Wednesday, August 29, 2012
TNTJ ஜித்தா மண்டல பல்சுவை நிகழ்ச்சி
ஜித்தா-மக்கா கிளையின் மனிதநேய சேவை
Tuesday, August 28, 2012
ரஷாதியுடன் விவாத ஒப்பந்த விபரம்
Monday, August 27, 2012
உணர்வின் முக்கிய தகவல்
இறைவனின் திருப்பெயரால்…………… கடந்த வாரம் உணர்வு பணியாளர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் பெருநாள் கொண்டாடுவதற்காக முன் கூட்டியே சென்றதால் வெளிநாட்டுச் செய்திகள் பிரசுரிக்க முடியவில்லை. மேலும் இந்த வாரம் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா விநியோக புகைப்படங்கள் அனைத்தையும் இந்த வாரமே பிரசுரிக்க வேண்டியிருந்த்தால் சமுதாயச் செய்திகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வழக்கமாகப் பரசுராமாகும் 20 பக்கத்தை விட இந்தவாரம் 40 பங்களுடன் இன்ஷா அல்லாஹ் வெளியாக இருக்கின்றது. இந்தப் பொறுப்பில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கினற காரணத்த்லதால் தாங்கள் எஙடகளுடைய சூழ்நிலையைக் கருத்தல் கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் இதுபோல் இனி வரும் காலங்களில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கின்றொம். வரும் 17:2 இதழ் முதல் வழக்கமாக வெளிநாட்டுச் செய்திகள் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்படிக்கு எம். அப்துல் ஹமீது |
ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-08-2012 அன்று ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ நௌஷாத் தலைமையில், சகோ.முஸ்தபாவின் ஏகத்துவம் என்ற தலைப்பில் சிறிய உரையுடன் நடந்தது. இதில் இன்ஷா அல்லாஹ் வரும் 28-09-2012 அன்று மண்டல சார்பில் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் வகையில் உள்ள நடத்தப்பட பல்சுவை நிகழ்ச்சி பற்றியும் அதில் நடத்தப்பட உள்ள இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ மற்றும் இரவு உணவுவிற்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, August 25, 2012
ஜித்தா-தபூக் கிளை தனி நபர்கள் தாஃவா
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை, TABUK HARAM PLAZA கம்பெனியில் பணிபுரியும் ஆயங்குடி MNP-விடியல் குருப்பைச் சேர்ந்த 4 சகோதரர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும் ,கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் கடந்த 23/08/2012 வியாழன் அன்று இஷாவிற்கு பின் அவர்களின் கேம்பில் சென்று கொள்கை விளக்கம் மற்றும் கலந்துரையாடல் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை TABUK AL MAJHAL கம்பெனியில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் மூலம் கடந்த 24/08/2012 வெள்ளி அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின் கேம்பில் மார்க்க சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 24/08/2012 வெள்ளி அன்று ஜூம்.ஆவிற்கு பின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "வாழ்க்கையே வணக்கமாக" என்ற தலைப்பில், மனிதன் மிக எளிதான முறையில் கடைபிடிக்க தக்க மார்க்கத்தைத்தான் அல்லாஹ் மார்க்கமாக வழங்கியுள்ளான் என்பதை அனைவரும் முழுமையாக கடைபிடிக்கத்தக்க வகையில் மிக தெளிவாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாலர் சகோ, முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியிள் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர தர்பியா வகுப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 23/08/2012 வியாழன் அன்று இரவு 11:30 முதல் 01 மணிவரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், "வழிகெட்டக் கொள்கைகள்" [பகுதி-20] இஜ்மா என்பது எந்த ஒரு அடிப்படையும் அற்ற வரட்டு வாதம், என்ற தலைப்பில் சகோ. P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்துக் கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக்கொண்டனர். மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
Thursday, August 23, 2012
ஜித்தா-ஜிஸான் கிளை பொதுக்குழு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-08-2012 திங்கள் அன்று ஜித்தா மண்டல ஜிஸான் கிளை பொதுக்குழு மண்டல நிர்வாகிகள் தலைமையில் நடந்தது. இதில் கிளை செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்பு கிளைக்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில்
தலைவராக சகோ. அப்துல் ஜப்பார் (அம்மாப்பேட்டை) 0507527356
து. தலைவராக சகோ.அபுசாலி (காரைக்கால்) 0502306306
செயலாளராக சகோ. சாதிக் (மேலக்காவேரி) 0509544818
து. செயலாளராக சகோ. ஜாஃபர் (வீர சோழபுரம்) 0508625567
பொருளாளராக சகோ. சிக்கந்தர் பாட்ஷா ( பார்த்திபனூர்) 0502805574
தேர்ந்தெடுக்கப்பட்டனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-ஜிஸான் கிளையில் ஆன்லைன் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-08-2012 அன்று ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளையில் பெருநாள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளை அமைப்பாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்கள் முன்னிலையில், கிளை செயலாளர் சகோ. ரியாஜ் அஹமது அவர்கள் துவக்க உரையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஜித்தா மண்டல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். சுமார் 60 பேர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரும் முன் உரைத்த இஸ்லாம் புத்தகம் (60 புத்தகங்கள்) வழங்கப்பட்டது. மேலும், தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்க வேண்டும் என்ற தலைப்பிலும் மற்றும் பல தலைப்புகளிலான சி.டிக்கள் 200 இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மண்டல தலைவர் சகோ. நௌஷாத் மற்றும் மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி மாநில மண்டல செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார்கள். இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
Wednesday, August 22, 2012
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் ஈத் பெருநாள் சந்திப்பு
அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 19/08/2012 ஞாயிறு அன்று மஹ்ரிப்பிற்கு பின் "ஈத்" பெருநாள் சந்திப்பு, நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை, முஸ்லீம்கள், பிறமத சகோதரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாற்றிய கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் வந்திருந்த அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்று TNTJ வின் ஏக்கமும் நோக்கமும்" என்ற ஒரு தலைப்பில் சிறப்பாக உரையற்றினார்கள். அடுத்து கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், கலந்து கொண்ட இருபாளருக்கும் விளக்கும் விதமாக இஸ்லத்தைப்பற்றிய ஓர் சிறிய அறிமுகவுரைக்குப் பிறகு "இனிய மார்க்கம், மற்றும் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் அழகிய முறையில் மிகவும் சிறப்பாக பதில் அளித்தார்கள். இறுதியாக கிளை பொருளாளர் சகோ, முஜாஹீத் அவர்கள், நிகழ்ச்சிக்காக பாடுபட்ட, உழைத்த, பங்களித்த அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறமத சகோதரர்கள் அனைவருக்கும் சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறை வேதமா?, இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும், மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிரிஸ்தவர்களுடன் நடந்த விவாதம், பைபில் இறை வேதமா? குர்ஆன் இறை வேதமா? விவாதம்!, இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கப்பட்டது. து.ஆ வுடன் இரவு உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜி்த்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா வகுப்பு 20.08.2012 அன்று காலை 10:30 முதல் மாலை 4 வரை மண்டல நிர்வாகிகள் தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது. சகோ.அல் அமீன் வரவேற்புரை நிகழ்ச்சி பற்றி விளக்கினார். தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.சையது முஸ்தபா ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நீச்சல் போட்டி , மதிய உணவுக்குப் பிறகு தாயகத்திலிருந்து TNTJ- யின் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந் நாசர் ஆன்லைன் மூலம் சத்தியமும் நித்தியமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினார். அடுத்ததாக பொறுப்பாளர்கள் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் மற்றும் அப்துல் பாசித் பவர் பாய்ண்ட் மூலம் கடையநல்லூர் கிளைகள் மற்றும் வளைகுடா கிளைகள் செய்து கொண்டிருக்கிற மாக்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து மார்க்கம் சம்பந்தமான கேள்வி கேட்டு பதில் அளித்தவர்களுக்கு சிறந்த பரிசும் வழங்கப்பட்டது. இதில் எழுபதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்து லில்லாஹ். |
ரஷாதியுடன் விவாத ஒப்பந்த விபரம்
Sunday, August 19, 2012
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-30)
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -18-08-2012 சனி அன்று ரமளான் பிறை 30 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 30 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, August 18, 2012
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-29)
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -17-08-2012 வெள்ளி அன்று ரமளான் பிறை 29 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 29 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்(நாள்-28)
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -16-08-2012 வியாழன் அன்று ரமளான் பிறை 28 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 28 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். |