Wednesday, March 20, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மனிதநேய சேவை


கடந்த 01-03-2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த மாற்றுமத சகோதரர் முத்துசாமி(வலமிருந்து இரண்டாவது நபர்) என்பவர் தபூக் கிளை நிர்வாகிகளை அணுகி தனது முதலாளி தனக்கு 3 மாதம் சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியும் அடித்து துன்புறுத்தியும் வந்தார், அதனால் தனது காதின் சவ்வு கிழிந்து கஷ்டப்படுவதாகவும், தனக்கு நியாயம் பெற்றுத்தருமாறும் கண்ணீரோடு கேட்டுக்கொண்டார். உடன் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அந்த சகோதரரின் விபரத்தை இந்திய துணை தூதரகத்திற்க்கு அறிவித்துவிட்டு தபூக்கில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சென்று சம்பந்தபட்டவரின் முதலாளி மீது வழக்கு பதிவு செய்தார், உடன் காவல்துறையினர் அந்த முதலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
அத்தோடு நில்லாமல் அவரை அழைத்துச்சென்று தபூக் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்தனர். வழக்கை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அந்த முதலாளிக்கு, முத்துசாமியின் 3 மாத சம்பளம் 3000 ரியால், இழப்பீடு 1500 ரியால், விமான டிக்கெட்டிற்க்கு 1500 ரியால் என 6000 ரியால் வழங்கும்படி உத்தவிட்டது. (ஒரு ரியால் என்பது சுமார் 15 ரூபாய் ஆகும்). அதனை பெற்று சகோ. அஜீஸ் முத்துசாமியிடம் ஒப்படைத்து அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15-03-2013 வெள்ளி அன்று அவரை தாயகத்திற்க்கு அனுப்பி வைத்தார். அவர் கண்ணீருடன் நமது நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தி தாயகம் திரும்பினார். 
நமது ஜமாத் மத இன வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கு உரிமையை பெற்றுத்தர பாடுபடுவைதை இது பறை சாற்றுவதுடன், அரபு நாட்டில் அந்நிய நாட்டினருக்கு நியாயம் கிடைப்பதில்லை என்ற வாதத்தை இந்நிகழ்வு தவிடுபொடியாக்குகிறது. குற்றம் செய்தவர் தன் நாட்டினரானாலும் உடனே அவரை கைது செய்த காவல்துறையும், இழப்பீடு வழங்கசொன்ன நீதித்துறையும் சட்டத்தைத்தான் பார்க்கிறதே தவிர, பிறநாடுகளைப்போல் அறிந்தவர் அறியாதவர் என்று பார்ப்பதில்லை என்பது மீண்டும் ஊர்ஜிதமாகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment