அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.
நாம் அனைவரும் ஒரு குறுகிய காலகட்டத்திற்க்கு இவ்வுலகில் வாழவந்தவர்களாக இருக்கின்றோம். நாம் அனைவரும் ஒரு நாள் மரணத்தின் ருசியை அறியகூடியவர்களாகவே இருக்கின்றோம். இதில் நம்மோடு வாழ்ந்த பலரின் மரணம் ஒரு சம்பவமாகவே இருக்கின்றது. ஆனால் ஒருசிலரின் மரணம் நம்முல் ஒரு தாக்கத்தையும், படிப்பினையையும் ஏற்படுத்த கூடியாத அமைகின்றன. அப்படி ஒரு சகோதரர் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
தஞ்சை மாவட்டம் மேலத் திருப்பூந்துருத்தியை சேர்ந்த சகோ. முஹம்மது அலி அவர்கள் ஜித்தாவின் சுலைமானியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். குறைந்த சம்பளத்தை கொண்டு தன் குடும்பத்தை ஓரளவு செம்மையாக கவனித்து வந்ததோடு, தன் பிள்ளைகளையும் வாழ்வில் தனியாக நின்று சம்பாதிக்கும் அளவிற்க்கு உயர்த்திவிட்டார். அவர்கள் தவ்ஹீத் கொள்கையில் ஈடுபாடாக இருக்கவேண்டும் என்று கவலைபட்டதுடன் அதனை அவர்களிடம் எடுத்துரைத்தும் வந்தார்.
இந்த நிலையில் நமது ஜமாத் செயல்பாடுகளை அறிந்து அதில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்க்கு தன்னாலான அதிகபட்ச பங்களிப்பை செய்யவேண்டும் என்று எண்ணி தன்வேலை நேரம் முடிந்த உடன் ரோட்டோரம் உள்ள பெப்ஸி டின், குப்ஸ் இவைகளை திரட்டி அதனை விற்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயை மாநில தலைமை கட்டிட நிதிக்கு பலமுறை அளித்து வந்தார். மண்டல நிர்வாகிகள் அவரிடம் இந்த தொகையை கொண்டு உங்கள் குடும்பத்திற்க்கு ஏதாவது செய்துகொள்ளுங்கள், இத்தனை கஷ்டப்பட்டு திரட்டிய தொகையை முழுவது ஜமாத்திற்க்கு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் உங்களின் மனதை பார்ப்பவனாக இருக்கின்றான், இன்ஷா அல்லாஹ் அவன் உங்களை பொருந்திக்கொள்வான் என்று சொன்னால். அவர், எனக்கு கிடைக்கும் சம்பளம் எனக்கும், என் குடும்பத்திற்க்கும் போதும், இந்த வேலையை நான் செய்வது ஜமாத்திற்க்கு என்னாலான பங்களைப்பை செய்யத்தான், இதனை நீங்கள் மறுத்தால் இந்த வேலையை நான் விட்டுவிடுவேனே தவிர அதனை தொடரமாட்டேன் என்று கண்டிப்புடன் கூறிவிடுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தனக்கு வயதாகிவிட்டது என்றும் ஊரில் இருந்து தொழில் செய்யலாம் என்று உள்ளேன், அதனால் ஒன்வேயில் செல்கிறேன் என்று கூறி தாயகத்திர்க்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 16-02-2013 அன்று வஃபாத்தாகி விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜு ஊன். 17-02-2013 அன்று காலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
சகோதரர்களே அந்த சகோதரரின் கபுர் மற்றும் மறுமை வாழ்வு வெற்றிக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து.ஆ செய்வோம். அவரின் பங்களிப்புகளை அல்லாஹ் பூரணமாக ஏற்று அவருக்கு ஸதகத்துல் ஜாரியா நன்மையை கியாமத்வரை வாரி வழங்கவும் து.ஆ செய்வோம். அவரின் நன்மைகளில் பங்களிக்கும் ஆர்வத்தை நமக்கும் தரவேண்டுமெனவும் அப்போது து.ஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment