Monday, March 11, 2013

சௌதி அரசாங்க பொதுமன்னிப்பு பற்றி


அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புள்ள சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. 

சில தினங்களுக்கு முன் சவுதி பத்திரிக்கைகளில் இந்திய வெளியுறவு அமைச்சரும், சவுதி வெளியுறவு அமைச்சரும் பேசி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதியில் ஒப்பந்த காலத்தை மீறி வேலை செய்துகொண்டிருக்கும் பணியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும், அப்படி இருப்பவர்கள், இந்திய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ அனுகுமாறு செய்தி வந்தது. அதனை தொடர்ந்து நமது மக்கள் வலைதளங்களிலும், முகநூல்களிலும், அதற்க்கான அவசர பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகளை இட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நம்மை பல ஊர்களில் இருந்தும் தொடர்புகொண்டு நாங்கள் வந்தால் உடன் தாயகம் திரும்ப முடியுமா என்று பலர் கேட்டுவருகின்றனர். இதனை உறுதி செய்ய ஜித்தாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை நாம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவர்கள் உங்களை போல் நாங்களும் அந்த செய்தியை பத்திரிக்கைகளில்தான் பார்த்தோம், இதுவரை அதிகாரப்பூர்வமான் எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை, அப்படி வந்தால் உடன் செய்து தருகின்றோம், இப்பொழுதைக்கு அதுபோன்று எதுவும் எங்களால் செய்யமுடியாது என்று கூறியதுடன் இதனை மக்களிடம் இதை கொண்டு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். 

எனவே இந்த செய்திகளை நம்பி யாரும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். பின்பு இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் உடன் தெரியப்படுத்துகின்றோம். அல்லாஹ் போதுமானவன்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment