கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு, எரிச்சல், சோர்வு, தலைவலி, பார்வைக் கோளாறு... இவையெல்லாம் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அறிகுறிகள். நிலத்தில் பாடுபடும் விவசாயி கூட நிலத்தைவிட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம். ஆனால் கம்ப்யூட்டரை நாம் விடவே முடியாது போலிருக்கிறது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதை விட மோசமானது, கண்களைக் கெடுத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது. கண்ணும் கெடாமல், கம்ப்யூட்டரையும் விடாமல் இருக்க என்ன செய்வது?
* மானிட்டரை உங்கள் முகத்திலிருந்து 20 அங்குல தூரத்துக்கு அப்பால் வையுங்கள். மானிட்டர் 20 டிகிரி சாய்வாக இருக்கட்டும்.
* ஜன்னல் பக்கத்தில் மானிட்டர் இருந்தால் வெளி வெளிச்சமும், கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சமும் கண்களைக் கூச வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடும். எனவே அவ்வப்போது கண்களை மூடித் திறங்கள்.
* 20 - 20 - 20 விதியைக் கடைப்பிடியுங்கள். அதாவது 20 அங்குல தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும். 20 நிமிடத்துக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்காமல் 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாஸ்ட் ஃபுட்டை ஒரு பிடி பிடிக்காமல், கண்களுக்கு வளம் சேர்க்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment