Sunday, April 29, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் நிகாத் அரப் நிறுவனத்தின் தங்குமிடத்தில், கடந்த 27-04-2012 வெள்ளி அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் பலர் தமக்காக உறுப்பினர் அட்டை விண்ணப்பித்து படிவம் நிரப்பி அளித்தாரக்ள். இன்ஷா அல்லாஹ் வரும் வாரமும் இம்முகாம் நடைபெற உள்ளது. அல்ஹமதுலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையினால் கடந்த 27-4-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையின் சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. செய்யது முஸ்தபா "அல்லாஹ்வின் அருட்கொடைகள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மாற்று மதத்தவர் அழைப்பு பணி

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸிற்க்கு கடந்த  26/04/2012  வியாழன் அன்று மனிதாபிமான உதவி தேடி விழுப்புரம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் வந்தனர். இவர்கள்  கடந்த  பத்து ஆண்டுகளாக தபூக் பலதியா கம்பெனியில் சாலை துப்புரவாளர்களாக பணிபுரிபவர்கள். இவர்களுக்கு இவர்களுடைய கம்பெனி கடந்த ஐந்து ஆண்டுகளாக IQAMA எனும் அடையாள அட்டையை ரினிவல் செய்யாமலும், இவர்களை தாயகத்திற்கு அனுப்பாமலும் மிகுந்த கொடுமை படுத்தியுள்ளது. எனவே இவர்கள் கடந்த  ஓராண்டு காலமாக வேலைக்கு செல்லாமல் தாயகம் செல்லவேண்டும் என்ற இலக்கோடு பல்வேறு முயற்ச்சிகளை செய்து உள்ளனர். ஆனால், எந்த பலனும் அவர்களுக்கு கிடைக்காமல் போகவே, இறுதியாக அவர்கள்  TNTJ தபூக் கிளை நிர்வாகிகளின் உதவி நாடி வந்தனர்.

 அவர்களை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும்கிளைச் செயலாளர் நிஜாம் அவர்களும் சகோதர வாஞ்சையுடன் வரவேற்றுஉபசரித்து ஆறுதல் கூறியதுடன், Jeddah Indian Consul S.D. Moorthy அவர்களை தொடர்புகொண்டு இவர்களின் அவங்களை எடுத்து கூறினார்கள்.

 

S.D. Moorthy அவர்களும்அவர்களுக்கு ஆறுதல் கூறி, உங்களது மனுவை சகோ. அப்துல் அஜீஸ் அவர்களிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள், விரைவில் நீங்கள் தாயகம் செல்வதற்கான ஏற்பாட்டை செய்கிறோம் என்றார்கள்.

 

மேலும் அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களும்கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்களும்  "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை" என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்துஅழகிய முறையில் இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள்.  மேலும் அவர்களுக்கு சகோ. P.J  அவர்களின் தர்ஜுமாவும், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை மற்றும் பல இஸ்லாமிய 15 நூல்களையும்.  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிறுஸ்தவர்களுடன் நடந்த விவாதம்பைபில் இறை வேதமாவிவாதம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள் ஆகிய தலைப்புகளின் 25  DVD  களையும் வழங்கி அவர்களுடைய கோரிக்கைகளை இன்ஷா அல்லாஹ்  விரைவில் முடித்து தருவதாக கூறி அனுப்பி வைத்தனர்அல்ஹம்துலில்லாஹ். 

Saturday, April 28, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை  மர்கஸில்  27/04/2012  வெள்ளி அன்று   ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றதுந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர்  சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் "எது வெற்றிஎதில் வெற்றிஎன்ற தலைப்பில் மறுமையின் வெற்றியே மகத்தான வெற்றிஉண்மையான வெற்றி என்பதை மிகத் தெளிவான முறையில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர்  சகோநிஜாம் அவர்கள் "நபிகளாரின் நற் குணங்கள்என்ற தலைப்பிலும்கிளை து.தலைவர்  சகோ. முஜாஹீத் அவர்கள்  "மார்க்கத்தின் எச்சரிக்கைஎன்ற தலைப்பிலும், சகோமுஹம்மது சாலிஹ் அவர்கள்  "திக்ர், துஆக்களின் சிறப்புகள்என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்ந்நிகழ்ச்சியில்  ஐந்து  பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன்மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 26/04/2012  வியாழன் அன்று இரவு 11.30முதல் 12.30 ணி வரை  வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள்  "வழிகெட்டக் கொள்கைகள்"( பகுதி-6) என்ற தலைப்பில் சகோ. P.J  அவர்களின்  உரையின்  வீடியோ  காட்சிகளுடன்குர்ஆன், ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில்  [கொள்கை சகோதரர்களுக்குஎடுத்துரைத்தார்கள்.  இதில்  தபூக்  கிளை  நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு,  பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது.    அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மஹாராஷ்ரா சந்திரகாந்த்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ ஜித்தா மண்டலம்  தபூக்  கிளையில்  26/04/2012  அன்று  Al-Nasban  கம்பெனியில் பணி புரியும் மஹாராஷ்ட்ரா  லாத்தூரைச் சேர்ந்த  சந்திரகாந்த் என்ற  சகோதரர்  சத்திய  மார்க்கம்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ்  அவர்கள்  இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை  [ஹிந்தி மொழியில்]  விளக்கி கூறி  கலீமாவையும் சொல்லிக் கொடுத்ததுடன் அவருக்கு தேவையான  ஐந்து ஹிந்தி இஸ்லாமிய   நூல்களையும்,  திருக்குர்ஆனையும்  வழங்கினார்.  அவர் தனது பெயரை முஹம்மது காலித்  என்றும் மாற்றிக் கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.


      


 

TNTJ ஜி்த்தா- கடையநல்லூர் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் கிளையின் கேம்ப் பயான் 27.03.2012 வெள்ளி அன்று வெள்ளி இரவில் உஸ்ஃபான் பகுதியில் மண்டல து.செயலாளர் சகோ.கௌஸ் முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ. அமீன் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படவேண்டும்" என்ற தலைப்பில் குர்ஆனிலிருந்து பல வசனங்களை ஆதாரம் காட்டி உரையாற்றினார்.மார்க்க சம்மந்தமான சில கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. கடையநல்லூர் கிளையின் பொறுப்பாளர் சகோ.அப்துல் பாசித் மற்றும் அப்பகுதியில் உள்ள பலர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ். 


TNTJ “தபூக்” கிளையில் இஸ்லாத்தை தழுவிய ஆந்திரா – பாலாஜி!!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தா மண்டலம்  தபூக்  கிளையில்  26/04/2012  வியாழன் அன்று  Al-Nasban  கம்பெனியில் பணிபுரியும் ஆந்திரா மாநிலம் பிராமன்சூரைச் சேர்ந்த பாலாஜி  என்ற சகோதரர் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை [ஹிந்தி மொழியில்] விளக்கி கூறி கலீமா சொல்லிக் கொடுத்ததுடன், [ஹிந்தி,தெலுங்கு மொழியில்] அவருக்கு தேவையான 5 இஸ்லாமிய   நூல்களையும்திருக்குர்ஆனையும் வழங்கினார்.  அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.







Friday, April 27, 2012

ஜித்தா-செனைய்யா கிளையின் மாற்று மத சகோதரர்களுக்கான தாஃவா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையின் சார்பில் 26.04.2012 வியாழன் அன்று மாலை மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாம் குறித்து எத்தி வைக்கப்பட்டது. அவர்கள் இஸ்லாம் குறித்தும், குரான் பற்றியும், இறைவனை பற்றியும் அறிந்து கொள்ள 3 புத்தகங்களும் கிளை சார்பில் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


Wednesday, April 25, 2012

ஜித்தா-செனைய்யா கிளை மாற்றுமத நண்பர்களுக்கு dawa

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையில் - 24/04/2012 செவ்வாய் அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கப்பட்டது. இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள அவருக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் 2 ம் வழங்கப்பட்டது.


TNTJ.NET: சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு

http://www.tntj.net/83802.html 

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, April 25, 2012, 13:04

இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.

சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்

1) ஷேக்,

2) சையது,

3) தக்னி முஸ்லிம்

4) அன்சார்,

5) தூதுகோலா

6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்

7) மாப்பிள்ளா

என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.

இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.

பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.

எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் "இஸ்லாம்" என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.

வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.

அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது. அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.

அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதிரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் "சாதி இல்லை" என்று சொல்ல வேண்டும்.

அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே "சாதி இல்லை" என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Monday, April 23, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா-சகாகா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் 19 .04 .2012 வியாழக்கிழமை இரவு  10.30 மணிக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டல சகாகா கிளையின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை கிளை தலைவர் சகோ. இம்தாதுல்லா தொடங்கிவைத்தார்கள். இதில் அல்-குரையாத்தில் இருந்து வருகை தந்திருந்த. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். பிறகு அமைப்பாளர் உபைதுர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி " எப்படி அமைய வேண்டும் என்று விளக்கினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், இரவு உணவுதுஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.





-


Saturday, April 21, 2012

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20-04-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் பயானில் தாயகத்திலிருந்து மாநில துணை பொதுச்செயலாளர் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள், குர் ஆன், பைபிள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஒரு பிரச்சிணைக்கு குர் ஆன் எப்படி அற்புதமாக தீர்வு சொல்கிறது என்றும், பைபிள் எப்படி அபத்தமாகவும், அசிங்கமாக தீர்வு சொல்லிகின்றது என்பதனை விரிவாக விளக்கி உரையாற்றினார்கள். இதில் சுமார் 125 பேர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் இது மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சியாகவும், ரசிக்க கூடியதாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹமதுலில்லாஹ்.

ஜித்தா மண்டல கூட்டு சுன்னத் நோன்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19-04-2012 வியாழன் அன்று சுன்னத்தான நோன்பை வைக்க ஆர்வமூட்டும் வகையில் ஜித்தா மண்டலம் சுன்னத் நோன்பு வைக்க அழைப்பும், இஃப்தார் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் 6 சகோதரர்கள் நோன்பு வைத்து இஃப்தாரில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அவர்கள் அமல்களின் சிறப்பு என்ற தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தினார்கள். இன்ஷா அல்லாஹ் இதனை அவ்வப்பொழுது ஏற்பாடு செய்து இன்னும் அதிகமானவர்களுக்கு ஆர்வமூட்ட ஜித்தா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அல்ஹமதுலில்லாஹ்.

TNTJ ஜித்தா மண்டல அல் சலாமா கிளை கட்டிட நிதி

ஜித்தா மண்டலம் மாநில தலைமை கட்டிட நிதிக்காக கிளைவாரியாக தொகையினை நிர்ணயித்து இருந்தது. அதன்படி ஜித்தா அல் சலாமா கிளைக்கு இந்தியா ரூபாய் 10000த்தை நிர்ணயித்து இருந்தது. அதற்க்குண்டான தொகையான 750 ரியாலை. கிளை தலைவர் சகோ.முஸ்தபா அவர்கள் மண்டல து.செயலாளர் சகோ.கௌஸ் இடம்  20-04-2012 வெள்ளி அன்று ஒப்படைத்தார்கள். அல்ஹமதுலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தா மண்டலம்  தபூக்கிளையில்  20/04/2012  வெள்ளி அன்று  தபூக் சுலைமானியா பகுதியில் ASTRA BUILDING CONSTRUCTION  கம்பெனியில் பணிபுரியும்  இலங்கை மட்டகளப்பு சகோவிஜயன் மற்றும் பிலிப்பைன்ஸ் புலக்கானைச் சேர்ந்த சகோ (MICHAEL) மிக்காயில் என்ற  சகோதரர்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று கிளை தலைவர்  சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள்  இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கினார்கள்.  சகோ.விஜயனுக்குசகோ.  P.J  அவர்களின் தர்ஜுமாவும்,  மற்றும் ஐந்து  தமிழ்இஸ்லாமிய நுல்களையும்,  சகோ. மிக்காயிலுக்கு ஆங்கில குர்ஆன் மற்றும் ஐந்து ஆங்கில   நூல்களையும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா-தபூக் ASTRA விவசாய பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளை  ASTRA  விவசாய  பண்ணையில்   பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கடந்த 19/04/2012  வியாழன் அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின்   கேம்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள்  தாயத்து,   தட்டு,  தகடு,   பில்லி,   சூனியம் மற்றும்  மாந்திரீகம் ஆகியவைகளின் மார்க்கத்தின் நிலைபாடுகள் என்ன  என்பதை பற்றி  குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். மேலும்   அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன்   கொழும்பை  சேர்ந்த சகோ.  ஆஸாத் என்பவருடைய கழுத்தில் அணிந்திருந்த தாயத்து முடி கயிற்ரையும் அறுத்தெறிந்தார்.    இந்நிகழ்ச்சியில் பிற மத சகோதரர்களும் கலந்து கொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.