Friday, April 6, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டின் தாயும், மகளும்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 06/04/2012 வெள்ளி அன்று பிலிப்பைன்ஸ் - மனிலாவைச் சேர்ந்த King Khalid Hospital லில் Dental Assistant டாக பணிபுரியும் மர்பிக் (தலையில் வெள்ளை துணி அணிந்திருப்பவர்) என்ற சகோதரியும், அவரது 2வயது மகள் - மறியும் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்அல்ஹம்துலில்லாஹ்.  அவர் தனது பெயரை அஸ்மா என்றும் அவருடைய மகளுக்கு அஸ்பின் என்றும் மாற்றிக்கொண்டனர்.  இவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் துணைவியார் சுமையாஹ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கி கூறி கலீமாவை சொல்லிக் கொடுத்ததுடன் சகோ. P.J  அவர்களின் ஆங்கில நூல்களையும் மற்றும் பல இஸ்லாமிய ஆங்கில நூல்களையும், ஆங்கில திருக்குர்ஆனையும் வழங்கினார்கள். அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.



No comments:

Post a Comment