அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 19/08/2012 ஞாயிறு அன்று மஹ்ரிப்பிற்கு பின் "ஈத்" பெருநாள் சந்திப்பு, நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை, முஸ்லீம்கள், பிறமத சகோதரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாற்றிய கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் வந்திருந்த அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்று TNTJ வின் ஏக்கமும் நோக்கமும்" என்ற ஒரு தலைப்பில் சிறப்பாக உரையற்றினார்கள். அடுத்து கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், கலந்து கொண்ட இருபாளருக்கும் விளக்கும் விதமாக இஸ்லத்தைப்பற்றிய ஓர் சிறிய அறிமுகவுரைக்குப் பிறகு "இனிய மார்க்கம், மற்றும் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் அழகிய முறையில் மிகவும் சிறப்பாக பதில் அளித்தார்கள். இறுதியாக கிளை பொருளாளர் சகோ, முஜாஹீத் அவர்கள், நிகழ்ச்சிக்காக பாடுபட்ட, உழைத்த, பங்களித்த அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறமத சகோதரர்கள் அனைவருக்கும் சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறை வேதமா?, இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும், மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிரிஸ்தவர்களுடன் நடந்த விவாதம், பைபில் இறை வேதமா? குர்ஆன் இறை வேதமா? விவாதம்!, இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கப்பட்டது. து.ஆ வுடன் இரவு உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Wednesday, August 22, 2012
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் ஈத் பெருநாள் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment