இருக்கும். தினமும், அனைத்து வயதினரும் கட்டாய உடற்பயிற்சி செய்ய வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடுவதை விட, ஒரு நாளைக்கு ஐந்து வேளைகளாக, சிறிது சிறிதாக உணவைப் பிரித்து உண்பது சிறந்தது. காய்கறிகளும், பழங்களும் நம் உணவில் கட்டாய அங்கத்தினர்களாக இருக்க வேண்டும். அருந்தும் நீரில் சிக்கனம் கூடாது. நல்ல உறக்கம், சீரண மண்டலம் துவங்கி, அனைத்து உடல் உறுப்புகளும் சிறப்பாகச் செயல்பட உதவும்.

அடுத்து, பலரும் அறியாதது, "ஹெப்படிட்டிஸ் பி, ஹெப்படிட்டிஸ் சி' வைரஸ்களால் வரும் பாதிப்புகள்.சரியாக, சுத்தப்படுத்தாத ஊசியின் மூலமாகவோ, ஏற்கனவே தொற்று உள்ள ரத்தம், நம் உடலில் ஏற்றப்படுவதாலோ, சில சமயம் சின்ன வயதில் காது குத்தும் போதோ அல்லது முடி இறக்கும் போதோ இந்த தொற்று, நம் ரத்தத்தில் கலந்து, நம் கல்லீரலில் புகுந்து, நாளடைவில் அரிக்க ஆரம்பித்துவிடும் அபாயம் வரும். எய்ட்சை விட அபாயகரமானது இது.

Thursday, March 7, 2013

தீவிரவாதம் குறித்த செய்திகளில்எச்சரிக்கை தேவை: ஊடகங்களுக்கு காட்ஜு அறிவுரை! ! ! !


தீவிரவாதம் குறித்த செய்திகளை வெளியிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய காட்ஜூ ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தீவிரவாத மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழும் போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படும் வகையில்செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என காட்ஜூ கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் தேசிய கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தமக்கு எழுதிய கடிதத்தில், ஐதராபாத் வெடிகுண்டு தாக்குதலில் யூகத்தின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள காட்ஜூ, இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு வருவது பற்றியும்,இதனால் இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது என்றும்சச்சார் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தீவிரவாதம் குறித்தசெய்திகளை வெளியிடும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படும் படி செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்து நிலவுவதால் காவல்துறையினரும் எந்த ஒரு தாக்குதல் நடைபெற்றாலும், உரிய விசாரணை செய்யாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து வருகின்றனர் எனவும் காட்ஜூ கூறியுள்ளார்.

போப் ஆண்டவர் ராஜினாமா: - மறைக்கப்பட்ட உண்மைகள்!

கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர்என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர். போப் ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெண்டிக்ட், தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி
28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து 28ஆம் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போப் ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பாகும். அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக் கொம்புதான். இதற்கு முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர் பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக தற்போதும் திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம் பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப்: இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட .....

மேலும் அறிய....

Tuesday, March 5, 2013

அருள் மறையில் அறிவியல்

இறை வேதம் என்பதற்கான அறிவியல் சான்றுகள்:-

1 - பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது - 2:22, 21:32, 40:64, 52:5

2 - பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு - 86:11

3 - மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன - 4:56

4 - விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் - 6:125

5 - பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும் - 2:36, 7:24, 7:25

6 - ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம் - 16:79, 67:19

7 -விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது - 17:37

8 - பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90

9 - பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6

10 - பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30

11 - கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14

12 - நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18

13 - கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது - 25:53, 27:61, 35:12 55:19,20

14 - காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12

15 - வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41,13:2, 31:10, 22:65


16 - பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40

17 - பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11.

18 - மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன - 6:98, 50:4, 71:17

19 - விண்வெளிப் பயணம் சாத்தியமே - 55:33-35

20 - விரல்ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4

21 - உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2

22 - தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது - 16:69

23 - கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன - 24:40

24 - அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும் - 13:8

25 - பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்தான் உள்ளன - 96:15

26 - காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் - 51:41,42

27 - கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32

28 - விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7

29 - வான்வெளியிலும் பாதைகள் உண்டு - 51:7

30 - பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது - 13:2, 31:10

31 - சூரியனும் கோள்களும் ஓடுகின்றன - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5

32 - சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2

33 - வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது - 51:47

34 - உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49

35 - உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் - 13:41, 21:44


36 - வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43

37 - அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் - 105:1-5, 11:82, 15:74,26:173, 27:58, 51:32

38 - "இருள்கள்' என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது. - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11

39 - பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு- 2:259

40 - குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50

41 - ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42

42 - இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது - 57:25

43 - படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32

44 - பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துதல். - 41:9,10

45 - நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66

46 - மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31

47 - வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள்தான் என்று அறிவித்தது - 9:36

48 - கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153

49 - மரபணுக்கள் வழிவழியாக தொடரும் - 7:172

50 - சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரிலேடிவிடி (Relativity) எனும் சார்பியல் கோட்பாடு - 22:47, 32:5

51 - மனிதன் குரங்கில் இருந்து படைக்கப்படவில்லை - 2:30, 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14

52 - மனிதர்களை மூக்கு தான் சரியாக அடையாளம் காட்டும் - 68:16

53 - பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்பதை துரப்பணக் கருவிகள் இல்லாத காலத்தில் கூறிய திருக்குர்ஆன் - 65:12

54 - தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது - 19:24

55 - குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே - 75:39 


மாஷா அல்லாஹ். சொன்னவைகளும், அறிந்தைவைகளும் சொற்பமே, சொல்லாதவைகளையும், அறியாதவைகளையும் அறிய வைப்பவனாக அல்லாவ்ஹே இருக்கின்றான்.

Wednesday, February 27, 2013

தெரிந்து கொள்வோம் வாங்க

* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக்கையால் எழுதி நகல் எடுத்தார்களாம். 

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் 

"நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில். 

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார். 

* தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785-ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கொரியர்' என்னும் வார இதழ் தான். இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜான்சன். 

* 1841-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ். 

* இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை "சுக்ரினி'. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப் பெண். 

* இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1854 மே 6-ம் தேதி. அன்றைய கமிஷனர் பென்னி பிளாக் என்பவரால் வெளியிடப்பட்டது. 

*எவரெஸ்ட் சிகரத்திற்கு 1865-ம் ஆண்டில் தான் அப்பெயர் வந்தது. அதற்கு முன்பு சிகரம்-15 என்னும் பெயர் தான் வழங்கப்பட்டது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த நேரம், இந்தியாவில் எவரெஸ்ட் என்பவர் சர்வேயர் ஜெனரலாக இருந்தார். அவர் இமயமலைத் தொடரில் உள்ள சிகரங்களுள் சிகரம்-15 தான் உயரமான சிகரம் எனக் கண்டறிந்தார். அதனால், அவர் பெயரையே அந்த சிகரத்திற்கு சூட்டிவிட்டனர் 

* ஒரு புற்றிலுள்ள எறும்பு அடுத்த புற்றில் நுழைவதில்லை.
   தலை துண்டிக்கப்பட்டாலும் எறும்புகள் 20 நாட்கள் உயிருடன் இருக்குமாம். 
   வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து 106 நாட்கள் வரை உயிர் வாழுமாம். 
   ஒரு வாரம் வரை நீருக்கடியில் உயிருடன் வாழும். 

* சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் உள்ளது. 

* கி.மு.13-ம் நூற்றாண்டிலேயே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

* உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் 

*சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது? -ஆர்தர் ஹெய்ன்மென் (1925-ம் ஆண்டு) 

*நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன் 

*உலகின் மிகப் பழமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது? -ஹோசி ரியாகோன், ஜப்பான். 

*தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர்? -ஹோவர்ட் ஹக்ஸ் 

*உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி? -பர்ஜ் அல்-அராப் 

*அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி எந்த நகரில் உள்ளது?  பர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்(அமெரிக்கா) 

*அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்? -அரிஸ் டவர்ஸ் 

*உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம் ? -எல் புல்லி (ஸ்பெயின்) 

*அமெரிக்காவிலேயே முதலிடத்தில் இருக்கும் உணவகம்?-பெர் சி 

*தி பேட் டக் என்பது எந்த நாட்டின் பிரபல உணவகம்? -இங்கிலாந்து 

*பாஸ்தா என்பது எந்த நாட்டின் பிரபல உணவு? - இத்தாலி. 

*சால்சா என்ற உணவு எந்த நாட்டில் மிகவும் பிரபலமானது? -மெக்சிகோ 

*தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது? -இட்லி 

*காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர்? -ஸ்பெயின்