Tuesday, October 30, 2012

ஜித்தா மண்டலம் பயான் - பெருமை, பொறுமை, பொறாமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 02-11-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா பகுதியில் மார்க்க உரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சகோதரர் முனிப்(தம்மாம்) அவர்கள் பெருமை, பொறுமை, பொறாமை என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இதில் அனைவருக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். பங்குபெறுங்கள், பயன் பெறுங்கள். மேலும் இந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட இணையதளங்களிலும் நேரலையாக காணலாம்.



இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா.




Sunday, October 28, 2012

ஜித்தா-பாப் மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-10-12 ஞாயிறு அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. தம்மாம் முனிப் அவர்கள் தாஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல ஈத் சந்திப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-2012 சனி அன்று ஜித்தா மண்டலம் சார்பாக ஜித்தாவிலுள்ள TNTJ சார்ந்த குடும்பத்தினருக்கான பெருந்தாள் சந்திப்பினை ஜித்தா தூவல் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தது, இதில் சுமார் 15 குடும்பத்தினை சேர்ந்த 70 பேர்கள் கலந்துகொண்டனர். அனாவசிய பேச்சுவார்த்தைகளில் இருந்து தவிர்ந்து தவ்ஹீத் சிந்தைனை கொண்ட குடும்பதினரோடு ஒரு நாளை கழித்தது தங்களூக்கு பயனுள்ளதாக அமைந்ததாக கலந்துகொண்டவர்கள் கூறி மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, October 27, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ்  மண்டலம்  தபூக் கிளையில் 25/10/2012 வியாழன் இரவு 11:30 முதல் 01  மணி  வரை  வாராந்திர  மார்க்க  தர்பியா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள், ஹதீஸ்கள்  தொகுக்கப்பட்டது எவ்வாறு?  எப்போது"ஹதீஸ்கலை" [பாகம்-6]  என்ற தலைப்பில் TNTJ மாநில தலைமையில் சகோ. P.J  அவர்கள்  நடத்திய  பாட  உரையின்  வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை  நிர்வாகிகளும்  மற்றும்  கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டு,  பல்வேறு  சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா - தபூக் கிளையில் ஈத் சந்திப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  26/10/2012 வெள்ளி ன்று இஷாவிற்கு பிறகு ஹஜ் பெருநாள்  சந்திப்பு  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் புறநகர் பகுதிகளிள் பணிபுரியும்  இந்திய இலங்கை, முஸ்லீம்கள், மற்றும் பிற சமய சகோதரர்கள் கலந்துகொண்டனர். இதில் துவக்க உரையாற்றிய கிளைச் செயளாலர் சகோ.நிஜாம் அவர்கள், வந்திருந்த அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்று "அல்லாஹ்வை பெருமைப் படுத்தப்படவேண்டிய பெருநாட்கள்" என்ற ஒரு தலைப்பில் உரையற்றினார்கள். அடுத்து, பேசிய கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்: "நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் இறுதி பேருரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மேலும், கலந்து கொண்ட இருபாளருக்கும் "இனிய மார்க்கம், எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளித்தார்கள். இறுதியாக கிளை  பொருளாலர்  சகோ. முஜாஹீத்  அவர்கள் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறமத சகோதரர்கள் அனைவருக்கும் சகோ. P.J  அவர்களின் தமிழாக்கம்,  திருமறைதோற்றுவாய்,  மாமனிதர்  நபிகள்  நாயகம்,  வருமுன்  உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற  மார்க்கம்   இஸ்லாம்,  பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும்  இஸ்லாம்  ஓர் இனியமார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஸ்தவர்களுடன் நடந்தவிவாதம்பைபில் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா? விவாதம்!,  இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்,ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் இலவசமாம வழங்கப்பட்டது. து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, October 25, 2012

ஜித்தா-சலாமா கிளையில் அரஃபா நோன்பு பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் சலாமா கிளை சார்பாக 23-10-12 செவ்வாய் அன்று அரஃபா நோன்பை வலியுறுத்து பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-துறைமுக கிளை டெங்கு விழிப்புணர்வு பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-10-12 புதன் அன்று ஜித்தா மண்டலம் துறைமுக கிளை மூலம் துறைமுகத்தில் உள்ள கேம்ப்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசுரம் 50 நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, October 24, 2012

ஜித்தா - ஷர்ஃபியா கிளை டெங்கு விழிப்புணர்வு பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 24-10-12 புதன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் 50 நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


தியாக திருநாள் வாழ்த்துக்கள்


ஜித்தா மண்டல டெங்கு விழிப்புணர்வு பிரசுர விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-10-12 செவ்வாய் அன்று ஜித்தா மண்டலம் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் நமது சகோதரர்கள் தாயகத்தில் தனது குடும்பத்தார்க்கு புரியவைக்கும் வகையில் அவர்களுக்கு விநியோகிக்க ஜித்தா பலதில் உள்ள தழிழர்கள் கடைகளில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் 200 வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ்ஜுப் பெருநாள் உரை நேரடி ஒளிபரப்பு


ஹஜ்ஜுப் பெருநாள் உரை நேரடி ஒளிபரப்பு

வரக்கூடிய 27.10.12 - சனிக்கிழமை அன்று காலை 8மணிக்கு சென்னை - இம்பீரியல் சிராஜ் மஹாலில் நபி வழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற உள்ளது

இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்த உள்ளார்கள்
ஹஜ்ஜுப் பெருநாள் உரை நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

இன்ஷா அல்லாஹ்..... 
http://www.onlinepj.com/

ஜித்தா-செனைய்யா கிளையில் ஹஜ் செய்முறை விளக்கம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் 21/10/2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த வருடம் ஹஜ் செல்பவர்களுக்கு ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ காட்சியுடன் சகோ.அமீன் விளக்கிக் கூறினார்கள். இதுவல்லாமல் பல நபர்களுக்கும் ஹஜ் செய்வதற்காக செய்முறை விளக்கம் புத்தகமும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

ஜித்தா-செனைய்யா கிளையில் நோட்டீஸ் விநியோகம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் 21, 22,23/10/2012 ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் ஹஜ் செல்லாதவர்கள் அரஃபா நோன்பு நோற்க விளக்கும் பிட் நோட்டீஸ்கள் கேம்ப்களில் மற்றும் உணர்வு வரதழில் வைத்தும் விநியோக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, October 23, 2012

ஜித்தா - சுலைமானியா கிளை பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-10-12 திங்கள் அன்று ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் அரஃபா நோன்பை வலியுறுத்தும், நோட்டிஸ்கள் 25 விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-மதீனா கிளை மூலம் இலவச குர்ஆன் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளை வேற்றுமத சகோதரர்களுக்கு இலவசமாக குர் ஆன், புத்தகங்கள் மற்றும் சி.டி க்கள் வழங்க திரட்டிய நிதியை தாயகம் சென்றிரிருந்த கிளை பொருளாளர் சகோ. முஜிப் மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி 21-10-12 ஞாயிறு அன்று தஞ்சை வடக்கு ராஜகிரி மர்கஸில் வேற்றுமத சகோதரர்கள் 10 பேர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து, அனைவருக்கும் தலா ஒரு (பத்து) குர் ஆனும், தலா 5 புத்தகங்கள் என 50 புத்தகங்களும், தலை ஒரு டி.வி.டி என 10 டி.வி.டிகளும் சகோ. முஜிப் மற்றும் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-10-12 திங்கள் அன்று ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா சகோ.நௌஷாத் தலைமையில் நடந்தது. அதில் இன்ஷாஅல்லாஹ் வரும் ஹஜ் பெருநாள் விடுமுறை தினங்களில் மண்டல நிகழ்ச்சிகளை எப்படி அமைத்துக்கொள்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, October 22, 2012

டெங்கு காய்ச்சல் ..அவசியம் அறிய வேண்டியவை

டாக்டர் டி. முஹம்மது கிஸார்,

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். அநேகமான டெங்கு காய்ச்சல், மிக சாதாரண காய்ச்சல் போலவே இருந்து, அதனால் பாதிக்கப்பட்டவர் எளிதில் அதில் இருந்து மீண்டு விடுவர்.. மிக குறைந்த சதவிகிதத்திலான டெங்கு காய்ச்சல் தான், மிக மோசமான பாதிப்புகளையும் , உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியது.

    இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் அனேகமாக இருக்கும் மூன்று நோய் அறிகுறிகளாகும். இதுபோக இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தலாம்.

இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் ஒரு வகை டெங்கு வைரசால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். தவிர மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்புத் தன்மை வராது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான மூட்டு மற்றும் தசை வலியால் பாதிக்கப்படுவதால், இதற்கு எலும்பு ஒடியும் நோய் BREAKBONE என்று பெயர்.

டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்தக் கசிவு, மூக்கில் இரத்தம் வடிதல், வாய் ஈறுகளில் இரத்தம் வருதல், கருப்பு மலம், இரத்த வாந்தி ஆகியன ஏற்படலாம். இந்த வகையான டெங்கு இரத்தக் கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் மிக ஆபத்தான நிலைக்கும் ஏன் இறப்பு வரை கூட கொண்டு சென்று விடும்.



எப்படி பரவுகிறது?

ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்தக் கொசு நோயால் பாதிக்க பட்ட ஒரு நபரைக் கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, அந்த கிருமியை மற்றவர்களுக்குப் பரப்புகிறது. இந்தக் கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்தக் கொசு அநேகமாக மழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் சிரட்டைகள்,, டையர்கள், போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாது.நோயாளிடம் இருந்து, கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும்.. நோயாளியைத் தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.



டெங்கு அறிகுறிகள்:-

கொசு கடித்து, வைரஸ் கிருமி உடலில் சென்று , நோய் அறிகுறி தெரிய வர 5 முதல் 15 நாட்கள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணைச் சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி சில மணிநேரத்தில் வரும். காய்ச்சல் 104 f போகலாம்,. இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், வரலாம்.கண்கள், சிவந்து போகலாம். தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும்.கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்த ஜுரம் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாள் வரை இருந்து,பின்னர் திடீரென ஜுரம்  குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும். இந்தக் காலகட்டத்தில், உடல் வெப்பம் நார்மலாக இருந்து , நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். இந்த காலகட்டம் தான், அநேகர் தாம் நோயிலிருந்து மீண்டுவிட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடுவர். இந்தக் காலகட்டத்தில் தான் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.(எல்லா டெங்கு காய்ச்சலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவோ அல்லது மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தவோ செய்யாது. மிகக் குறைந்த சதவிகிதத்திலான டெங்கு தான், மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தும்.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஜுரம் மற்றும் தோலில் கலர் மாற்றம் , முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.



டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?

டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்தப் பகுதிக்கு போய் வந்தாலோ, , மேற் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதி மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். டாக்டர்கள் பிரத்யோக இரத்த டெஸ்ட் மூலம் இந்த நோயைக் கண்டு அறிவர்.



டெங்கு-சிகிச்சை முறை

இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க சாதாரண பாரசெடமோல் மாத்திரை ,போதிய ஒய்வு , நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை..மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரண மாத்திரை  எடுத்தல், இரத்த இழப்பு அதிகமாகலாம்.1% குறைவான டெங்கு தான் உயிரிழப்பில் போய் முடியும்,



Dengue Hemorrhagic Fever என்னும் டெங்கு இரத்த கசிதல் ஜுரம்:-



இந்த வகையான டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று வலி, இரத்தக் கசிவு மற்றும் ஷாக் என்ற மோசமான உடல்நிலை உருவாகும். இந்த வகை டெங்கு மூலம் தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும். இருமல், வாந்தி,குமட்டல், வயிற்று வலி வரலாம்.2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயைச் சுற்றி நீல நிறமாகி மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

தோலில் இரத்தக் கசிவு, இரத்த வாந்தி, மலத்தில் இரத்தம் போய் கருப்பு மலம், பல் ஈரலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம், போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம். இதயம் பாதிக்கலாம்.



இதற்கு சிகிச்சை, மருத்துவ மனையில் அனுமதித்து, இரத்த குழாய் வழியாக நீர் ஏற்றுதல். இரத்தத்தில் தட்டை அணுக்கள் என்னும் platelet குறைந்து இரத்தக் கசிவு ஏற்படுவதால், தொடர்ந்து தட்டை அணுக்கள் அளவைப் பரிசோதித்து, அது மிகவும் குறைந்தால், இரத்த தட்டை அணுக்கள்  என்னும் Platelet transfusion பண்ண வேண்டும். ஷாக் என்னும் dengue shock syndrome வந்தால், அதற்காக பிளாஸ்மா என்ற வகை இரத்தம் செலுத்தப்பட வேண்டும்.



டெங்கு தடுக்கும் முறை:-



வைரஸ் ,நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியைத் தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகளை, கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும். இதனால் அந்த நோயாளிகளிடம் இருந்து கொசு மூலம் மற்றவருக்கு நோய் பரவுவதை தடுக்கலாம்.

· டெங்கு வைரஸைப் பரப்பும், ஏடெஸ் கொசுவின் இனவிருத்தியை எல்லா நிலையிலும் தடுக்கவேண்டும். இந்தக் கொசு பொதுவாக வீட்டினுள் இருந்தாலும், தன இனவிருத்தியை, வீட்டில் மிக எளிதாக இருக்கும் சுத்தமான , தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் தான் செய்கிறது.

டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎறியபட்ட பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவறு பார்க்கவேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.

தண்ணீர் பீச்சும் கேன்களில், தண்ணீர் இல்லாதவாறு தலைகீழாக வைக்கவேண்டும்.

வீட்டில் வளர்க்கப்படும் , பூ தொட்டியில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.. தொட்டியின் கீழ் உள்ள plateஐ , நன்றாக சுத்தம் செய்து, அதில் ஒட்டிக் கொண்டு இருக்கும் கொசு முட்டைகளை நீக்கி விட வேண்டும்.

பூந்தொட்டியில் உள்ள மணலை கிளறி மிருதுவாக்க வேண்டும்.மண் கட்டியாக இருந்தால், தண்ணீர் தேங்கி, கொசு இனவிருத்தி செய்ய ஏதுவாக அமையும்.

தண்ணீர் வடிந்து ஓடும் drain  களில், தண்ணீர் ஓட்டத்தைத் தடை செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும். முக்கியமாக வீட்டின் மொட்டை மாடி போன்றவற்றில்

மிக அரிதாக உபயோகபடுத்தப்படும் தண்ணீர் சேர வாய்ப்பு உள்ளவைகளை மூடியே வைக்க வேண்டும்.

AC இல் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தேக்கும் TRAY  வைக்ககூடாது. அந்த தண்ணீர் எந்த தடையும் இன்றி கழிவில் கலக்குமாறு செய்ய வேண்டும்.

பூச்சாடி  என்னும் flowervase உள்ள தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒருநாளைக்கு மாற்ற வேண்டும்.பூச்சாடியின் உள்புறத்தை, நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.செயற்கை பூக்கள் மற்றும் தாவரத்தின் வேற்பகுதியை நன்றாக கழுவி அதில் கொசு முட்டை இருந்தால் நீக்கி விடவேண்டும்.

வீட்டில்  மற்றும் தோட்டத்தில் உள்ள drain களில், விழுந்து அடைக்க வாய்ப்புள்ள இலைகள், குப்பைகளை நீக்கி , தடையின்றி நீர் வடிந்து செல்லும் வழியை ஏற்படுத்த வேண்டும்.

   

வீட்டில் உபயோகப்படுத்தாத கக்கூஸ்களில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு.அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து , கழிப்பிட பீங்கான்களை மூடி வைக்க வேண்டும்.

தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரைப் பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் வைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

நீர்த் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்..

கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப்படுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம்.

உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகப்படுத்தலாம். ஆனால் சிலருக்கு தோல் அலர்ஜியை இது உண்டு பண்ணலாம்.

இந்தக் கொசு பகல் நேரத்தில் அதிலும் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும்.

அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்

நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.

சுருங்கச் சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதைத் தடுக்க ஒழிக்க முடியும்.

நன்றி - உணர்வு

சுத்தம் கொள்வோம், அசுத்தம் கொல்வோம்


Sunday, October 21, 2012

ஜித்தா-ஜிஸான் கிளையில் பிரசுர விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளையில், 19-10-12 வெள்ளி அன்று குர்பானி மற்றும் அரஃபா நோன்பை வலியுறுத்தும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-துறைமுக பகுதியில் பிரசுர விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-10-12 ஞாயிறு அன்று ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் அரஃபா நோன்பை வலியுறுத்தும் 50 பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-ஷகாகா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-12 வெள்ளி அன்று ஜும். ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. இஸ்மத் அவர்கள் தக்வாவை கொண்டு ஹஜ் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஷகாகா பகுதியில் உள்ள அனேக சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-ஷகாகா கிளையில் இஸ்லாத்தை தழுவிய அன்பழகன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-12 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி-கொந்தையை சேர்ந்த சகோ.அன்பழகன்(கறுப்பு சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) தூய இஸ்லாத்தினை ஏற்றார். அவருக்கு சகோ. இஸ்மத் மற்றும் உபைதுற் ரஹ்மான் ஏக அல்லாஹ்வின் வல்லமை பற்றியும் இஸ்லாம் பற்றியும் எடுத்துரைத்து கலீமாவை சொல்லிக்கொடுத்தனர். அவர் தன் பெயரை ஹபீபுல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-ஸாகர் கிளையில் பிரசுரம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளை மூலம் 21-10-12 ஞாயிறு அன்று அப்பகுதியில் வாழும் தமிழ் முஸ்லீம்கள் வாழும் வீடுகளில் அரஃபா நோன்பை வலியுறுத்தும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 19-10-12 அன்று அஸர் தொழுகைக்குப்பின் தபூக் சுலைமானியா பகுதியில் குடிநீர் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இலங்கை சகோதரர் மாரனுக்கும், சுகுந்தனுக்கும், கேரளாவைச் சேர்ந்த   ராமனுக்கும் அவர்களது கடையில் சென்று கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தைப்பற்றி எடுத்துக்கூறி, இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார்கள்.  மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து முக்கிய 20 நூல்களும், 20 சி.டிக்களும் வழங்கி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டல பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 20-10-12 சனி அன்று ஜித்தா மண்டலம் சார்பாக அரஃபா நோன்பை வலியுறுத்து பிரசுரம், ஜித்தா அஜீஸியா, பகுதியில் உள்ள தமிழர் சார்ந்த நிறுவனங்களில் அனைவருக்கும் விநியோகிக்கும் வகையில் 100 நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான்.

அல்லாஹ்வின் பேரருளால், 19/10/2012 வெள்ளி அன்று மஃரி தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல 
தாயி சகோ. ஜஃபர் அலி அவர்கள், "அர்ஷின் நிழலில் 7 வகையினர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, October 20, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் ஹஜ் செயல்முறை விளக்கம் (பாகம்-2)



அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில், கடந்த 19/10/2012 வெள்ளி அன்று காலை  10 முதல் 11:30 மணி வரை {சமீபத்தில் புதிதாக} இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு "நபிவழியில் நம்ஹஜ்" (பகுதி-2) செயல் முறை விளக்கம்  வகுப்பு  நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களின் துணைவியார் சகோதரி சுமையாஹ் அவர்கள், இவ் வருடம் ஹஜ்ஜிக்கு செல்லவிருக்கும்  15 புதிய முஸ்லீம் பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கு புரெஜக்டர் முலம் நேரடி வீடியோ காட்சிகளுடன் நபிவழியில் நம்ஹஜ் செயல்முறை விளக்கமளித்தர்கள். மேலும், "இபுறாஹீம்  நபியின்  தியாக   வரலாறுஎன்ற தலைப்பில்  இபுறாஹீம்  நபி அவர்களின் குடும்பத்தாரின் தியாகங்களையும் குர்ஆன்,  ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில்  {சமீபத்தில் புதிதாக} இஸ்லாத்தை தழுவிய 30திற்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 19-10-2012 வெள்ளியன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர்  சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒருவர் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும்உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே  நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

TNTJ தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 19-10-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "இபுறாஹீம் நபியின் தியாக  வரலாறுஎன்ற தலைப்பில், குர்ஆன்,  ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள்  "இறைத்தூதர்களும்எதிப்பாளர்களும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோமுஜாஹீத் அவர்கள் "மூமின்கள்கள் யார்?" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். 
நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.