Sunday, October 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மகத்தான மனிதநேய சேவை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-09-2012 வியாழன் அன்று "இந்தியன் இன்டர்நேஷ்னல் ஸ்கூல் வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தியத் தூதரக வருகையையொட்டி TNTJ  ஜித்தா மண்டலம்  தபூக் கிளையின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கான உதவி முகாம் இடப்பட்டிருந்தது.
இச் செய்தி அறிந்த தபூக் "அல் முத்தபில்" (முன்சிபாலிடி )  கம்பெனியை சேர்ந்த 76 இந்தியர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறி உதவி கோரி நின்றனர். பல மாநிலங்களைச் சேர்ந்த இவர்களில் அதிகமானோர் முஸ்லீமல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த 6 வருடமாக வேலை செய்து சம்பளமும் இல்லாமல் தாயகமும் செல்ல இயலாமல் இருக்கும் 76 பேர்களையும் ஒன்று திரட்டி கிளை தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் தூதரக அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். 
சிறிய சலசலப்பிற்கு பிறகு இறுதியாக இடைக்கால பாஸ்போர்ட் வழங்கி அவர்கள் அனைவரையும் தாயகத்திற்கு அனுப்புவதாக தூதரக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியதை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.
 தூதரக அதிகாரியின் இடைக்கால பாஸ்போர்ட் வழங்கும் படிவங்களை வழங்கியதை தொடர்ந்து உடனடியாக கிளை செயளாளர் நிஜாம் மற்றும் துனைச்செயளாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் படிவங்களை நிரப்பி சரிபார்க்கப்பட்டு இடைக்கால பாஸ்போர்ட் வழங்கும் வேலைகள் துரிதமாக்கப்பட்டது.
 மேலும் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களால் தூதரக அதிகாரிகளை அழைத்து செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் வேலை செய்யும் "அல் முத்தபில்" கம்பெனியையும் மற்றும் அவர்களின் இருப்பிடங்களின் அவலங்களையும் நேரில் கான்பிக்கப்பட்டது.
 அவர்களை அரசு அலுவலகங்கள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தபூக் கிளையின் மனித நேயப்பணி மிகுந்த ஆறுதலாய் இருந்ததாக கூறி அனைவரும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment