அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நாம் பல வருடங்கள் உழைத்து அதில் சேமிப்பாக சிறிது தங்க நகைகள் வாங்கி தாயகம் செல்லும் பொழுது கொண்டு செல்கின்றோம். ஆனால் இப்பொழுது இந்திய அரசாங்கம் கற்காலத்தில் இருந்தது போல ஆண்கள் 10000 ரூபாய் மதிப்புள்ள நகையும், பெண்கள் 20000 ரூபாய் மதிப்புள்ள நகை மட்டும் கொண்டு செல்லலாம் என்று அதிபுத்திசாலிதனமான சட்டத்தை இயற்றி, தாயகம் திரும்பும் நம்மை பெரிதும் தொல்லை செய்து வருகின்றது. இந்த தொகையில் ஆண்கள் 4 கிராம், பெண்கள் 8 கிராம் கூட இன்றைய தங்க விலையில் வாங்க முடியாது. இதில் பெண்களூக்கு அதிலும் முஸ்லிம் பெண்களுக்கு சோதனை என்ற பெயரில் தரப்படும் தொல்லைகள் அதிகம். எனவே கீழ்கண்ட லிங்கில் நுழைந்து உங்களின் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்வதின் மூலம் உங்களின் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். அதனால் இன்ஷா அல்லாஹ் இந்த இந்த சட்டம் மாற்றப்படலாம்.
நௌஷாத் அலி-ஜித்தா
No comments:
Post a Comment