Saturday, June 30, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-06-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் உணவே மருந்து என்ற தலைப்பில், வீடியோ காட்சிகளுடன் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியை கிளை பொருளாளர் சகோ.அப்துற் ரஹ்மான் நடத்தினார். பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லிம்களுக்கு தொழுகை பயிர்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்29/06/2012 வெள்ளி அன்று மஹ்ரிப் தொழுகை நேரத்தில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய மூன்று சகோதரர்களுக்கும் நபிவழித் தொழுகை செயல் முறை விளக்கம் மற்றும் திருக்குர்ஆன் -அல்ஹம்து சூறா, மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத [தர்பியா] பயிர்ச்சி அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மூன்று சகோதரர்கள்

தபூக் பகுதியில் தனியார் வீட்டில் கார் ஓட்டும் ஓட்டுனர்களாக பணிப்புரியும் மூன்று சகோதரர்கள் கடந்த 29/06/2012 வெள்ளி அன்று TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.                                                                                                 


1-மதுரை ரயில் நகரைச்சேர்ந்த சகோதரர் சக்தி அவர்கள் அப்துல்லாஹ் ஆகவும்,
2-உத்திரபிரதேஷ் – லக்னோ ஆலம்பாத்தைச் சேர்ந்த சகோதரர்ராஜேஷ் அவர்கள் உமராகவும்,
3-ஹைதராபாத் - சித்திக்பேட்டைச் சேர்ந்த சகோதரர் கிருஷ்ணா அவர்கள் உஸ்மான் ஆகவும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.
இவர்களுக்கு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களும்கிளைச் செயலாளர் நிஜாம் அவர்களும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்ன என்பதைப்பற்றி சிறப்பானமுறையில் எடுத்துரைத்துஇஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும்விளக்கிக்கூறி, கலிமாவை சொல்லிக் கொடுத்தனர்.
மேலும் அவர்களுக்கு சகோ, PJ அவர்களின் தமிழாக்கம் 1ம்,மற்றும் திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்,வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்மற்றும் பல இஸ்லாமிய 15 நூல்களையும்ஹிந்தி மொழியில் திருக்குர்ஆன் 2ம் மற்றும் பல ஹித்தி நூல்களையும் 15யும் வழங்கினார்கள்.

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம், , இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினார்கள்ல். அல்ஹம்துலில்லாஹ்.               

ஜித்தா- செனைய்யா கிளையில் உருது பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையில் 29/06/2012 வெள்ளி அன்று இரவு பிற மாநில சகோதரர்களுக்காக உருது பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகளாவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல கிளைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் குர்ஆனையும், ஆதாரப்பூர்வ ஹதீஸையும் மூலமாக கொண்டு சத்தியப்பிரச்சாரம் ஒருபுறம் நடந்து வருகிறது. தற்போது தமிழை மொழியல்லாது பிறமொழியிலும் அங்காகங்கே கிளைகளில் பரவலாக பிரச்சாரம் செய்து வருவது போல் நமது கிளையிலும் உருது பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஜித்தா மண்டல பேச்சாளர் சகோ. சௌக்கத் ஹூசைன் அவர்கள் அல்குர்ஆன் வல்ஹதீஸ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உருதுமொழி பேசும் வடமாநில மற்றும் பாகிஸ்தான் சகோதர்ரகளும் கலந்து கொண்டார்கள். அவர்கள் கேள்வியும் கேட்டு சந்தேகளை தீர்த்துக் கொண்டார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

கிறித்தவ சகோதரருக்கு பைபிள் இறைவேதமா? DVD வழங்கப்பட்டது

அல்லாஹ்வின் பேரருளால் தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையின் சார்பில் 28/06/2012 வியாழன் அன்று பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாத குறுந்தகடு இலவசமாக பிலிப்பைன்ஸ் கிறித்தவ சகோதரருக்கு கிளைத்துணைச் செயலாளர் சகோ. இர்ஃபான் வழங்கினார்.

Thursday, June 28, 2012

பீ.ஜேயின் முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும். எனது தனிப்பட்ட காரணங்களால் சில மாதங்கள் என்னால் என்னால் ஜமாஅத் பணிகளைக் கண்காணிக்க இயலாது என்பதால் மவ்லவி எம்.ஐ. சுலைமான் அவர்கள் வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து செயல் தலைவராக இருந்து எனது எல்லாப் பணிகளையும் மேற்கொள்வார் என்று முன்னரே நான் அறிவித்து இருந்தேன். இதற்கு திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. எனவே இனிமேல் செயல் தலைவரையே தொடர்பு கொள்ளுமாறும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். முன்னரே நான் அறிவித்தபடி அவசியமான த்ருணங்களிலும் விவாதம் போன்ற முக்கியமான பணிகளிலும் எனது பங்களிப்பு தேவையாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் என் பங்களிப்பு இருக்கும். எனது பணியின் போது ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் கொள்கைச் சகோதரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்.

http://www.onlinepj.com/



Wednesday, June 27, 2012

TNTJ மாணவர் அணி_இன்றைய செய்திகள்


மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கை - தற்போதைய நிலவரம்

மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலைதமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுஉள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும்ஜூலை 5ம் தேதி முதல் துவங்குகிறதுரேங்க்பட்டியலை www.tngov.inwww.tnhealth.org என்றஇணையதளங்களில் பார்க்கலாம்.


Tweet
ஈனப்பிறவி இஸ்ரேலின் முகம் இருண்டது!
ஒரு நாடு விடுதலை அடையும் போது உலகின்பெரும்பாலான் மக்கள் அதற்காகசந்தோஷப்படுவதுதான் இயல்புஆனால் ஒரு நாடுதன் பிறப்பை உலகுக்கு அறிவித்தபோதுஅதனால்சந்தோசப்பட்டவர்களை விட, கவலைஅடைந்தவர்களும்கோபப்பட்டவர்களும்குழப்பம்அடைந்தவர்களும்தான் அதிகம்இந்தியா கூட அந்தநாட்டை ஒரு நாடாக அப்போதுஅங்கீகரிக்கவில்லைஅந்த நாடு சந்தேகம்இல்லாமல் இஸ்ரேல்.

Tweet
செழிப்பான வாழ்வுக்கு வித்திடும் பொருளாதார படிப்புகள் ...

தமிழகத்தில் பொறியியல் தொடர்பான படிப்புகள்முக்கியத்துவம் பெற்ற பிறகுபொருளாதாரம்சம்பந்தப்பட்ட படிப்புகள் பின்வரிசைக்குதள்ளப்பட்டுள்ளனஆனால், ஒரு நாட்டின்முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானமற்றும் வெளிப்படையான காரணமாக திகழ்வதுஅந்த நாட்டின் பொருளாதார கொள்கைகள் என்பதைஒருபோதும் மறந்துவிடக் கூடாதுபொருளாதாரகொள்கை வடிவமைப்பில் தேவைப்படும் சிறந்தநிபுணர்களின் எண்ணிக்கை எப்போதும்அதிகமாகவே  உள்ளது.


Tweet
பி.எட்., பட்டதாரிக்கு களப்பணியாளர் பணி வாய்ப்பு...
மதுரைபள்ளிகளில் செயல்படும் எஸ்.எஸ்.ஏ.,திட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கானகளப்பணிக்கு கல்வியியல் பட்டதாரிகள் ஜூன்23க்குள் விண்ணப்பம் செய்யலாம் எனகொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைபதிவாளர் (பொறுப்புபிரேமலதா தெரிவித்துள்ளார்.

Tweet
இக்னோவில் பி.எட். படிப்பு... ஆகஸ்டில் நுழைவுத்தேர்வு : 20-06-2012
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில்2013ம் ஆண்டு பி.எட்., சேர்க்கைக்கானநுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனமண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.இந்த பி.எட். படிப்பில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ்2-வுக்கு பின் ஏதேனும் ஒரு 3 ஆண்டு பட்டப்படிப்புமுடித்திருக்க வேண்டும்.




Saturday, June 23, 2012

ஜித்தா-சுலைமானியா கிளை பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-06-2012 வெள்ளி முதல் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளை தொழுகை முறைகள் பற்றிய பிரசுரத்தை இந்த வார வெளியீடாக விநியோகித்து வருகின்றது. அல்ஹமதுலில்லாஹ்.

ஜித்தா-சுலைமானியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-06-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ.சௌக்கத் ஹுசைன் அவர்கள் குர் ஆன், ஹதீஸின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேகர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளைஆன்லைன் பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-06-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலமும், ஷர்ஃபியா கிளையும் இணைந்து நடத்திய ஆன்லைன் பயான் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோ. அப்துந் நாசர் அவர்கள் இஸ்லாத்தின் போர்களும், பாஸிஸத்தின் அக்கப்போர்களும் என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு செய்ய முடியாததால், இன்ஷா அல்லாஹ் வரும் 06-07-2012 அன்று இதன் இரண்டாம் பாக உரையை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.

TABUK ASTRA பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் TABUK ASTRA விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கடந்த 22/06/2012 வெள்ளிஅன்று  மஹ்ரிப்பிற்கு பின்பும், இஷாவிற்கு பின்பும் அவர்களின் 2 ரூம்களில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. 

இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்,  "அண்ணல் நபி [ஸல்] அழகிய பண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்

மேலும் இறுதியில் அவர்களுடைய மார்க்க சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

 

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை மர்கஸில் 22/06/2012 வெள்ளி அன்று ஜூம்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "அழைப்புப்பணியில் இபுராஹீம் [அலை] அவர்களின் முன்மாதிரி?!" என்ற தலைப்பில்: சத்திய மார்க்கத்தின்பால் மக்களை அழைப்பதின் அவசியத்தையும், அதில் இபுராஹீம் [அலை] அவர்களின் அழைப்புப்பணி எவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் மிகத் தெளிவானமுறையில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
மேலும் கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை து, தலைவர் சகோ, முஜாஹீத் அவர்கள் "இஸ்லாத்தை வெரும் சடங்காக பின்பற்றும் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும், சகோ, முஹம்மது சாலிஹ் அவர்கள் "புறம்பேசுவதை தவிற்ப்போம்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். 
இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லிம்களுக்கு வாரந்திர தொழுகை பயிற்ச்சி

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் 22-06-2012 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களுக்கு - கொள்கை விளக்கம், மற்றும் நபிவழித் தொழுகை செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டதுடன் திருக்குர்ஆன் - அல்ஹம்து சூரா, மற்றும் இதர சிறிய சூராக்களையும் முறையாக ஓத தர்பியா பயிர்ச்சி அளிக்கப்பட்டது.
இதில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.                                   


TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 21-6-2012 அன்று வியாழன் இரவு 11.30 முதல் 12.30 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்,  மதஹபுகளை பின்பற்றவேண்டுமா?  "வழிகெட்டக் கொள்கைகள்" பகுதி-12 என்ற தலைப்பில் சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21/06/2012 வியாழன்அன்று TNTJ தபூக் கிளை மர்கஸிற்கு மார்க்கத்தை அறியவந்த மதுரையைச் சேர்ந்த சகோதரர் சக்தி அவர்களை கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயலாளர் நிஜாம் அவர்களும் சகோதர வாஞ்சையுடன் வரவேற்று, உபசரித்து "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை!" என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்து, இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும், ஆதாரப்பூர்வமாக விளக்கிக்கூறினர். அவர்களுக்கு சகோ, P.J அவர்களின் திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?,இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை! மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஷ்தவருடன் நடந்த விவாதம், பைபில் இறை வேதமா? குர்ஆன் இறை வேதமா? விவாதம்!, இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.         
 

Wednesday, June 20, 2012

கல்வி செய்திகள்_TNTJ மாணவர் அணி


சட்டக்கல்லூரி விண்ணப்பங்கள் தேதி நீட்டிப்பு

 

எங்கெல்லாம்சட்டத்தின்படிஆட்சிநடக்கிறதோ,அல்லதுகுறைந்தபட்ச மரியாதை சட்டத்திற்குகொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சட்டப் படிப்புபடித்தவர்களுக்கு அதிக மரியாதையும் அதற்கேற்றவருமானமும் உள்ளது.ஆனால் இன்றையஇந்தியாவில் பலர் இந்த துறையை தேர்ந்தெடுக்கதயங்குவதைப் பார்க்கிறோம்உலகின் மிகப்பெரியஜனநாயக நாடான இந்தியாவில் இப்படிப்பைதேர்ந்தெடுப்பதில் உள்ள தயக்கம் என்பது சற்றுகவலைக்குரியது.  


Tweet
B.Arch விண்ணப்பங்கள் விநியோகம்...

B.Arch படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அண்ணாபல்கலைக்கழகத்தில் கொடுக்க தொடங்கியுள்ளனர்.ஆர்க்கிடெக்சர் எனப்படும் இந்த படிப்பு பலரால்விரும்பப்படும் ஒரு படிப்பாக உள்ளது.பொறியியலையும்கலையும் ஒன்றிணைந்த படிப்புஇது எனக் கூறலாம்பொறியியல் சார்ந்தவிஷயங்களை கலை நயத்துடன்  வடிவமைக்கஇந்தப்படிப்பு உதவுகிறது.


Tweet
என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வழிகாட்டுதல் செய்தி

+2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்வெளியான நிலையில் மாணவ மாணவிகளிடம் ஒருவிதமான குழப்பங்கள் இருக்கும். ஒரு சில மாணவமாணவிகள் எதிர்பார்த்ததை விட அதிகம்மதிப்பென்கள் எடுத்த மகிழ்ச்சியில் திகைத்துஇருப்பார்கள். ஒரு சில மாணவ மாணவிகள்எதிர்பார்த்த மதிப்பென்கள் கிடைக்கவில்லையேஎன்ற வருத்தத்தில் இருப்பார்கள்.




இரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வு ....

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக !!!

Tuesday, June 19, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 17 / 06 / 2012 ஞாயிறு அன்று ஜித்தா மண்டலத் தலைவர் சகோ. நவ்ஷாத் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கிளையின் செயல்பாடுகள் குறித்து அலோசிக்கப்பட்டது. இறுதியில் அர்-ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர் இல்லத்திலிருந்து கிளை பொறுப்பேற்ற இரண்டு குழந்தைக்கான ஆறு மாத தொகையை கிளை செயலாளர் நிஜாம் கிளையின் சார்பில் சகோ.நவ்ஷாதிடம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 




Monday, June 18, 2012

ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளையின் ஆன்லைன் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 22-06-2012 வெள்ளி அன்று மஃக்ரிப் தொழுகைக்குப்பின், சௌதி நேரம் 07.15 முதல் 08.45 வரை ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளை ஷர்ஃபியா பகுதியின் நிஹாத் அரப் கேம்ப் மாடியில் ஆனலைன் பயான் ஒன்றின ஏற்பாடு செய்துள்ளது. இதில் தாயகத்திலிருந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. அப்துந் நாசர் அவர்கள் இஸ்லாத்தின் போர்களும், பாசிஸத்தின் அக்கப்போர்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி உள்ளார்கள். இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர்கள், நண்பர்கள், கொள்கை சகோதரர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன் பெற செய்யவும்.

அன்புடன் அழைக்கின்றது,
ஜித்தா மண்டல நிர்வாகம்,
ஜித்தா - சௌதி அரேபியா.

Saturday, June 16, 2012

ஜித்தா-ஜிஸான் கிளை பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று குர் ஆன், ஹதீஸ் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சுவற்றில் ஒட்டியும், சகோதரர்களுக்கு விநியோகிக்கவும் பட்டு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சகோதரர் பி.ஜெ அவர்களின் தம்மாம் மண்டல கேள்வி பதில் நிகழ்ச்சி ஒளிபரபப்பட்டது. இதில் அவர் தனது முன்னுரையில் வெளி நாடு வாழ் முஸ்லிம்கள் தனது காசை ஹலாலான வழியில் சேமிப்பது குறித்து கூறியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் பின்பு குரான் பயிற்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் குர் ஆன் வகுப்பும் நடைபெற்றது. பின்பு மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 15-6-2012 வெள்ளி அன்று மஃக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கப்ர் வேதனை எனும் தலைப்பில் சகோ. ஹுசேனும், கியாமத் நாளின் அடையாளங்கள் எனும் தலைப்பில் அக்கிளையின் தலைவர் சகோ. செய்யது முஸ்தபாவும் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா-ஷர்ஃபியா கிளையின் தேசம் கடந்த தவ்ஹீத் பணிகள்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 15-6-2012 அன்று மக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர்களுக்கு உருது மொழியில் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சகோ. சௌகத் உசேன் அவர்கள் இஸ்லத்தின் அடிப்படை கொள்கைகள் பற்றி உருது மொழியில் உரை நிகழ்த்தினார்கள். 60க்கு அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் தாயிகள் பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-06-2012 வெள்ளியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் அஸா் முதல் மஃக்ரிப் வரை தாயிகளுக்கான பயிற்சி வகுப்பு கிளை தலைவர் சகோ.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. அதில் அதிகமான சகோதரர்கள் (புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர் உட்பட) கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.