அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு நாள் தர்பியா முகாமை நடத்தியது. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ ஏன் இந்த தர்பியா முகாம், இதனால் கிடைக்கும் பயன் என்ன என்று விளக்கத்துடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். பின் முன்னாள் மண்டல தலைவர் சகோ. சௌக்கத் ஹூசைன் குடும்பவியல் என்ற தலைப்பில் குடும்பத்தில் மனிதனின் பல பருவத்தில் அவர்களுக்கு உள்ள பொறுப்புகளை பற்றி விளக்கமாக 1 மணி நேரம் உரையாற்றினார்கள். அதன்பின் வந்திருந்தவர்கள் நீச்சல் பயிற்ச்சிக்கு சென்றனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கென 3 தனித்தனி நீச்சல் குளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்பு சகோ. ரஃபீ அவர்களின் இஸ்லாத்தின் பார்வையில் உலகம் என்ற ஜூம் ஆ உரையுடன் தொழுகை நடத்தினார்கள். மதிய உணவிற்க்குப்பின் மாநில தலைமையிலிருந்து சகோ. ஃபாரூக் அவர்கள் தொழுகை பயிற்ச்சி, ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கப்ஹன் உடுத்தி அடக்கம் செய்வது எப்படி என்று ஆன்லைன் மூலம் 1.30 மணி நேரம் வகுப்பெடுத்தார்கள். பின் சகோ. அமீன் அஸர் தொழுகையை நடத்தினார்கள். இதன்பின் தேனீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அஸர் தொழுகைக்குப்பின் மாநில பொதுச்செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் எளிய முறையில் ஏற்றம் பெறுவது எப்படி என்ற தலைப்பில் எளிய முறையில் தாஃவா செய்வது எப்படி என்றும், ஜமாஅத்தாக சேர்ந்து செயல்படுவதால் எப்படி எளிய முறையில் செய்திகளை அதிக நபர்களுக்கு கொண்டு செல்லமுடிகிறது என்பதை தெளிவாகவும், விரிவாகவும் விளக்கி சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார்கள். அதன் பின் தொழுகைக்கான து.ஆ க்கள், சிறிய சூராக்கள் தஜ்வீது முறைப்படி ஓதுவது எப்படி என்ற பயிற்சி வந்திருந்த அனைவருக்கும் சுமார் 8 குழுக்களாக பிரித்து வகுப்பெடுக்கப்பட்டது. பெண்களுக்கு ராஷிதா ஆலிமா வகுப்பெடுத்தார்கள். இதன் பின் சகோ.பஷீர் மௌலவி மஃக்ரிப் தொழுகையை நடத்தினார்கள். மஃக்ரிப் தொழுகைக்குப்பின் சகோ. அன்சாரி அவர்கள் நிர்வாகவியல் என்ற தலைப்பில் சிறிய உரையை நிகழ்த்தினார்கள். அதன் பின் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் இறந்தவர்களுக்கு நாம் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது என்பதையும், இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்கும் வண்ணம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இறந்தவர்களுக்கு நமது கடமை என்ற தலைப்பில் 1 மணி நேரம் உரையாற்றினார்கள். இதன் பின் இஷா தொழுகைக்குப்பின் இரவு உணவு விநியோகிக்கப்பட்டது. இதே நேரத்தில் சகோ.முஸ்தபா குழந்தைகளுக்கு ஓதும் பயிற்ச்சியையும், மார்க்க சிந்தனைகளையும் கொடுத்தார்கள். சரியான திட்டமிடலோடு, மண்டல, கிளை நிர்வாகிகளின் செயல்பாடும் பாராட்ட தக்கதாகும். வந்திருந்த அனவரிடத்திலும், நிகழ்ச்சி பற்றி கருத்துடன் மதிப்பெண்கள் போட கேட்டுக்கொள்ளப்பட்டது. 80% பேர்கள் முழுமையான மதிப்பெண்கள் கொடுத்திருந்தனர். அவ்வப்பொழுது இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துமாறும் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக பெண்கள் இந்த முகாமினை மிகவும் விரும்பியதாக அவர்களின் கணவர்கள் கூறினார்கள். நீண்ட நேரம் நடந்தாலும் நிர்வாகிகளை இந்தக்கருத்துகள் ஊக்கமடையச்செய்தது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும். |
Wednesday, March 21, 2012
ஜித்தா மண்டல 1 நாள் தர்பியா முகாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment