Thursday, June 7, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தமிழரசு.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 05-06-2012 புதன் அன்று இலங்கை திருகோணமலையை சேர்ந்த சகோ. தமிழரசு அவர்கள் தூய இஸ்லாம் மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக கிளை நிர்வாகிகள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டதோடு தன் பெயரை உஸ்மான் என்றும் மாற்றிக்கொண்டார். அவருக்கு கிளைத்தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் கலீமாவை சொல்லி கொடுத்து, இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கி கூறினார்கள். மேலும் அவருக்கு கிளை சார்பாக சகோ. பி.ஜெ அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம், வரும்முன் உரைத்த இஸ்லாம் நூல்கள் மற்றும் 20 சி.டி க்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment