Monday, March 26, 2012

ஜித்தா-செனைய்யா கிளையின் மக்கா வரலாற்று இடங்கள் நோக்கி பயணம்.

அல்லாஹ்வின் பேரருளால் 23.03.2012 வெள்ளிஅன்று ஒரு நாள் மக்காநகரின் இஸ்லாமிய வரலாற்று இடம் நோக்கிபயணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமும் ஜித்தா-செனைய்யா கிளையும் இணைந்து நடத்தியது.காலை 7 மணிக்கு ஜித்தாவிலிருந்து புறப்பட்டு மக்காநகருக்கு சென்றடைந்தது.
இந்த பயணத்தின் நோக்கம் பற்றி பேருந்தில் செனைய்யா கிளைத் தலைவர் சகோ.அல் அமீன் விளக்கினார். முதலில் ஹிரா குகை இருக்கிற ஜபல் நூர் என்று அழைக்கப்படுகிற நூர்மலைக்கு சென்றடைந்ததும் காலை சிற்றுண்டியும், தேநீரும் கொடுக்கப்பட்டது. மலையில் ஏறுபவர்களுக்கு தண்ணீரும் கொடுக்கப்பட்டது. மலை ஏறி இறங்கியவுடன் (பைத்துல்லாஹ்) அல்லாஹ்வின் ஆலையம் மக்கா ஹரம் அழைத்து சென்று, அங்கு ஜூம்ஆ தொழுகை முடிந்தவுடன் மதிய உணவு விநியோகிக்கப்பட்டது. பிற்பகல் மீண்டும் பயணம் தொடங்கி தவுர் குகை உள்ள மலை, மினா முற்றும்முஸ்தலிஃபா போன்ற இஸ்லாமிய வரலாற்று இடங்களை காட்டி அந்த இடங்களின் வரலாற்றை பேருந்தில் விளக்கப்பட்டது.
அரஃபா மைதானத்தில் இறங்கி அஸர் தொழுகை முடிந்து. இந்த பயணத்தில் கண்ட இருகுகைகளின் வரலாற்றை விரிவாக ஷரஃபிய்யா கிளைத் தலைவர் சகோ.சையது முஸ்தபா எடுத்துரைத்தார்கள். அரஃபா மைதானத்தின் வரலாறும் அங்கு விளக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து ஜித்தா நோக்கி பயணம் புறப்பட்டது.
வரும்போது பேருந்தில் வைத்து கேள்விப்பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரியாக பதில் சொன்னவர்களுக்கு புத்தகங்களும், குறந்தகடுகளும் பரிசாக வழங்கப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 50 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மண்டல நிர்வாகிகளும் மற்றும் கிளை நிர்வாகிகளும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment