Sunday, April 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டவர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தா மண்டலம்  தபூக்  கிளையில்  14/04/2012  சனி அன்று பிலிப்பைன்ஸ் - லகூனாவைச்  சேர்ந்த  TABUK SAUDI VEHICLE ANNUAL INSPECTION UNITல் பணிபுரியும் சகோ. ரய்மோன் டினோரியோ  (RAYMOND TENORIO) வயது  26  அவர்கள்  சத்திய  மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தூய இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும்பைபிலில் கிறுத்துவ பாதிரிமார்களின் சித்து விளையாட்டுக்களையும்  ஆதார பூர்வமாக விளக்கி கூறி கலீமா சொல்லிக் கொடுத்தார்கள்.

 

சகோ.ரய்மோன்  டினோரியோ அவர் தனது பெயரை  அப்துல் மாலிக்  என்றும் மாற்றிக்கொண்டார். இவருக்கு கிளை செயலாளர் சகோ. நிஜாம்  அவர்கள், சகோ. P.J  அவர்களின் ஆங்கில நூல்களையும் மற்றும் பல  இஸ்லாமிய  ஆங்கில  நூல்களையும்ஆங்கில திருக்குர் ஆனையும்  வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

"அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழி காட்ட நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். (திருக்குர்ஆன்: 6:125)...

No comments:

Post a Comment