Saturday, October 20, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில்  18/10/2012 வியாழன் இரவு 11:30 முதல் 01 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத்தலைவர் சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள்,  ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது எவ்வாறுஎப்போது? "ஹதீஸ் கலை" [பகுதி-5] என்ற தலைப்பில்  TNTJ  மாநில தலைமையில் சகோ. P.J அவர்கள் நடத்திய பாட உரையின் வீடியோ காட்சிகளுடன்  குர்ஆன்- ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டுபல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment