அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் சார்பில் 08-02-2012 வெள்ளி அன்று மக்கா பயணம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அனேகர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்ததால் 5 பேருந்துகளில் 265 பேர்கள் கலந்துகொண்டனர். காலை 7 மணிக்கு புறப்பட்ட பேருந்துகள் 8.30 மணிக்கு ஹீரா குகையை அடைந்தது. காலை உணவு மற்றும் ஹீரா குகை பகுதிகளை பார்த்து ஜும்.ஆ தொழுகைக்கு இக்குழு ஹரம் சென்றடைந்தது. மதிய உணவிற்க்குப்பின் தௌர் குகை பகுதி, அரஃபா திடல், ,மினா, முஸ்தலிஃபா பகுதிகளை பார்த்து இரவு உணவு விநியோகத்திற்க்குப்பின் ஜித்தா வந்தடைந்தது. அரஃபா திடலில் சகோ. தம்மாம் முனிப் அவர்கள் இறுதி நபியின் இறுதி பேருரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். திரும்பும் போது அனைத்து பஸ்களிலும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி சரியான பதில் அளித்தவர்களுக்கு பல தலைப்புகளில் 75 டி.வி.டிக்கள் விநியோகிக்கப்பட்டது. சிற்றுண்டியும் பழரசமும் மாலையில் வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இதுபோன்ற பயணங்களை அவ்வப்பொழுது ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
Saturday, February 9, 2013
TNTJ ஜித்தா மண்டல மக்கா பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment