Friday, December 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய சகோ. கோபால்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 13/12/2012 வியாழன் அன்று  தபூக் கிங் ஃபஹத் மருத்துவமனையில் (King Fahad Hospital) ஓட்டுனராக பணிபுரியும் உத்திரப்பிரதேஷ்கோராப்பூரைச் சேர்ந்த சகோகோபால் அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.  எல்லா புகழும் அல்லாஹ்விற்க்கே. அவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் பற்றி ஹிந்தி மொழியில் விளக்கி கூறி, கலீமா சொல்லிக் கொடுத்தார். மேலும் அவர் தனது பெயரை சிராஜ்தீன் என்றும் மாற்றி கொண்டார்.இறுதியில் அவருக்கு ஹிந்தி மொழியிலான முக்கிய 15 நூல்களையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment