பித்ரா தொடர்பாக பிற மாவட்டங்களுக்கோ கிளைகளுக்கோ பரிந்துரை செய்வோர் கவனத்திற்கு...
கடந்த செப்டம்பர் 10 திருச்சி காஜாமலையில் மாநில நிர்வாகிகள் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் தலைமையில் காலை 10 மணிக்கு கூடியஇக்கூட்டம் இரவு எட்டு மணிக்கு நிறைவடைந்தது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து பித்ராவைத் திரட்டி அனுப்பும் மண்டலங்கள் அத்துடன் சில ஊர்களுக்குப் பரிந்துரை செய்யும் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சில ஊர்களில் 200, 300 ரூபாய்களுக்கே பித்ரா கிடைக்காமல் ஏழைகள் வாடும் போது வேறு சில ஊர்களில் 500, 600, 1000 என்று பித்ராவை அள்ளிக் கொடுப்பதற்குப் பரிந்துரைகள் காரணமாகி விடக்கூடாது.
அதிகமான பணத்தை அதிக மக்களுக்கு கொண்டு சேர்க்க சோம்பல் பட்டுக்கொண்டு தொகையை அதிகப்படுத்திக் கொடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் தங்கள் ஊர்களில் விநியோகிக்க இயலாமல் மற்ற ஊர்களுக்கு சில கிளைகள் பித்ரா தொகையை தானம் செய்துள்ளன. இது போல் நடக்காமல் இருக்கும் வகையில் பரிந்துரை அமைய வேண்டும்
கிளைகள் இல்லாத ஊர்களுக்கும், கிளைகள் இருந்தும் பித்ரா தவிர வேறு எந்தப் பணியும் செய்யாத கிளைகளுக்கும் செய்யப்படும் பரிந்துரையை ஏற்பதில்லை.
மண்டல நிர்வாகிகள் பரிந்துரை செய்யக் கூடாது. அந்தந்த ஊர் பெயரில் நிதி திரட்டித் தரும் கிளைகள் பரிந்துரை செய்தால் அதைத் தான் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தப் பரிந்துரையை மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தான் தலைமை வினியோகம் செய்யும்.
இப்படிக்கு
ரஹ்மத்துல்லாஹ்
No comments:
Post a Comment