அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 31/01/2013 வியாழன் அன்று வீட்டு பணிபெண்ணாக பணிபுரியும் இலங்கை -வண்டாரவலயைச் சேர்ந்த சகோதரி மேனகா அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இலங்கை சகோ. மேகராஜ் அவர்களின் சிங்கள மொழி பெயர்ப்புடன் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறி, கலீமா சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் அவர் தனது பெயரை பாத்திமா என்றும் மாற்றிக்கொண்டார். இறுதியில் அவருக்கு சிங்கள மொழியிலான முக்கிய 15 நூல்களையும் 10 ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment