Showing posts with label மாநில தலைமை செய்தி. Show all posts
Showing posts with label மாநில தலைமை செய்தி. Show all posts

Monday, August 6, 2018

புதிய தலைமை நிர்வாகிகள்

On Mon, Aug 6, 2018, 12:17 PM Jamal Gafoor <jamalgafoor@gmail.com> wrote:
சுற்றறிக்கை: 339/2018
தேதி:5.8/2018

புதிய மாநில நிர்வாகம் தேர்வு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோடு பிளாட்டினம் மஹாலில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேலான்மைக்குழு தலைவர் k.m.அப்துந் நாசர் தலைமையில் துவங்கியது. 

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : ஷம்சுல்லுஹா ரஹ்மானி

பொது செயலாளர் : E.முஹம்மது

பொருளாளர் : காஞ்சி சித்திக்

து.தலைவர் : பா.அப்துல் ரஹ்மான்

து.பொ. செயலாளர் : மயிலை அப்துல் ரஹீம்

மாநிலச் செயலாளர்கள்:

1- அப்துல் கரீம் 
2- பெங்களூர் கனி
3- ஆவடி இபுராகிம் 
4-  E.பாரூக்
5- நெல்லை யூசுப் அலி
6- திருச்சி சையது 
7- கோவை அப்பாஸ் 
8- செங்கோட்டை பைசல் 
9- காஞ்சி இப்ராகிம் 
10- வட சென்னை அன்சாரி 
11- தரமணி யாசீர்
12- தாவுத் கைசர் 
13- தஞ்சை முஜிப் ரஹ்மான்
14- CV. இம்ரான்
15- நெல்லை செய்யத் அலி

தணிக்கை குழு உறுப்பினர் : 
பனைக்குளம் அப்துல் ஹமீது

மேலாண்மை குழு உறுப்பினர் : கோவை அப்துல் ரஹீம்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் க்காக
மாநில பொதுச்செயலாளர்
இ.முஹம்மது

Wednesday, January 16, 2013

சென்னை புத்தகக் கண்காட்சியில் களை கட்டும் அழைப்புப்பணி!


   வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த புத்தகக் கண்காட்சியில் சென்ற ஆண்டு 8 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், அதுவும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மக்கள் கூடும் இடங்களில் தூய இஸ்லாத்தை எடுத்து வைத்தால் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கம் செவ்வனே சென்றடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மூன் பப்ளிகேஷன் என்ற பெயரில் புக் ஸ்டால்கள் பதிவு செய்யப்பட்டன. 

 ஜனவரி 11 முதல் 23 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் மூன்பப்ளிகேஷனின் புக் ஸ்டால் எண் 270, 271 

 இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துச் சொல்லக்கூடிய புத்தகங்கள், இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தும் நூல்கள், ஆகிய அனைத்து ஏகத்துவ நூல்களும் 10% கழிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

 கண்காட்சியில் நமது ஸ்டாலுக்கு வரக்கூடிய பிறமத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்தியம்பக்கூடிய புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இஸ்லாமிய மார்க்கமும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது. அதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள டிஎன்டிஜேயின் பிரச்சாரகர்கள் இந்தப்பணியை செவ்வனே செய்து வருகின்றனர். 

 நமது ஸ்டால் முழுவதும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லக்கூடிய திருக்குர்ஆன், நபிமொழி வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மூலமும் அழைப்புப்பணி நடக்கின்றது. 

 பீஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கம் பிறமத சகோதரர்களுக்காக 150 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றது. 1592 பக்கங்களுடன் கூடிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 11வது பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.350 ஆகும். பிறமத மக்கள் மத்தியில் திருக்குர் ஆன் தமிழாக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் மீதத்தொகைக்கு டிஎன்டிஜே ரியாத் மண்டலம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 

 இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கொண்டு செல்லும் வண்ணமாக புத்தகக் கண்காட்சிக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் இஸ்லாம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் கிடைக்கும் வகையில் டிஎன்டிஜேயின் தென்சென்னை மாவட்ட கிளைகள் மூலம் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 

 துண்டுப்பிரசுரத்திற்கான செலவை டிஎன்டிஜே ஜித்தா மண்டலம் ஏற்றுள்ளது. 

 வார நாட்களில் மதியம் 2.30மணி முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11மணி முதல் இரவு 9மணி வரையிலும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நீங்கள் உங்களது பிறமத சகோதரர்களை அழைத்து வருவதுடன், அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல உங்களையும் டிஎன்டிஜே அன்புடன் அழைக்கின்றது. 

 குறிப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் அமைக்க கண்காட்சி அமைப்பாளர்கள் ஒப்புக் கொள்ளாததால், டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் சார்பாக 'மூன் பப்ளிகேஷன்' பெயரில் ஸ்டால் அமைக்கப்பட்டு அழைப்புப்பணி செவ்வனே நடைபெற்று வருகின்றது.

Tuesday, January 8, 2013

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!


காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 12:01
http://www.tntj.net/125532.html

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொது செயலாளர்

Tuesday, January 1, 2013

சிறை நிரப்பும் போராட்டம் ஒரு வாரம் தள்ளிவைப்பு







بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
 
சிறை நிரப்பும் போராட்டம் ஒரு வாரம் தள்ளிவைப்பு
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 17:07
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார் கிளைத் தலைவர் யாகூப் அவர்களை வீடு புகுந்து கைது செய்து, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், அன்று மாலை 4 மணிக்கு இதற்கு நியாயம் கேட்க அணி திரண்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதற்கு காரணமாக இருந்த துணை ஆணையாளர் கிரி மற்றும் உதவி ஆணையாளர்கள் செந்தில் குமரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்வரும் 03.01.2013 வியாழன் அன்று ஒரு லட்சம்பேர் பங்கு பெறும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  

காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாநில நிர்வாகிகளிடம் ஒரு வாரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததை ஏற்று இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10.01.2013 வியாழன் அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநித் தலைமையகம், சென்னை

Wednesday, December 26, 2012

அவசர தந்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
 
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 25, 2012, 11:43
பின் வரும் வாசகம் அடங்கிய அவசர தந்தியை அனைவரும் இதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்

Please take action against Chennai Triplicane Assistant commissioner of police Senthil Kumaran and Chintadripet D.C Mr.Giri who unlawfully enter Muslim's houses in midnight and abuse the Muslim women and arrested innocent Muslims, also lathicharge against the Muslims who condemn this criminal offense of the police

முதலமைச்சர் முகவரி  :
Chief Minister's Special Cell
Secretariat, Chennai 600 009
E-mail : cmcell@tn.gov.in
FAX : 044- 25676929

கவர்னர்
Dr. K. Rosaiah
Governor  of  Tamil Nadu
Raj Bhavan, Chennai – 600 022
Fax : +91-44-22350570
E-mail : govsec@tn.nic.in

தலைமை செயலாளர் : Chief Secretary
Thiru Debendranath Sarangi IAS
Chief Secretary to Govt
Secretariat, Chennai – 600 009
Fax     : 044-25672304
E-Mail : cs@tn.gov.in

உள்துறைச் செயலர் : Home Secretary
Thiru R Rajagopal IAS
Principal Secretary to Government,
Secretariat, Chennai – 600 009
Email :     homesec@tn.gov.in
Fax : 044- 25670596

டிஜிபி
Mr. K. Ramanujam, IPS
Director General of Police
Chief Office, Dr. Radha Krishnan Salai, Chennai – 600 004.
E-mail : phq@tn.nic.in
FAX 044-28447703e
 
http://www.tntj.net/122377.html


Monday, December 24, 2012

29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
                              தலைமைகழக செய்தி 

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)


 பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.





விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்



வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்



நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்



முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்





   
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும். பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார். இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்


காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.



அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்



29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Sunday, December 23, 2012

வன்மையாக கண்டிக்கின்றோம்


வன்மையாகக் கண்டிக்கிறோம்!

சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம் பெண்களை தரக்குறைவாக பேசி, அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததோடு, நியாயம் கேட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் காட்டிமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஜித்தா மண்டலம்.

Tuesday, November 27, 2012

TNTJ Vs கிறுஸ்துவர்கள் விவாதம் நேரடி ஒளிபரப்பு

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ


விவாதம் நேரடி ஒளிபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள கிறித்தவர்களுடனான விவாதம் - நேரடி ஒளிபரப்பு 

நாள் : இன்ஷா அல்லாஹ் 28.11.12 - புதன் கிழமை 

தலைப்பு : 
திருக்குர்-ஆன் இறைவேதமாநேரம் : காலை 9மணி முதல் மதியம் 1.30 வரை 
பைபிள் இறைவேதமாநேரம் : மதியம் 4.30 முதல் இரவு 9மணி வரை

Wednesday, November 21, 2012

இந்த வார 17-13 உணர்வு இதழில்


இந்த வார 17-13 உணர்வு இதழில்…

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, November 21, 2012, 12:15
உணர்வின் யோசனையை செயல்படுத்திய தமிழக அரசு!
ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகம்
பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப் பார்வையும்
ஈரோட்டில் காவிகளுக்குத் துணைபோன காவல்துறை! – களமிறங்கிய டிஎன்டிஜே!
பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திரா நினைவு குடியுருப்பு வீடுகள் முஸ்லிம்களுக்கு கிடைக்காதது ஏன்?
அசாமில் மீண்டும் 6 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை போடோ தீவிரவாதிகள் அட்டகாசம்
கருவியல் – பாகம் 19
பதில்கள் – முஸ்லிம்களை சீண்டும் கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி?
தீபாவளியால் ஓசோன் பாதிப்பு
இஸ்லாத்தை ஏற்க வழிவகுத்த மனித நேயப்பணி! – (தபூக் தாவா)
பிலிப்பைன்ஸ் மொழியில் தாவா – (தபூக் தாவா)
கடலூர் மாவட்டத்தில் வீரியம் பெறும் அழைப்புப்பணி! – 900 டிவிடிக்கள் விநியோகம்!!
காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு!
துப்பாக்கி படம் பற்றி….. முரளிகண்ணன் என்ற சகோதரர் எழுதியவை
தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம்: ரம்ஜான், பக்ரீத் பண்டிகைக்கு மின் வெட்டா?
ரேஷன் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்: மத்திய அரசின் புதுத் திட்டம்
ஆஸ்திரேலியா சர்ச்சுகளில் சிறுமிகள் பாலியல் பலத்காரம்: விசாரணைக்கு உத்தரவு!
நியாய விலைக் கடை விற்பனையாளர் வேலைக்கு ஆட்கள் தேவை
முஸ்லிம் பள்ளி மாணவிகள் தீபாவளி கொண்டாடினார்களா? – ஒரு விளக்கம்
ஆலிம் என்று சொல்லி சேட்டை செய்த மோசடி மன்னன்! – கையும் களவுமாகப் பிடித்த டிஎன்டிஜே!
காவி பயங்கரவாதிகளைக் கலங்க வைத்த காரைக்குடி பொதுக்கூட்டம்!

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து முற்றுகைப் போராட்டம்


முற்றுகைப் போராட்டம் வாபஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, November 22, 2012, 14:34
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் TNTJ அறிவித்த 24-11-2012 ஆளுனர் மாளிகை  முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, November 20, 2012, 15:27
முற்றுகை போராட்டம்
பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களை குண்டு வீசி கொன்றொழிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலின் உடனான தூதரக உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வலியுறுத்தியும்
ஆளுநர் மாளிகை முற்றுகை
இன்ஷா அல்லாஹ்
கண்டன உரை : பீஜே
நாள் : 24.11.12 – சனிக்கிழமை
நேரம் : காலை 11 மணி
இடம் : பனகல் மாளிகை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில்.
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Wednesday, October 24, 2012

ஹஜ்ஜுப் பெருநாள் உரை நேரடி ஒளிபரப்பு


ஹஜ்ஜுப் பெருநாள் உரை நேரடி ஒளிபரப்பு

வரக்கூடிய 27.10.12 - சனிக்கிழமை அன்று காலை 8மணிக்கு சென்னை - இம்பீரியல் சிராஜ் மஹாலில் நபி வழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற உள்ளது

இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்த உள்ளார்கள்
ஹஜ்ஜுப் பெருநாள் உரை நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

இன்ஷா அல்லாஹ்..... 
http://www.onlinepj.com/

Saturday, October 20, 2012

வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 

வெளிவந்துவிட்டது

Take a Look  http://video.onlinepj.com/


வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.
 
குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.
 
ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரைகாத்திருக்க தேவையில்லை.

இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube  ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.
 
 
பார்த்து விட்டுவீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்
 
-
வெப்மாஸ்டர்

Friday, October 19, 2012

TNTJ மாநில தலைமை கடிதம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குரிய மருத்துவம் குறித்து அவர்கள் மீதுள்ள அன்பினாலும், அக்கரையினாலும் பலர் ஏரளாமான ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அக்கு பிரஷர், அக்கு பஞ்சர், ஹேமியோபதி, ஆயுர்வேதா, சித்தா, யூனானி, அலோபதி, திபத்திய மருத்துவம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான மருத்துவ முறைகள் வரை ஆலோசனைகள் வந்தவண்ணம் உள்ளன.  இந்தியாவின் பல்வேறு குக்கிராமங்களில் உள்ள வைத்தியர்களிலிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உட்பட பல வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்கள் வரை பல பரிந்துரைகள் வந்துள்ளன.  பலர் தமக்கு தெரிந்த மருத்துவர்களிடம் சந்திக்க நேரம் வாங்கி வந்துள்ளனர். சிலரிடமிருந்து மருந்துகளும் லேகியங்களும் வந்துள்ளன. சகோதரர் பி.ஜே அவர்கள மருத்துவம் குறித்து மாநில நிர்வாகம் என்ன முடிவு செய்திருக்கிறது என்று பலரும் கேட்டவாறு உள்ளனர். 
எவ்வகை மருத்துவம் செய்வது என்பதை சகோதரர் பி.ஜே. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவம் தொடர்பாக வரும் தகவல்களை திரட்டி அவர்களுக்கு தெரியப்படுத்துவதும் உறுதுணையாக இருப்பது நிர்வாகத்தின் கடமையாகும். இந்த அடிப்படையில் அவர்களுக்கு வந்த தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவை பரீசீலிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்திற்கு பலகோடி ரூபாய் செலவாகும் என்பது போன்று மக்களில் பலர் கருதுவதாக தெரிகிறது. ஆனால் இந்த வகை கேன்சருக்கான மருத்துச் செலவு சகோதரர் பி.ஜே. அவர்களின் சக்தி உட்பட்ட அளவே உள்ளது. எது எப்படி இருந்தாலும் எந்நிலையிலும் அவர், எப்போதும் போல் யாருடைய உதவியையும் ஏற்க தயாராக இல்லை. ஆகவே பொருளாதாரம் பற்றி கொள்கை சகோதரர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். வழக்கம் போல் உங்கள் து.ஆ க்களை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லாஹ் ,
பொதுச்செயலாளர்,
19.10.2012

Wednesday, October 10, 2012

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..


மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, October 10, 2012, 14:19
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும், ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. 

நீங்கள் அனைவரும், சகோ. பி.ஜெ அவர்களின் உடல் நலம் பெற்று மீண்டும் மார்க்க அழைப்பு பணியை தொடர்ந்து செய்ய து.ஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்.