Friday, October 19, 2012

TNTJ மாநில தலைமை கடிதம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குரிய மருத்துவம் குறித்து அவர்கள் மீதுள்ள அன்பினாலும், அக்கரையினாலும் பலர் ஏரளாமான ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அக்கு பிரஷர், அக்கு பஞ்சர், ஹேமியோபதி, ஆயுர்வேதா, சித்தா, யூனானி, அலோபதி, திபத்திய மருத்துவம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான மருத்துவ முறைகள் வரை ஆலோசனைகள் வந்தவண்ணம் உள்ளன.  இந்தியாவின் பல்வேறு குக்கிராமங்களில் உள்ள வைத்தியர்களிலிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உட்பட பல வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்கள் வரை பல பரிந்துரைகள் வந்துள்ளன.  பலர் தமக்கு தெரிந்த மருத்துவர்களிடம் சந்திக்க நேரம் வாங்கி வந்துள்ளனர். சிலரிடமிருந்து மருந்துகளும் லேகியங்களும் வந்துள்ளன. சகோதரர் பி.ஜே அவர்கள மருத்துவம் குறித்து மாநில நிர்வாகம் என்ன முடிவு செய்திருக்கிறது என்று பலரும் கேட்டவாறு உள்ளனர். 
எவ்வகை மருத்துவம் செய்வது என்பதை சகோதரர் பி.ஜே. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவம் தொடர்பாக வரும் தகவல்களை திரட்டி அவர்களுக்கு தெரியப்படுத்துவதும் உறுதுணையாக இருப்பது நிர்வாகத்தின் கடமையாகும். இந்த அடிப்படையில் அவர்களுக்கு வந்த தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவை பரீசீலிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்திற்கு பலகோடி ரூபாய் செலவாகும் என்பது போன்று மக்களில் பலர் கருதுவதாக தெரிகிறது. ஆனால் இந்த வகை கேன்சருக்கான மருத்துச் செலவு சகோதரர் பி.ஜே. அவர்களின் சக்தி உட்பட்ட அளவே உள்ளது. எது எப்படி இருந்தாலும் எந்நிலையிலும் அவர், எப்போதும் போல் யாருடைய உதவியையும் ஏற்க தயாராக இல்லை. ஆகவே பொருளாதாரம் பற்றி கொள்கை சகோதரர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். வழக்கம் போல் உங்கள் து.ஆ க்களை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லாஹ் ,
பொதுச்செயலாளர்,
19.10.2012

No comments:

Post a Comment