Tuesday, March 6, 2012

ஜித்தா மண்டல தர்பியா முகாம் அழைப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…………………………….

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……………………

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் 16-03-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் நடத்த உள்ள தர்பியா முகாமில் பல சகோதரர்கள், பெண்களுக்கும்(குடும்பத்தினருக்கும்) இதனை வைத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டனர். அதனை கருத்தில் கொண்டு பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் இடவசதி உள்ள இடம் பார்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இடமும் நீச்சல் குளம் வசதி உள்ள இடம் ஆகையால் குடும்பத்தினரோடு கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்ச்சி நிரலில் ஏதும் மாற்றமில்லை, சூரா மற்றும் ஓதும் வகுப்புகள் பெண் ஆலிமாக்ககளை கொண்டு பெண்களுக்கு நடத்தப்படும், மற்றபடி ஆன்லைன் நிகழ்ச்சிகள், மார்க்க உரைகள் அவர்கள் இடத்தில் இருந்தே பார்த்து, கேட்கும் வசதிகள் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

நுழைவு கட்டணத்தினை பொறுத்தவரை பெரியவர்களுக்கு, தலா 25 ரியாலும், சிறியவர்களுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை, அதற்க்கு மேல் வயது உள்ளவர்களுக்கு 1 சிறுவறுக்கு 10 ரியாலும், அதற்க்கு மேல் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 ரியாலும் (அதாவது இருவருக்கு10, மூன்று பேருக்கு 15 என) பெறப்படும்.

இந்நிகழ்ச்சியில் நீங்கள் மட்டும்மல்லாமல் உங்கள் நண்பரகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம்.

 

ஜித்தா மண்டல நிர்வாகிகள்


ஜித்தா மண்டல தர்பிய முகாம் நிகழ்ச்சி நிரல்
நேரம் தலைப்பு வழங்குபவர்
09.00 - 09.30 காலை உணவு  
09.30 - 09.45 அறிமுக உரை ரஃபீ
09.45 - 11.00 குடும்பவியல் சௌக்கத் ஹீசைன்
11.00 - 12.30  நீச்சல் & ஓய்வு  
12.30 - 01.15 ஜும் ஆ உரை & தொழுகை ரஃபீ
01.15 - 02.00 மதிய உணவு  
02.00 - 03.30 தொழுகை & ஜனாஸா செயல்முறை E.ஃபாருக் (மாநில தலைமை)
03.30 - 04.30 எளிமையாக ஏற்றம் பெறலாம் உரை கோவை.ரஹ்மத்துல்லா
04.30 - 04.45 அஸர் தொழுகை சௌக்கத் ஹீசைன்
04.45 - 05.00 தேனீர் நேரம்  
05.00 - 06.30 சூராக்கள் மனன மற்றும் ஓதும் வகுப்பு 5 குழு
06.30 - 07.00 மஃரிப் தொழுகை  பஷீர் மௌலவி
07.00 - 07.30 இறந்தவர்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும்   
  நாம் செய்ய வேண்டிய கடமைகள் - உரை பஷீர் மௌலவி
07.30 - 08.00 நபி (ஸல்) அவர்களின் ஒரு நாள் - உரை பஷீர் மௌலவி
08.00 - 08.30 நிர்வாக ஒழுங்குகள் - உரை அன்சாரி
08.30 - 09.00 இஷா தொழுகை & உணவு விநியோகம் அப்துல் அஜீஸ்
09.00 து.ஆ வுடன் நிகழ்ச்சி முடிவு  
     
     

No comments:

Post a Comment