தீவிரவாதம் குறித்த செய்திகளை வெளியிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய காட்ஜூ ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தீவிரவாத மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழும் போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படும் வகையில்செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என காட்ஜூ கூறியுள்ளார்.
சிறுபான்மையினர் தேசிய கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தமக்கு எழுதிய கடிதத்தில், ஐதராபாத் வெடிகுண்டு தாக்குதலில் யூகத்தின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள காட்ஜூ, இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு வருவது பற்றியும்,இதனால் இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது என்றும்சச்சார் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தீவிரவாதம் குறித்தசெய்திகளை வெளியிடும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படும் படி செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்து நிலவுவதால் காவல்துறையினரும் எந்த ஒரு தாக்குதல் நடைபெற்றாலும், உரிய விசாரணை செய்யாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து வருகின்றனர் எனவும் காட்ஜூ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment