Friday, April 6, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர செயற்குழு கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் மாதாந்திர செயற் குழு கூட்டம் கடந்த 05/04/2012 வியாழன் அன்று இரவு 11 மணியளவில் கிளை செயலாளர் நிஜாம் தலைமையில் நடைபெற்றது.
கிளை செயலாளர் நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்குகளையும், மாநில தலைமை கட்டிட நிதி ரூ 75000 வசூலிக்கப்பட்ட கணக்கையும், மண்டலத்திலிருந்து பெறப்பட்ட ரூ 75000 திற்கான ரசீதையும்: கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டினார்கள். பின்னர் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவருடைய கருத்துக்கள், ஆலோசனைகள் அனைத்தையும் பரிசீலிக்கப்பட்டனஇறுதியாக கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் "நிர்வாகம்" என்ற தலைப்பில், நமது கிளையின் நிர்வாக அமைப்பு பணிகள் எவ்வாறு எல்லாம் அமைய வேண்டும் என்றும், நமது ஆளுமை திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதையும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.  மேலும் தபூக் கிளையின் செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், தனி நபர் அழைப்பு பணிகள், பிற மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு பணிகள் இன்னும் வீரியமாக அமைய தேவையான ஆலோசனைகளையும் கொள்கை சகோதரர்களுக்கு வழங்கினார்இந்த செயற்குழுவில் தபூக் பகுதியைசேர்ந்த கொள்கை சகோதரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது புத்துணர்ச்சியுடன் கலைந்து சென்றனர்அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment