Saturday, October 6, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 04-10-2012 வியாழன் அன்று தபூக் Air Port டில் கிளைச் செயளாலர் சகோநிஜாம் அவர்களுடன் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் - மனிலாவைச் சேர்ந்த  சகோதரர் ஜில்(GIL) அவர்கள் மண்டலத் தலைவர் சகோ. நவ்ஷாத் அலி, கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ். கிளைச் செயளாலர் சகோ. நிஜாம் ஆகியோரின் முன்னிலையில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறைகோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தை விளக்கி [ஸஹாதா] கலீமாவையும் சொல்லிகொடுத்தார்கள்.  அல்ஹம்துலில்லாஹ். மேலும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக் கொண்டார். அவருக்கு 15 முக்கிய இஸ்லாமிய (ஆங்கிலம்) நூல்களும்,  ஆங்கில திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment