Wednesday, February 27, 2013

அர்ஷின் நிழல் யாருக்கு?


நிலமெல்லாம் ரத்தம் - 33

33 - ஹீப்ருவுக்கு புத்துயிர் அளித்த யூதர்கள்:-

புராதன ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீன் யூதர்கள் முயற்சி மேற்கொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் மிக முக்கியமானதொரு சம்பவம் ஆரம்பமானது. மிக முக்கியமானதென்றால், மிக, மிக முக்கியமானது. கிறிஸ்துவ மதத்துக்குள் நடந்த ஒரு புரட்சி என்று அதனைச் சொல்லலாம். புராதன கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களிலிருந்து கருத்தளவிலும் தத்துவ ரீதியிலும் பெரிதும் வேறுபட்ட ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் எழுச்சியே அது. ஒட்டுமொத்த கிறிஸ்துவ ஐரோப்பாவிலும் அன்றைக்கு இதுதான் பேச்சு. ப்ராட்டஸ்டண்ட்டுகளின் எழுச்சி. கிறிஸ்துவ மதத்துக்குள் அத்தனை ஆழமான விரிசல் உருவாகும் என்று பலர் எதிர்பார்த்திராத சமயம் அது. அரசல்புரசலாக விரிசல்கள் இருந்தன என்றாலும், எதிர்ப்பாளர்கள் என்று வருணிக்கப்பட்ட ப்ராட்டஸ்டண்ட்டுகள் (Protest செய்ததால் அவர்கள் Protestants! அவ்வளவுதான். கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களுக்கும் இந்த எதிர்த்தரப்புக் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை, எதனால் பிரிந்தார்கள் என்பதெல்லாம் மிக விரிவாகப் பேசப்படவேண்டிய விஷயங்கள். நூற்றுக்கணக்கான நுணுக்கமான காரணங்கள் இதற்கு உண்டு. ஆனால், இந்தத் தொடரில் அதற்கெல்லாம் இடமில்லை.) இத்தனை தீவிரமாகப் புறப்படுவார்கள் என்றோ, இத்தனை எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள் என்றோகூட சநாதன கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கவில்லை. யூதர்களை விரட்டியடிப்பது என்கிற கிறிஸ்துவர்களின் தலையாய நோக்கத்தையே திசை திருப்பும் அளவுக்கு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் எழுச்சி ஐரோப்பாவை ஒரு ஆட்டு ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.

இதன் காரணகர்த்தா, மார்ட்டின் லூதர். ப்ராட்டஸ்டண்ட்டுகளின் பெருந்தலைவராக அடையாளம் காணப்பட்டவர். (இவர் ஜெர்மன் பாதிரியார். மார்ட்டின் லூதர் கிங் அல்ல.) ஆனால், கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள்தான், யூதர் விரோத நடவடிக்கைகளை அப்போது தாற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, ப்ராட்டஸ்டண்டுகளை கவனித்துக்கொண்டிருந்தார்களே தவிர, ப்ராட்டஸ்டண்டுகள் யூதர்களை விடுவதாக இல்லை. முக்கியமாக, மார்ட்டின் லூதர்.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி, ஹிட்லரின் காலம் வரை ஐரோப்பிய தேசங்களிலிருந்து யூதர்கள் மிகக் கொடூரமாகத் துரத்தப்பட்டதற்கும் நிகழ்ந்த படுகொலைகளுக்கும் ஆதிமூலக் காரணமாக யூத சரித்திர ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுவது மார்ட்டின் லூதரின் யூத விரோதப் பிரசாரங்களைத் தான். இதில் உள்ள உணர்ச்சிவசப்பட்ட வரிகளையும், மிகையான தகவல்களையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட, ஒருவர், இருவர் என்றில்லாமல் அத்தனை பேருமே இந்த விஷயத்தில் அவர் மீது கடும் கோபம் கொண்டு தாக்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்!

ப்ராட்டஸ்டண்டுகளுக்கு யூதர்கள் மீது அப்படியென்ன வெறுப்பு? இதற்குப் பிரத்தியேகக் காரணங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ப்ராட்டஸ்டண்டுகள் என்றாலும் அவர்களும் கிறிஸ்துவர்கள். அவர்களும் ஐரோப்பியர்கள். இதுதான் ஒரே காரணம். மற்றவர்களுக்கும் இது மட்டும்தான் காரணம். யூதர்களா, துரத்தியடி. இதற்கெல்லாம் ஒரு காரணம் வேறு வேண்டுமா என்ன? அன்றைய ஐரோப்பா மொத்தமே அப்படித்தான் இருந்தது. ஆனால் கிறிஸ்துவர்களிடையே புதிதாகப் பிரிந்து, தனியடையாளம் கண்ட ப்ராட்டஸ்டண்டுகள், இந்த அதிதீவிர யூத எதிர்ப்பின் மூலம் இன்னும் சீக்கிரமாகப் பிரபலமடைந்தார்கள் என்பதை மறுக்கமுடியாது! பின்னாளில் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களைக் காட்டிலும் ப்ராட்டஸ்டண்டுகள் என்றால் யூதர்களுக்குக் கூடுதலாகப் பற்றிக்கொண்டு வந்ததன் காரணமும் இதுதான்.

பிரச்னையின் ஆரம்பம், மார்ட்டின் லூதரின் ஒரு கடிதம்தான் என்று அடித்துச்சொல்கிறார்கள், யூத வரலாற்று ஆசிரியர்கள். (மார்ட்டின் கில்பர்ட் போன்ற சமீபகால ஆராய்ச்சியாளர்கள் கூட இக்கடிதத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை!) சற்று விவகாரமான அந்த விஷயத்தைக் கொஞ்சம் அலசவேண்டியது கட்டாயம். 1543-ம் ஆண்டு லூதர், தம்மைப் பின்பற்றும் கிறிஸ்துவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதக் கட்டுரைக்கு ளியீ tலீமீ யிமீஷ்s ணீஸீபீ ஜிலீமீவீக்ஷீ லிவீமீs என்று தலைப்பு வைத்தார். மிக விரிவாக, ஏழு பகுதிகளாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் சாரத்தைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

1. யூதர்களின் தேவாலயங்கள் எதுவும் செயல்படக்கூடாது. ஒன்று, எரித்துவிட வேண்டும். அல்லது, யாரும் உள்ளே போக முடியாதபடி பாழ்படுத்தி, குப்பைகளால் நிரப்பிவிட வேண்டும்.

2. இதனை வன்முறையாகக் கருதாமல், கடவுளுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக நினைக்கவேண்டும். தொடர்ந்து யூதர்கள் தம்மைக் குறித்தும் தமது சமூகம் குறித்தும் உயர்த்தியும் பெருமை பேசியும் செய்துவரும் பொய்ப்பிரசாரங்களை முறியடிக்க இதுவே ஆரம்பமாகும்.

3. தேவாலயங்கள் செயல்படுவதைத் தடை செய்யும்போது அவர்கள் தம் நடவடிக்கைகளை வீட்டிலிருந்தும் தொடரக் கூடும். அதனால் யூதர்களின் வீடுகளையும் இடித்துவிடுங்கள். தம்மைப் பற்றிய மிகையான மதிப்பீடுகள் கொண்ட யூதர்கள், ஜிப்ஸிகள் போல் திரியத்தொடங்கியபிறகாவது யோசிக்க ஆரம்பிக்கலாம். 

4. யூதர்களின் பொய்கள் அனைத்தும் அவர்களது மத நூல்களான தோரா, தால்மூத் ஆகியவற்றிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. அந்த நூல் பிரதி ஒன்று கூட அவர்கள் கையில் இருக்கக் கூடாது; கிடைக்கவும் கூடாது. அதற்காவன செய்யவேண்டும்.

5. யூத மதபோதகர்களை, குருமார்களை (Rabbi) அச்சுறுத்தி வைக்கவும். தொடர்ந்து அவர்கள் போதனைகளைத் தொடருவார்களேயானால் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

6. யூதர்களின் பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்யவேண்டும். வியாபாரம் உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் அவர்கள் எங்கேயும் நகர முடியாதபடி செய்துவிடுவது அவசியம். 

7. யூதர்கள் நிறைய சொத்து சேர்த்திருக்கிறார்கள். அவர்களது பணம், நகைகளைப் பறிமுதல் செய்யவேண்டும். அவை அனைத்தும் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை; வழிப்பறி செய்யப்பட்டவை என்பதை முதலில் உணரவேண்டும்.

8. இத்தனைக்குப் பிறகும் அவர்களால் நமக்கோ, நமது மனைவி மக்களுக்கோ, நமது ஊழியர்களுக்கோ, சகாக்களுக்கோ ஏதேனும் ஆபத்து வரும் என்று நினைப்பீர்களானால் அவர்களை வெளியேற்றத் தயங்கவேண்டாம். பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கின்றன. நீங்களும் செய்யலாம்; தவறில்லை.

ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களுக்கு மார்ட்டின் லூதர் எழுதியதாக யூத வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக்காட்டும் இக்கடிதத்தில் இன்னும் கூடப் பல திடுக்கிடும் உத்தரவுகள், யோசனைகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் அன்றைக்கு யூதர்கள் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையே வாழ நேர்ந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே மேற்கண்ட சில உத்தரவுக் குறிப்புகள்.

உண்மையில், எந்த ஒரு ஐரோப்பிய தேசத்திலும் யூதர்கள் பாதுகாப்பாக வாழமுடியாது என்று மிகத்தெளிவாகத் தெரிந்த காலகட்டம் அது. அச்சுறுத்தல்கள் பல்வேறு இடங்களிலிருந்து மிகக் கடுமையாக வரத் தொடங்கியிருந்தன. பிரான்ஸ், இத்தாலி, போலந்து, இங்கிலாந்து போன்ற தேசங்களில் யூதர்கள் தனியாகச் சாலையில் நடந்து செல்லவே பயந்தார்கள். எப்போதும் ஏதாவது ஓர் ஆயுதத்தை ரகசியமாகத் தங்கள் ஆடைகளுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள். கிறிஸ்துவர்களின் திருவிழாக் காலங்கள், கிறிஸ்துவ தேவாலய விழாக்கள் நடைபெறும் மாதங்களில் எல்லாம் கூடுமானவரை ஊரைவிட்டு வெளியே போய்விடப் பார்ப்பார்கள். எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் தேச எல்லையைக் கடந்து போய்விட மிகவும் விரும்பினார்கள்.

இந்தமாதிரியான காலகட்டத்தில் பாலஸ்தீனில் மீண்டும் யூதர்கள் இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது என்னும்போது வேறென்ன செய்வார்கள்?அணி அணியாகப் பாலஸ்தீனை நோக்கி வரத் தொடங்கினார்கள். துருக்கியப் பேரரசின் அங்கமாக இருந்த பாலஸ்தீனில் இம்மாதிரியான எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உடனடிக் காரணம். சொந்த ஊருக்கு இந்த சாக்கிலாவது போய்ச் சேர்ந்துவிட முடிகிறதே என்பது இன்னொரு காரணம். இப்படித்தான் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்த வகையில் பதினாறாம் நூற்றாண்டைக் காட்டிலும், பதினேழாம் நூற்றாண்டில் வந்தவர்கள் மிகவும் அதிகம். குறிப்பாக, கி.பி. 1648-ம் ஆண்டு யூதகுலம் ஹிட்லரின் தாத்தா ஒருவரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் பெயர் பொக்டான் ஷெமீயில்நிகி. (Bogdan Chmielnicki). கொசாக்குகள் (Cossack) என்று அழைக்கப்பட்ட அன்றைய கிழக்கு ஐரோப்பிய புரட்சியாளர்களின் தலைவர் இவர். லித்துவேனியா, போலந்து, உக்ரைன் போன்ற நாடுகளில் இவரது ஒரு சொல்லால் உந்தப்பட்ட கிறிஸ்துவர்கள், கூட்டம் கூட்டமாக, கொத்துக்கொத்தாக யூதர்களைக் கொன்று தள்ள ஆரம்பித்தார்கள். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்றெல்லாம் அவர்கள் சற்றும் பார்க்கவில்லை. ஒரு யூதரைக் கொன்றுவிட முடியுமானால் ஒரு கிறிஸ்துவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அப்போது சொல்லப்பட்டது. முதலில் கண்ட இடத்தில் வெட்டித்தள்ளிக்கொண்டிருந்தவர்கள், கொலை பழகிவிட்டதும் சித்திரவதை செய்து கொல்லலாம் என்று முடிவு செய்து விதவிதமான சித்திரவதை உத்திகளை யோசிக்கத் தொடங்கினார்கள். (பின்னாளில் இந்தக் கொசாக்குகளின் பரிமாண வளர்ச்சியாகத்தான் ஜெர்மனியில் ஹிட்லர் கால ஆட்சி இருந்தது.) 

கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து, அப்படியே சதையை இடுப்பு வரை உரித்தெடுப்பது, விரல்களைத் தனித்தனியே வெட்டி எடுத்து ஒரு மாலையாகக் கோத்து, வெட்டுப்பட்டவரின் கழுத்தில் அணிவித்து, கழுத்தை ரம்பத்தால் அறுப்பது, ஒவ்வொரு முடியாகப் பிடுங்கி முழுத்தலையையும் ரத்தக்காயமாக்கிவிட்டு அதன் மேல் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ஊற்றுவது என்று குரூரத்தின் பல்வேறு எல்லைகளை அவர்கள் திறந்து காட்டினார்கள். இந்தக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்த சில யூதர்கள், நீண்டதூரப் பிரயாணம் மேற்கொள்ள அவகாசம் இல்லாமல் உடனடி சாத்தியங்கள் தெரிந்த பால்கன் தீபகற்பத்துக்கும் ஜெர்மனிக்கும் ஹாலந்துக்கும் அகதிகளாகத் தப்பிப்போய்ப் பிழைத்தார்கள்.

இவர்கள் அல்லாமல் இன்னும் சில யூதர்கள் எங்குமே போக வழியின்றி வலுக்கட்டாயமாக கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி, அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிட்டதும் நடந்திருக்கிறது.(போலந்தில் மட்டும் பொக்டான் ஷெமீயில்நிகியின் காலத்துக்குப் பிறகு பதவிக்கு வந்த மன்னர், நிர்ப்பந்தத்தின்பேரில் கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்கள் மீண்டும் யூதர்களாகி, தம் மத வழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம் என்று அனுமதியளித்ததாகவும், அதன்படி சில ஆயிரம் பேர் தாங்கள் யூத மதத்தையே மீண்டும் கடைப்பிடிக்கிறோம் என்று அறிவித்ததாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய விரிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு விஷயம். யூத மதத்திலிருந்து கிறிஸ்துவத்துக்குப் போனவர்கள் உண்டே தவிர, வேறெந்த மதத்திலிருந்தும் யூத மதத்துக்கு ‘மாற’ முடியாது. அதற்கு அனுமதி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

இத்தனை களேபரங்களுக்கு இடையில் உயிர்பிழைத்து, பாலஸ்தீன் வரையிலுமேகூட வர முடிந்த யூதர்கள், நடந்த கதைகளை விலாவாரியாக எடுத்துச் சொன்ன கையோடு, அப்போது அங்கே பரவலாகிக்கொண்டிருந்த ஹீப்ரு மொழி மறுமலர்ச்சிப் பணிகளில் உடனடியாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்! போலந்திலிருந்து அப்படித் தப்பிவந்த ஒரு யூதர், தமது முன்னோர்களின் மொழியான ஹீப்ருவை முதல் முதலாகத் தமது நாற்பது வயதுக்கு மேல் கற்றுக்கொண்டு, தமது தேசத்தில் நடந்த யூத இனப் படுகொலைகளை விவரித்து அந்த மொழியில் ஒரு நூலே எழுதியிருக்கிறாராம்.

துரதிருஷ்டவசமாக இன்று அந்தப் புத்தகம் இஸ்ரேலில் கூடக் கிடைப்பதில்லை. கிடைத்திருக்குமானால், எத்தனை நெருக்கடி காலம் வந்தாலும் யூதர்கள் தமது இனத்தையும் மொழியையும் காப்பதற்கான பணி என்று எது ஒன்று சுட்டிக்காட்டப்பட்டாலும் எப்படி உடனே அதில் மூழ்கிவிடுவார்கள் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய ஓர் ஆவணமாகத் திகழ்ந்திருக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 17 மார்ச், 2005

தெரிந்து கொள்வோம் வாங்க

* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக்கையால் எழுதி நகல் எடுத்தார்களாம். 

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் 

"நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில். 

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார். 

* தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785-ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கொரியர்' என்னும் வார இதழ் தான். இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜான்சன். 

* 1841-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ். 

* இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை "சுக்ரினி'. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப் பெண். 

* இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1854 மே 6-ம் தேதி. அன்றைய கமிஷனர் பென்னி பிளாக் என்பவரால் வெளியிடப்பட்டது. 

*எவரெஸ்ட் சிகரத்திற்கு 1865-ம் ஆண்டில் தான் அப்பெயர் வந்தது. அதற்கு முன்பு சிகரம்-15 என்னும் பெயர் தான் வழங்கப்பட்டது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த நேரம், இந்தியாவில் எவரெஸ்ட் என்பவர் சர்வேயர் ஜெனரலாக இருந்தார். அவர் இமயமலைத் தொடரில் உள்ள சிகரங்களுள் சிகரம்-15 தான் உயரமான சிகரம் எனக் கண்டறிந்தார். அதனால், அவர் பெயரையே அந்த சிகரத்திற்கு சூட்டிவிட்டனர் 

* ஒரு புற்றிலுள்ள எறும்பு அடுத்த புற்றில் நுழைவதில்லை.
   தலை துண்டிக்கப்பட்டாலும் எறும்புகள் 20 நாட்கள் உயிருடன் இருக்குமாம். 
   வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து 106 நாட்கள் வரை உயிர் வாழுமாம். 
   ஒரு வாரம் வரை நீருக்கடியில் உயிருடன் வாழும். 

* சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் உள்ளது. 

* கி.மு.13-ம் நூற்றாண்டிலேயே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

* உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் 

*சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது? -ஆர்தர் ஹெய்ன்மென் (1925-ம் ஆண்டு) 

*நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன் 

*உலகின் மிகப் பழமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது? -ஹோசி ரியாகோன், ஜப்பான். 

*தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர்? -ஹோவர்ட் ஹக்ஸ் 

*உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி? -பர்ஜ் அல்-அராப் 

*அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி எந்த நகரில் உள்ளது?  பர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்(அமெரிக்கா) 

*அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்? -அரிஸ் டவர்ஸ் 

*உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம் ? -எல் புல்லி (ஸ்பெயின்) 

*அமெரிக்காவிலேயே முதலிடத்தில் இருக்கும் உணவகம்?-பெர் சி 

*தி பேட் டக் என்பது எந்த நாட்டின் பிரபல உணவகம்? -இங்கிலாந்து 

*பாஸ்தா என்பது எந்த நாட்டின் பிரபல உணவு? - இத்தாலி. 

*சால்சா என்ற உணவு எந்த நாட்டில் மிகவும் பிரபலமானது? -மெக்சிகோ 

*தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது? -இட்லி 

*காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர்? -ஸ்பெயின்

Tuesday, February 26, 2013

து.ஆ


TNTJ ஜித்தா-தபூக் கிளையின் மாற்றுமதத்தவருக்கான தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில், 23-02-2012 சனி அன்று தபூக் விமான நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தூய இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளித்து அவர்களிடம் இஸ்லாம் பக்கம் அழைப்பு விடுக்கப்பட்டது. பின்பு அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தக்கலோ (பிலிப்பைன்ஸ்) மொழியிலான குர்ஆன் மற்றும் 5 புத்தகங்கள் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா தபூக் கிளையில் தனிநபர் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில், கிளை நிர்வாகிகள் தபூக் பகுதியில் உள்ள தமிழக முஸ்லீம்களுக்கு ஏக இறைவனை பற்றியும், வணக்க வழிபாடுகள் பற்றியும் விளக்கி கூறி அவர்களுக்கு பல தலைப்புகளில் 10 நூல்களும், 20 டி.வி.டிக்களும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் ஜும் ஆதொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு சகோ. நிஜாம் மனிதன் சுமந்த பயணம் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அவர்கள் மனித நேயம் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீ அவர்கள் சோதிக்கப்படும் செல்வங்கள் என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினார்கள். இதில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் உட்பட சுமார் 50 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா - அல் சலாமா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் மரணத்திற்க்குப்பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 ஞாயிறு அன்று ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. இதில் சகோ. சேனவல்லி முஹைதீன் அவர்கள் உறுதியான இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு தாயகத்தில் இருந்து வந்த சகோ. அப்துல் காதர் அவர்கள் அங்கு கிளைகளின் செயல்பாடுகளைபற்றி விவரித்தார்கள். அதன்பின் ஜித்தா கிளை செய்யவேண்டிய பங்களிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வசனம்

Sunday, February 24, 2013

ஆதரவற்றோர்களுக்கு உதவுவோம் வாருங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களே, TNTJ மாநிலம் நடத்தும் ஆதரவற்ற சிறியோர் இல்லம், முதியோர் இல்லம் இவைகளுக்கு உங்களின் மேலான பங்களிப்பை செலுத்தி இம்மை மறுமை வெற்றியை அடைய அழைக்கின்றோம். தொடர்புக்கு 0533562686.

ஜித்தா மண்டலம் நிர்வாகிகள்.

Saturday, February 23, 2013

நிலமெல்லாம் ரத்தம் - 32

32 - யூதர்களும் ஒட்டோமான் அரசும்:-

ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து, போர்ச்சுகலும் யூதர்களை விரட்டியடிக்க முடிவு செய்தது. அதாவது, கி.பி. 1497-ம் ஆண்டு. இதெல்லாம் பின்னால் மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் செய்யப்போகிற மாபெரும் விரட்டல்கள், மிகப்பெரிய இனப்படுகொலைகளுக்கு ஒரு சிறு முன்னோட்டம் மாதிரி நடைபெற்ற சம்பவங்கள். யூத வெறுப்பு என்பது, தொட்டுத்தொட்டு காட்டுத்தீ மாதிரி தேச எல்லைகளைக் கடந்து ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்த சமயம். எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வுடனேயே யூதர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அந்தச் சமயத்திலும் அவர்கள் மொத்தமாக, குழுக்கள் குழுக்களாகத்தான் இருந்தார்கள். அதாவது, எந்த ஒரு இடத்திலும் ஒரு தனி யூதக்குடும்பத்தைப் பார்த்துவிடமுடியாது! மாறாக, ஒரு யூதக்குடும்பம் உங்கள் கண்ணில் தென்படும் இடத்தில் குறைந்தது ஐம்பது குடும்பங்கள் வசிக்கின்றன என்பதே அர்த்தம்.

கஷ்டங்களை அவர்கள் சேர்ந்தேதான் அனுபவித்தார்கள். திட்டங்கள் தீட்டப்படும்போதும் ஒருமித்த முடிவாகத்தான் எதையுமே செய்தார்கள். ஒரு தவறான முடிவை எடுக்க நேர்ந்தால்கூட தனியாக எடுக்க விரும்பாத இனம் அது.ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலிலிருந்து புறப்பட்ட யூதர்களில் பெரும்பாலானோரை அரபு தேசங்களுக்கே அனுப்புவது என்று யூத குருமார்களின் சபைதான் முதலில் தீர்மானித்தது. அந்தத் தேசங்களில் வாழ்ந்து வந்த மொத்த யூதர்களையும் கணக்கிட்டுப் பிரித்து, வேறு வேறு தேசங்களுக்கு அனுப்பினாலும், ‘மிக முக்கியமான நபர்கள்’ என்று அடையாளம் காணப்பட்ட அத்தனை பேரையும் அரபு தேசங்களுக்கே அனுப்பினார்கள்!

மிக முக்கியமான நபர்கள் என்றால், யூத குலத்துக்கு, அந்தக் காலகட்டத்தில் மிக முக்கியத் தேவை என்று கருதப்பட்ட நபர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், சட்ட நிபுணர்கள், ராஜதந்திரிகள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இப்படி. ஒரு நெருக்கடி நேர்ந்திருப்பதால் வேறு வேறு தேசங்களுக்குப் போக நேரிடுகிறது. போகிற இடங்களில் எல்லாம் பிரச்னையில்லாமல் வாழ முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. குறைந்தபட்சம், இனக் காவலர்கள் என்று கருதப்படுகிறவர்களாவது ஓரளவு பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பதற்காகவே அவர்களை அரபு தேசங்களுக்கு அனுப்பினார்கள் என்று பெரும்பாலான யூத சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மிகவும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விஷயம் இது. அரேபியர்களுடன் தான் யூதர்களுக்குப் பிரச்னை. அதுவும் ஜெருசலேமை முன்வைத்த பிரச்னை. நடுவில் கிறிஸ்துவர்கள் கொஞ்சகாலம் அந்த நகரை உரிமை கொண்டாடிவிட்டுத் திரும்பிப் போயிருக்கிறார்கள். மீண்டும் ஜெருசலேம் யூதர்களின் நகரம்தான் என்கிற கோரிக்கை அல்லது கோஷம் எழத்தான் போகிறது. இது யூதர்களுக்கு மட்டுமல்லாமல், அரேபிய முஸ்லிம்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்த விஷயம்.ஆனபோதிலும் அவர்கள் மத்தியில் போயிருப்பது, கிறிஸ்துவ தேசங்களுக்குப் போவதைக் காட்டிலும் நல்லது என்று யூத குருமார்கள் கருதினார்கள்!

கான்ஸ்டாண்டிநோபிள் என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்தான் அன்றைக்கும் ஒட்டோமான் பேரரசின் தலைநகரமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் உலகின் மிக முக்கிய நகரங்களுள் ஒன்றாகக் கருதப்பட்ட நகரம் அது. இன்றைய பாரீஸ் நகரம் போலக் கலைகளின் தாயகம். உலகக் கவிஞர்கள், ஓவியர்கள், மாபெரும் சிந்தனையாளர்கள் எல்லாரும் ஏதாவது மாநாடு கூட்டுவதென்றால் கான்ஸ்டாண்டிநோபிளில் நடத்தலாம் என்றுதான் முதலில் சொல்லுவார்களாம். அந்தளவுக்கு ஒட்டோமான் சுல்தான்கள், கலையை வளர்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

கலைகள் வளரும் இடத்தில் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துவத்துக்கும்கூட உரிய இட ஒதுக்கீடு இருந்தே தீரும். அந்த வகையில், ஐரோப்பா துரத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு கான்ஸ்டாண்டிநோபிள் இருகரம் நீட்டி வரவேற்பும் அடைக்கலமும் தந்துகொண்டிருந்தது அப்போது. கான்ஸ்டாண்டிநோபிளில் மட்டுமல்ல; அல்ஜியர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா, திமஷ்க் என்று அழைக்கப்பட்ட டெமஸ்கஸ், ஸ்மிர்னா, ஸலோனிகா என்று ஒட்டோமான் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு நகரங்களில் யூதர்களுக்கான தனிக் குடியிருப்புப் பகுதிகள் உருவாயின.

கொஞ்சம் இழுபறியாக இருந்த பாலஸ்தீன், 1512-ம் வருடம் முழுவதுமாக துருக்கிப் பேரரசரின் ஆளுகையின் கீழ் வந்துவிட்டது. இதில் அதிகம் சந்தோஷப்பட்டது, முஸ்லிம்களைக் காட்டிலும் யூதர்களே ஆவார்கள். பாலஸ்தீனிலும் யூதக்குடியிருப்புகளை மீண்டும் உருவாக்கித்தர அவர்கள் சுல்தானிடம் கோரிக்கை வைத்தார்கள். முன்னதாக, ஏற்கெனவே சுமார் முந்நூறு பேர் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்று சிலுவைப்போர்கள் முடிந்த சூட்டிலேயே பாலஸ்தீனுக்கு வந்து இழந்த இடங்களை மீண்டும் பெறுவது தொடர்பான ஏற்பாடுகளை ஓரளவு செய்து முடித்துவிட்டுத் தகவல் தந்திருந்ததால், அவர்கள் நம்பிக்கையுடன் சுல்தானிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்கள்.அப்போது துருக்கியின் சுல்தானாக இருந்தவர் பெயர், பயஸித். (Bayazid 2). மனமுவந்து குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யூதர்களேயானாலும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் தம் கடமை என்று நினைத்தார் அவர். ஆகவே, யூதர்கள் பாலஸ்தீனுக்குச் செல்வதில் தமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார். எத்தனை நூற்றாண்டுகள்! பரவசத்தில் துள்ளிக்குதித்தார்கள் யூதர்கள். மீண்டும் பாலஸ்தீன். மீண்டும் ஜெருசலேம்! (ஆனால் பெரும்பாலான யூதர்கள், பாலஸ்தீனில் கலிலீ (Galilee) என்கிற இடத்தில்தான் - இன்று இது சிரியா-குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக்கொள்ள முடிந்தது என்று தெரிகிறது.)

சிலுவைப்போர்கள் ஆரம்பித்த சூட்டில் தப்பிப்பிழைக்கப் புறப்பட்டுப் போன யூதர்கள், மீண்டும் தம் பிறந்த மண்ணை தரிசிக்கும் ஆவலில் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்து குழுக்களாக மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் என்பது, பொதுவாகவே மிகப்பெரிய காலகட்டம். அத்தனை இடைவெளிக்குப் பிறகு ஒரு தலைமுறை தனது பூர்வீக இடத்தை நோக்கி வரும்போது நியாயமாக, ஒரு புதிய இடம், புனித இடம், நமது முன்னோர்கள் இருந்த இடம் என்கிற உணர்ச்சி வேண்டுமானால் இருக்கலாமே தவிர, தாமே வாழ்ந்த மண்ணுக்குத் திரும்பி வந்தது போல உணர முடியுமா! உலகில் வேறெந்த சமூகமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படி உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால் யூதர்கள் அப்படித்தான் இருந்தார்கள்! யூதர்களின் சமூகத்தில் புதைந்திருக்கும் ஏராளமான ரகசிய ஆச்சர்யங்களுள் ஒன்று அது!

எத்தனை தலைமுறைகள் மறைந்தாலும், எந்த ஆட்சிகள் மாறினாலும், என்னதான் தாங்க முடியாத சூழல் தகிப்புகளுக்கு உட்பட நேர்ந்தாலும் ஜெருசலேம் என்று சொல்லிவிட்டால் போதும். எந்த நாட்டு யூதரும் அந்த திசை நோக்கி வணங்குவார். அவர்களது ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளையணு மட்டுமல்ல; ஜெருசலேம் அணுவும் பிறக்கும்போதே சேர்ந்து உதித்துவிடும் போலிருக்கிறது. பெற்றோர் முதல் மத குரு வரை எத்தனையோ பேர் சொல்லிச்சொல்லி வளர்த்துக்கொண்ட ஊர்ப்பாசம் ஓரளவு என்றால், ஜெருசலேத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட யுத்தங்களின் சத்தம் எக்காலத்திலும் அவர்களின் மனக்காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். அது தங்கள் மண், தங்கள் மண் என்று தினசரி ஒரு தியானம் போலச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.

சரித்திரத்தில், எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர்களாகவே கூட விட்டு ஓடியிருக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் அந்த நகரை விட்டு நிரந்தரமாகப் பிரிவது என்று சிந்தித்துப் பார்த்ததே கிடையாது. அவர்கள், இறைவனின் விருப்பத்துக்குரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜெருசலேம் நகரம், இறைவனும் இறைத்தூதர்களும் குடிகொண்ட பூமி. இந்த எண்ணம்தான். இது ஒன்றுதான். இதைத்தவிர வேறு எதுவுமே கிடையாது!

1512-ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கி, யூதர்கள் பாலஸ்தீனுக்கு வரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு யூதக்குடும்பமும் சிறிய அளவில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டன. அல்லது சிறு பண்ணைகளை நிறுவி ஆடு, மாடுகள் வளர்க்கத் தொடங்கினார்கள். கொஞ்சம் வசதி மிக்கவர்கள் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டார்கள். இந்த சுய தொழில்கள் பரவலாக பாலஸ்தீனில் வாழவந்த அத்தனை யூதர்களாலும் மேற்கொள்ளப்பட்டவை. முதல் சில ஆண்டுகளில் ஏதோ செய்து பிழைக்கிறார்கள் என்பதற்கு மேல் யாருக்கும் அதைப்பற்றிப் பெரிதாக சிந்திக்கத் தோன்றவில்லை. ஆனால் நான்கைந்து வருடங்கள் கழிந்ததும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிலும் காய்கறி, எண்ணெய் வித்துக்கள், பால், பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்ற பொருள்களின் முழு விற்பனையாளர்கள் யூதர்களாகவே இருந்தார்கள்! அரேபியர்களோ, கிறிஸ்துவர்களோ இந்த வியாபாரங்களில் மருந்துக்குக்கூட இல்லை!

யூதர்களை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். வாழ்வின் மீது அவர்களுக்கு உள்ள தீவிரமா, தமது இருப்பை நியாயப்படுத்தத்தான் இப்படிக் கடுமையாக உழைக்கிறார்களா, அல்லது தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகத்தான் இப்படி எடுக்கும் அத்தனை பணிகளிலும் ஏகபோக அதிபதிகளாவதற்குப் பாடுபடுகிறார்களா? எது அவர்களை இத்தனை தீவிரமாகச் செயல்பட வைக்கிறது என்பதற்கு இன்றுவரை விடை இல்லை. 

ஆனால் ஒன்று உறுதி. ஒரு யூதர் ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறார் என்றால், அதில் மற்றவர்களைக் காட்டிலும் அவருக்குத்தான் வெற்றியின் சாத்தியங்கள் அதிகம் தென்படும். ஏதாவது செய்து தன்வசப்படுத்திக்கொள்வது என்கிற வழக்கம், யூதர்களின் தனி அடையாளமாகக் காணப்பட்டு, காலப்போக்கில், யூத மதத்தின் இயல்பாகவே அது சித்திரிக்கப்படத் தொடங்கிவிட்டது! உண்மையில் மதத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது, அந்த இனத்தவர்களின் இயல்பு. அப்படியே காலம் காலமாகப் பழகிப்போய்விட்டார்கள்.

பெரும்பாலான யூதக்குடும்பங்கள் சிரியாவில்தான் குடிபெயர முடிந்தது என்றாலும் ஓரளவு யூதர்கள் இன்னும் கீழே இறங்கி ஜெருசலேம் வரையிலும் வந்து வாழவே செய்தார்கள். இந்தக் காலகட்டத்தில் ஜெருசலேத்துக்குக் குடிவந்த யூதர்கள், நான்கு யூத தேவாலயங்களையும் (Synagogues) புதிதாக அங்கே கட்டினார்கள். (மிகச் சமீபகாலம் வரை இந்தப் பதினாறாம் நூற்றாண்டு யூத ஆலயங்கள் இருந்தன. 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன் மண்ணில் உருவானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போது இந்த யூத தேவாலயங்கள் முஸ்லிம் போராளிகளால் இடிக்கப்பட்டன. இந்த விவரங்கள் பின்னால் வரும்.)

இழந்த செல்வம், செல்வாக்கு, நிலங்கள் போன்றவற்றைத் தங்கள் சொந்த மண்ணில் மீண்டும் பெறுவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஒட்டோமான் அரசு எந்தத் தடையும் செய்யவில்லை. யூத சரித்திரத்தில், அவர்கள் கவலையின்றித் தூங்கிய காலங்களில் இதுவும் ஒன்று! இந்தக் காலகட்டத்தில்தான் யூதர்கள் தமது புராதன புராணக் கதைகளை, தொன்மையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பேரிலக்கியங்களை, மத நூல்களை மீட்டெடுக்கும் முயற்சியையும் ஆரம்பித்தார்கள்.

அது ஒரு மிகப்பெரிய கதை. யூதர்களின் புனித மதப்பிரதிகளான தோரா (Tora), தால்மூத் (Talmud) உள்ளிட்ட சில அதிமுக்கியமான விஷயங்கள் அனைத்தும் புராதன ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டவை. அதாவது சுமார் நாலாயிரம் வருடப் புராதன மொழி. சரித்திரம் முழுவதும் உயிர் வாழ்வதற்காகவும், பிழைப்பு நடத்துவதற்காகவும் உலகின் பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயர்ந்து தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து இறந்த யூதர்கள், தமது ஹீப்ரு மொழியைக் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தார்கள். எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ, அந்தந்த தேசத்தின் மொழியே யூதர்களின் மொழியாக இருந்தது. 

ஆனால் ஹீப்ரு முழுவதுமாக அழிந்துபோய்விட்டது என்று சொல்வதற்கில்லை. மிகச்சில ஆசார யூதர்கள் விடாமல் அம்மொழியைப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள்தான். ஆனாலும் எண்ணிக்கையில் அத்தகையவர்கள் மிகவும் குறைவு. மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவந்த ஹீப்ரு மொழி, தன் பழைய முகத்தை இழந்து, அந்தந்தப் பிராந்திய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளாகி, வேறு வடிவமெடுத்திருந்தது அப்போது.

இதனால், அந்தத் தலைமுறை யூதர்களுக்குத் தம் புராதன மத நூல்களை, புராண இதிகாசங்களைப் படித்து அறிவது இயலாத காரியமாக இருந்தது. ஆனால், அவர்கள் தம் தொன்மங்களைத் தெரிந்துகொண்டே தீரவேண்டும் என்று யூத மதகுருக்கள் மிகத்தீவிரமாக எண்ணினார்கள்.அதற்கான முயற்சிகளை முதலில் விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னால் நிகழவிருக்கும் யூதகுலத்தின் மாபெரும் எழுச்சிக்கு அந்த மொழிப்புரட்சிதான் முதல் வித்தாக அமையப்போகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 மார்ச், 2005

குர்ஆன் வசனம்

Friday, February 22, 2013

பாஸிஸத்தின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு ஏன்?

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ? புரிந்து கொள்ளுங்கள் இஸ்லாமிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய சகோதரர்களே.

நன்றி- Rajesh Deena

குர் ஆன் வசனம்

Wednesday, February 20, 2013

சிறு நீரகத்தை (கிட்னியை) உணவின் முலம் பாதுகாப்பது எப்படி?

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிற து என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவரங்களும், அதனால் ஏறபடக்கூடிய பிரச் சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில் லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப்பிணிகளால் அவதிப்படுகின் றன ர்

.1)சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர் தான். தாகம் எடுத்தால் (மட்டுமே) உடனே நீரை பருக வேண்டும்.
2) பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.(ஈஸ்ட் கலந்தது)


3) கல்லில் சுட்ட பதார்த்தங்களை [தோசை, ஆம்லைட்) தவிர்க்க வேண் டும். (வேண்டுமென்றால் மாதம் இரு முறை சாப்பிடலாம்.)
4)அதிகம் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பது தவறு. (இரண் டிலும் உப்பு சத்து அதிகம் உள்ளதால் சீறு நீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.)
5) எண்ணையில் பொறித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்க் க வேண்டும்.
6) பால்கன்று குட்டி குடிக்கதனேஒழிய மனிதன் குடிக்க இல்லை. இதை நாம் புரிந்து கொண்டு ஆக வேண்டும்.பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற் றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.
7) புகைப்பிடித்தல், புகையிலை உபயோகி த்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்க வும்.
8) வலிமாத்திரை சிறுநீரகங்களை பாதிக்கு ம் சிறிய வலிகளுக்கு கூட மருந்து கடையி ல் வலிமாத்திரை சாப்பிடுவோருக்கு நாள டைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப் புண்டு.
9) அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.


10)அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
11)அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள் வது.
12)முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகை கள்) சேர்த்தல்
13)குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
14) குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
15)குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
16) சிறுநீரை அடக்கிக்கொள்வதை த் தவிர்க்க வேண்டும்
17)பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்க ளைத் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட உணவு முறைகளை கடை பிடி த்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension) , நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


மருந்து
———-
நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இத னால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறு நீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டி யுள்ளது. இதனால்தான் அவை கூடிய சீக்கிரமே செயலி ழக்கிறது.

1)சிறுநீரக நோயாளிகளுக்கு தண்ணீரு க்கு அடுத்தபடியாக உயரிய மருந்து -உண் ணா நோன்பு. வாரத்தில் ஒருநாள் அலுவ லகங்கள், தொழிற்சாலைகளுக்கு விடு முறை விடுவதுபோல், மது வயிறு, குடல் , கழிவு மண்டலங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. உண்ணாவிரதம் இருப்பதால், நம் உடம்பிலுள்ள ஒட்டுமொத்த ரத்தமும் , கழிவு மண்டல சுத்திகரிப்பில் பயன்படு த்தப்படுகிறது. இதனால் சிறுநீரகக் கழிவுகள் விரைவில் வெளி யேற வாய்ப்பு கிட்டுகிறது.
2) உண்ணாவிரதத்துடன் சூரிய சக்தி குளியலும் எடுத்தால், உடம் பின் திரவக்கழிவுகள் வியர்வை யாக வெளியேறிவிடும். இதனால் சிறுநீரகங்களுக்கு போதுமான ஓய்வு கிட்டும். வேலைப் பளுவும் குறைகிறது.
3) உடலில் தண்ணீர் குறையும்போ து சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தின மும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவதும் மதியம் முள்ளங் கி சேர்த்து கொள்வதும் நல்ல பலனளிக்கும்.
4) வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற் களைக் கரைக்கும் தன்மை கொண்டவை ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன.

ஆயு‌‌ர்வேத‌மருந்து
-————————-
1) வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க்கொ‌ள்ளலா‌ம். இந்த கிழமைக‌ ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், விள‌க்கெ‌ண்ணெ‌ ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து சாக (வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌ வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க் கு கு‌ளி‌க்க வே‌ண் டு‌ம்.
2)அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கரு வே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரகம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேரட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள் ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெதுப் பான ‌நீரை‌ப் பருகுத‌ல் ந‌ல்லது.

இயற்கை மருத்துவம்
——————————
1)தர்பூசணியால் மஞ்சள் நிற சிறு நீர் மாறும்.
2)முந்திரி பழத்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
3)எலுமிச்சையால் சிறுநீர் கடுத்தல் மறையும்.
4)நெல்லியால் நல்ல நலம் கிட்டும்” என்கிறதுமேலு‌ம், ‌
5)காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்று ட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படும். க‌யிறுதா‌ண்டு‌ம் உடற்ப‌யி‌ற்‌சி செ‌ய் த‌ல் ‌மிகவும் ந‌ல்லது.


6)வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற் ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

இவ‌ற்றைசெ‌ய்து வ‌ந்தா‌ல் ‌ சிறு‌‌நீரக‌க் க‌ற் க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌ நீரக‌க்க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்க ளையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

குர் ஆன் வசனம்

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கிளை ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா-கடையநல்லூர் கிளை கூட்டம் 17-02-2013 ஞாயிறு அன்று இஷாவிற்க்குப்பின் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்கள் கடையநல்லூர் மர்கஸிற்க்கு வசூலித்த விபரங்களை பகிர்ந்துகொண்டு, அந்த தொகையை மண்டலம் மூலம் கிளைகளுக்கு அனுப்பிய விபரத்தை தெரிவித்ததோடு, பற்றாக்குறை தொகையை திரட்டுவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் மஷூரா இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-மக்கா கிளையில் அவசர ரத்ததானம்

சௌதி அரேபியா தாயிப் நகரத்தில் தனியார் வீட்டில் ஓட்டுனராக பணிபுரியும் நாகை மாவட்டம் தேரழந்தூரை சேர்ந்த சகோ. ஜாஃபர் அலி(நீல நிற உடை அணிந்து அமர்ந்திருப்பவர்) அவர்களுக்கு மக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 23-02-2013 அன்று இருதய அறுவை சிகிச்சை செய்ய 8 யூனிட் ரத்தம் தேவைப்படுவதாக உதவிகேட்டு ஜித்தா மண்டலம் மக்கா கிளை நிர்வாகிகளுக்கு 19-02-2013 அன்று கோரிக்கை வந்தது. உடன் அதற்க்கான நபர்களை தயார் செய்து அன்றே மருத்துவமனைக்கு சென்று 8 யூனிட் ரத்தம் கொடுத்துவந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, February 19, 2013

Car A\C................Very important


ALERT: Please note and circulate.......

Do not turn on A/C immediately as soon as you enter Your .... CAR!

It is recommended that you open the windows and door to give time for
the interior to air out before you enter. Benzene is a toxin that affects your
kidney and liver, and is very difficult for your body to expel this toxic stuff.




Please open the windows after you enter your car and do not turn ON the
air-conditioning immediately. According to a research done, the car dashboard,
sofa, air freshener emits Benzene, a Cancer causing toxin (carcinogen- take note
of the heated plastic smell in your car). In addition to causing cancer, it poisons
your bones, causes anemia, and reduces white blood cells. Prolonged exposure
will cause Leukemia, increasing the risk of cancer may also cause miscarriage.


Acceptable Benzene level indoors is 50 mg per sq. ft. A car parked indoors with
the windows closed will contain 400-800 mg of Benzene. If parked outdoors
under the sun at a temperature above 60 degrees F, the Benzene level goes up
to 2000-4000 mg, 40 times the acceptable level... & the people inside the car will
inevitably inhale an excess amount of the toxins.


It is recommended that you open the windows and door to give time for
the interior to air out before you enter. Benzene is a toxin that affects your
kidney and liver, and is very difficult for your body to expel this toxic stuff.

 
 


Hindu scholar says, Prophet Muhammad greatest person in the history of mankind

Prophet Muhammad greatest person in the history of mankind, says Hindu scholar
Arab News - Farhan Iqbal
Friday 8 February 2013
Last Update 8 February 2013 3:53 pm

http://www.arabnews.com/prophet-muhammad-greatest-person-history-mankind-says-hindu-scholar

Islam is a wonderful religion and Prophet of Islam, Muhammad (peace be upon him), is the greatest person in the history of mankind, according to a renowned Hindu scholar in India. He also said that for learning and understanding Islam, Prophet's life and teachings are the best source.

The Hindu scholar, Swami Lakshmi Shankaracharya, said, "We are talking about Prophet Muhammad (peace be upon him) and we should keep it in our mind that he is the greatest individual in history. If anyone wants to know about Islam, one should judge Islam by Prophet's (peace be upon him) life and his teachings."
While delivering a lecture on "Seerat-un-Nabi" (Prophet's life) at a conference held in Patna, the capital city Bihar province, recently, Swami who is also the founder of Jan Ekta Manch, said that peace and humanity is the core teaching of Islam. But, unfortunately, most of the Muslims don't follow Islamic teachings and they hardly learn from the life of Prophet Muhammad (peace be upon him).

Exhorting Muslims, he urged, "It is the duty of every Muslim to save and protect the humanity, and that the Prophet would forgive his enemies and showed patience when he was harmed by others, this was his moral teachings which made Islam an international religion." He cited the stories of "Fatah-Al-Makkah" (Conquest of Makkah) when enemies of Islam were given the amnesty despite being made prisoners of war by the Muslims. On Jihad, he clarified that it has nothing to do with innocent killings or terrorism.

The first permission to take to arms was accorded in verse 22:39 of the Holy Qur'an, which reads: "Permission (to take up arms) is hereby given to those who attacked, because they have been wronged." The Holy Qur'an further says: "Fight, for the sake of Allah with those that fight against you, but do not be aggressive." He also cited extensively from the Hindu scriptures to validate Islam's endeavor to establish peace on earth.

It is interesting to note that the Hindu seer was initially very critical about Islam and its concept of Jihad. He considered Islam to be the root cause of global terrorism. This thinking had cropped up in his mind because of his study of negative materials on Islam and behavior of some Muslims. Later he wrote a book, "The History of Islamic Terrorism," too. However, on being urged to study Islam from its original sources, the Swami read the Holy Qur'an from cover to cover besides the life of Prophet Muhammad (peace be upon him). He realized that he had misunderstood Islam. While accepting his mistake he wrote sort of a rejoinder to such negative materials in a book titled, "Islam – Aatank ya Aadarsh" (in Hindi) and its English version, "Islam: Terror or Ideal Path." In this book, he clarified the real meaning of Jihad and why Islam is the religion of peace. He concluded that Muslims were enjoined to fight in self-defense to establish peace, without resorting to terror.

The conference was organized by Jamaat-e-Islami Hind, Bihar. Nayyaruzzaman, the regional president of the Jamaat, presided over the conference. He emphasized on the acquisition of true knowledge of Islam and practicing it as was done by the Prophet's companions.

Monday, February 18, 2013

நிலமெல்லாம் ரத்தம் - 31

31]  ஸ்பெயினில் வெளியேற்றப்பட்ட யூதர்கள்

அவ்வப்போது நடுவில் கொஞ்சம் இடைவெளி இருந்தது என்றபோதும் சுமார் நூற்றைம்பது ஆண்டுகால யுத்தம் என்பது சாதாரணமல்ல. பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய (கி.பி. 1095) சிலுவைப்போர்கள், கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில்தான் (கி.பி. 1250) ஒரு முடிவுக்கு வந்தன. ஜெருசலேத்தை மைய இலக்காக வைத்து நடத்தப்பட்ட இந்த யுத்தங்களால் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவும் பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமடைந்தது. திறமையற்ற சுல்தான்களின் மோசமான ஆட்சி ஒரு காரணம்தான் என்றாலும் தொடர் யுத்தங்கள், தேசங்களின் பொருளாதாரத்தை எத்தனை நாசமாக்கும் என்பதை விவரிக்கவே முடியாது. இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து அரபு தேசங்கள் எப்படி மீண்டன என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். 

அது நவீனகாலம் அல்ல. எண்ணெயெல்லாம் கண்டறியப்பட்டிருக்கவில்லை. மன்னராட்சி நடந்துகொண்டிருந்த காலம்தான். கஜானாவை நிரப்புவதென்றால் வரிப்பணம் ஒன்றுதான் ஒரே வழி. இந்த மாதிரி போர்க்காலங்களில் மக்களின் தலைமீது ஏகப்பட்ட வரிச்சுமை விழும். கட்டித்தான் தீரவேண்டியிருக்கும். வேறு வழியே இல்லை. புதிய வேலை வாய்ப்புகள் என்றெல்லாம் மக்கள் சிந்தித்துக்கூடப் பார்க்காத காலம். விவசாயப் பொருளாதாரம்தான் அடிப்படை. படித்தவர்கள் என்றால் ஆசிரியர்களாக இருப்பார்கள். படிக்காதவர்கள் விவசாயம் பார்ப்பார்கள். வேறு எந்தத் துறையிலும் அன்றைய மத்திய ஆசியா பெரிய வளர்ச்சி கண்டிருந்ததாகச் சொல்லமுடியாது.

தவிர, சிலுவைப்போர்கள் முடிந்துவிட்டதே என்று மூச்சுவிட்டுக் கொண்டிருக்கவும் அப்போது அவகாசம் இல்லை. உடனே மங்கோலியப் படையெடுப்பு ஆரம்பமாகிவிட்டது. மாதக்கணக்கில் முற்றுகை, அவ்வப்போது மோதல் என்று அது ஒரு பக்கம் கலீஃபாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தது. பாலஸ்தீன் முஸ்லிம்கள் தங்கள் சரித்திரத்திலேயே மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்த காலம் அது. அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல், சிலுவைப்போர் வீரர்கள் போய்விட்டார்கள் என்பதுதான். மீண்டுமொரு யுத்தம் என்று ஏதும் வருமானால், அதற்கு முன்பாகக் கொஞ்சம் வளமை சேர்த்து வைத்துவிட மிகவும் விரும்பினார்கள். கொஞ்ச நஞ்ச காலமா? கி.பி. 1099 தொடங்கி 1187 வரை சிலுவைப்போர் வீரர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம். சலாவுதீன் என்றொரு சுல்தான் மட்டும் துணிவுடன் அவர்களை எதிர்க்க முன்வராவிட்டால் இந்தச் சுதந்திரம் சாத்தியமில்லை. நூறாண்டுகால அடிமை வாழ்விலிருந்து மீண்டெழக் கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. சரித்திரத்தின் அத்தனை பக்கங்களிலும் விடாப்பிடியாக அவர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த யூதர்கள் அப்போது எங்கே போய்விட்டார்கள்? ரொம்ப சரி. ஜெருசலேத்தை கிறிஸ்துவர்கள் கைப்பற்றிய நாளாகவே மாற்று மதத்தவர்களுக்கு அங்கே ஆபத்துதான். மாற்று மதத்தவர் என்றால் யூதர்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களும்கூடத்தானே? கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தார்கள். குப்பையை அள்ளிப் போடுவதுபோலப் பிணங்களைக் குவித்து மொத்தமாக எரித்தார்கள். கொடுமைதான். நரகம்தான். தாங்கமுடியாத அவலம்தான். ஆனால் ஒருத்தர் என்றால் ஒருத்தர் கூடவா மிச்சமில்லை? எங்கேதான் போய்விட்டார்கள் இந்த யூதர்கள்? மிக, மிக முக்கியமான கேள்வி இது. நம்புவது மிகவும் சிரமம் என்றாலும் சரித்திரம் சுட்டிக்காட்டும் மிகப்பெரிய உண்மை இது. சிலுவைப்போர் வீரர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பாலஸ்தீனிலிருந்து அத்தனை யூதர்களும் இடம் பெயர்ந்து போய்விட்டார்கள்!

அப்படித் தப்பிப்போன யூதர்களில் சுமார் ஐயாயிரம் பேரை கிறிஸ்துவர்கள் பல்வேறு நாடுகளில் வெட்டிக்கொன்றது உண்மையே என்றாலும், மிச்சமுள்ள யூதர்கள் ஒளிந்து வாழ்ந்து உயிர் பிழைத்துவிட்டதும் உண்மை. கட்டக்கடைசியாக ஜெருசலேத்திலிருந்து தோல்வியுடன் திரும்பிய சிலுவைப்படையினர், வழியில் பெய்ரூத்தில் பதுங்கியிருந்த முப்பத்தைந்து யூதக்குடும்பங்களை மொத்தமாகக் கொன்று வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வேறு சில நூறு யூதர்களை அடிமைகளாக அவர்கள் ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் சில சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

யூதர்களின் இந்த அழிவு, தலைமறைவு, நாடோடி வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதுபவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் தொடுவதில்லை. நெருக்கடி மிக்க அந்த நூற்றைம்பது ஆண்டு காலத்தில் ஏன் அவர்கள் பாலஸ்தீனின் விடுதலைக்காக அரேபியர்களுடன் இணைந்து போரிடவில்லை என்பதுதான் அது! விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சிறு கைகலப்புச் சம்பவங்களின்போது, தற்காப்புக்காக யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து கிறிஸ்துவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். ஹெய்ஃபா (பிணீவீயீணீ) என்ற இடத்தில் நடந்த ஒரு சண்டையில் சில நூறு யூதர்கள், முஸ்லிம்களுடன் சேர்ந்துகொண்டு கிறிஸ்துவர்களை எதிர்த்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், மாபெரும் யுத்தங்கள் நடந்த காலங்களிலெல்லாம் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு யூதர்களின் மீது முதல் முதலாக வெறுப்புத் தோன்றியதன் ஆரம்பக் காரணம் இதுதான். உமர் தொடங்கி, சலாவுதீன் வரையிலான இஸ்லாமிய ஆட்சியாளர்களில் பெரும்பாலானோர் மதத்துவேஷம் இல்லாதவர்களாகவே அப்போது இருந்திருக்கிறார்கள். யூதர்கள் முஸ்லிம்கள் இரு தரப்பினருமே ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள் என்கிற புராண நம்பிக்கையின் அடிப்படையிலும், இரு தரப்பினருமே உருவமற்ற ஒரே இறைவனை வணங்குபவர்கள் என்கிற ஆன்மிகக் காரணத்தின் அடிப்படையிலும் ஒற்றுமையாக வாழவேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு பெரும் நெருக்கடி என்று வரும்போது எதிர்த்து நின்று சமாளிக்கத் தோள் கொடுக்காமல், சொந்த சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்பொருட்டுக் காணாமல் போய்விட்ட யூதர்களை, அங்கேதான் அரேபியர்களுக்குப் பிடிக்காமல் போனது. இது மிக முக்கியமானதொரு தருணம். சிலுவைப்போர் காலத்தில் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து ஒரு பக்கத்தில் நின்றிருப்பார்களேயானால் பின்னால் மூண்ட பெரும்பகையின் வீரியம் கணிசமாகக் குறைந்திருக்கக்கூடும். ஒரு வேளை அந்த நெருக்கடி நேர ஒற்றுமை நிரந்தர ஒற்றுமையாகக்கூட மலர்ந்திருக்க முடியும். (ஸ்பெயினில் யூதர்கள் அமைதியாக வாழ்ந்த காலம் என்பது முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி புரிந்த காலம்தான் என்று அத்தனை யூத சரித்திர ஆய்வாளர்களும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.)

ஆனால் இது எதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சுருக்கமாகச் சொல்வதென்றால் நெருக்கடி நேரத்தில் யூதர்கள் ‘காணாமல் போய்விட்டார்கள்’. கொஞ்சம் விரித்துச் சொல்லுவதென்றால், குறைவான மக்கள்தொகை கொண்ட சமூகம் மேலும் சிறுத்துவிடாதிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கை அது.

கி.பி. 1210-ல் யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிடும் என்கிற சூழ்நிலை உருவானபோதுதான் முதல் முதலில் சுமார் முந்நூறு யூதர்கள் பாலஸ்தீனுக்குத் திரும்பி வருகிறார்கள். அவர்களும் கூட, குடும்பத்துடன் திரும்பி வந்தவர்கள் அல்லர். மாறாக, மத குருக்கள், சட்ட நிபுணர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் அடங்கிய ஒரு ஆய்வுக் குழுவாகவே அவர்கள் பாலஸ்தீனுக்கு வந்தார்கள். யூதர்கள் அங்கே விட்டுச்சென்ற நிலங்களைத் திரும்பப் பெற்று, மீண்டும் யூதர்களை அங்கே குடியமர்த்த முடியுமா, அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை ஆராய்வதற்காக அவர்கள் வந்தார்கள்.

ஏனெனில், அன்றைய சூழ்நிலையில் ஐரோப்பாவில் கிறிஸ்துவ ஆட்சியாளர்களின் கீழே யூதர்கள் வாழ்வது சாதாரணமான காரியமாக இல்லை. காரணமே இல்லாமல் யூதர்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள். ஒரு நாடு, இரண்டு நாடுகள் என்றில்லை. எங்கெல்லாம் கிறிஸ்துவம் தழைத்ததோ, அங்கெல்லாம் யூதர்கள் அவதிப்படத் தொடங்கினார்கள். அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் எங்குமே கிடைக்கவில்லை. சுய தொழில் செய்யவும் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன. ஒரு பெட்டிக்கடை வைப்பது கூட மாபெரும் பிரச்னையாக இருந்தது. கிறிஸ்துவர்கள் வாழும் வீதிகளில் யூதர்கள் வாடகை கொடுத்துக்கூடத் தங்கமுடியாது. கிறிஸ்துவ உணவகங்களில் அவர்கள் உணவருந்த முடியாது. (தனியாக ஓட்டல் நடத்தலாமா என்றால் அதுவும் கூடாது!) ஐரோப்பாவெங்கும் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவும் யூதர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகவும் நடத்தப்பட்டதாக பொதுவாகச் சொல்லுவார்கள். உண்மையில் யூதர்களை அங்கே கிறிஸ்துவர்கள், ‘மக்களாகவே’ நடத்தவில்லை என்பதுதான் சரி. எத்தனை நூற்றாண்டுகள் கழிந்திருந்தாலும் ஆதிகாலத்து வன்மமும் விரோதமும் அன்றைக்கு அடிக்கடி நினைவுகூரப்பட்டன. ஒரு இயேசுநாதரை யூதர்கள் கொன்றதற்காக ஒட்டுமொத்த யூத இனமுமே அழிவதுதான் சரி என்பதுபோன்ற கருத்தாக்கம் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது.

ஆனால், இதுமட்டுமே காரணம் அல்ல. தமக்குக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்புகளைக்கூட யூதர்கள் அன்று மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு யூதருக்கு, ஒரு சிறு கடை வைத்துப் பிழைக்க வாய்ப்புக் கிடைத்துவிட்டதென்றால் நிச்சயம் அவருக்குத் தெரிந்த இன்னொரு பத்திருபது பேருக்காவது வேலை வாய்ப்பு உறுதியாகிவிடும். கவனத்துக்கு எட்டாமலேயே அடுத்த சில காலத்துக்குள் அந்தப் பிராந்தியத்தில் இருபது யூதக்கடைகள் எப்படியோ தோன்றிவிடும். ஒரே ஒரு யூதருக்கு ஏதாவது பெரிய உத்தியோகம் கிடைத்துவிட்டால் போதும். தமது திறமையால், வேலையைத் தக்கவைத்துக்கொள்வதோடு கூட, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அலுவலகத்திலேயே எப்படியாவது இன்னும் சில யூதர்களை அவர் ஏதாவதொரு பணியில் அமர்த்திவிடுவார். 

ஒருவர், பத்துப்பேர், நூறுபேர் என்றில்லை. ஒட்டுமொத்த யூத குலத்தின் இயல்பு இது. திறமையிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் நிகரற்றவர்களாக இருந்தார்கள். அதைக்கொண்டு தமது சொந்த சமூகத்தினரை முன்னேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பொருளாதார ரீதியில் கொஞ்சம் மேம்பட்ட தரத்தில் இருந்த அத்தனை யூதர்களும் அந்தந்த தேசத்து ஆட்சியாளர்கள் மட்டத்தில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு தமது சமூகத்தினரின் நலனுக்காக ரகசியமாக நிறைய காரியங்களைச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகக் கணக்கு வழக்கில்லாமல் கையூட்டுத் தரவும் அவர்கள் தயங்கியதில்லை. வேண்டியதெல்லாம் யூதர்களுக்குத் தனியாக ஒரு குடியிருப்புப் பகுதி. உழைத்துப் பிழைத்துக்கொள்ள அனுமதி. தொல்லைகள் ஏதுமிருக்காது என்கிற உத்தரவாதம். அவ்வளவுதான். தனிக் குடியிருப்பு என்பது தவிர, மற்றவை எல்லாமே நியாயமான கோரிக்கைகள்தாம். ஆனாலும் அதற்கே அவர்கள் கையூட்டுத் தரவேண்டிய நிலைமை அன்றைக்கு இருந்தது. வாங்குவதற்கும் ஆட்கள் இருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இது பெரும்பான்மை கிறிஸ்துவர்களுக்கு எப்போதும் பிரச்னையாக இருந்தது. இதனாலேயே ஒரு யூதரையும் பிழைக்கவிடக் கூடாது என்று ஒட்டுமொத்த ஐரோப்பாவும் கருதத் தொடங்கியது. யதார்த்த காரணங்களுக்குப் புராதன காரணங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, யூதர்களுக்கு எதிரான வன்முறையை அவர்கள் கட்டவிழ்த்துவிடத் தொடங்கினார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் ஐரோப்பாவில் வாழ்வது மிகவும் சிரமம் என்கிற நிலைமை முதல் முதலில் உருவானது. எந்த ஊரில், எந்த நாளில், எந்தக் கணத்தில் முதல் கொலை விழும் என்கிற கேள்வி தினமும் அங்கே இருந்தது.

கி.பி. 1492-ல் முதல் முதலில் மிகப்பெரிய அளவில் யூதர்களை வெளியேற்றத் தொடங்கியது ஸ்பெயின். மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் யூதர்கள் அப்போது அங்கே வசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நிற்கவைத்துப் பட்டியல் தயாரித்து, ஒருவர் மிச்சமில்லாமல் தேசத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்று அப்போது ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த மன்னர் ஃபெர்டினாண்ட் (ரிவீஸீரீ திமீக்ஷீபீவீஸீணீஸீபீ) உத்தரவிட்டார். அதிகக் கால அவகாசம் இல்லை. உயிர்பிழைக்க வேண்டுமென்றால் ஊரைக் காலி செய்வது தவிர வேறு வழியில்லை.

காலம் காலமாக உழைத்துச் சேர்த்த சொத்து சுகங்கள் அத்தனையையும் அப்படியே விட்டுவிட்டு யூதர்கள் ஸ்பெயினை விட்டுப் புறப்பட்டார்கள். சுமார் தொண்ணூறாயிரம் பேர் அப்போது துருக்கி ஒட்டாமான் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். சுமார் இருபத்தைந்தாயிரம் பேர் ஹாலந்துக்குப் போனார்கள். இருபதாயிரம் பேர் மொராக்கோவுக்கு. பத்தாயிரம் பேர் பிரான்ஸுக்கும் இன்னொரு பத்தாயிரம் பேர் இத்தாலிக்கும். ஒரு ஐயாயிரம் பேர் மட்டும் இன்னொரு ஐரோப்பிய தேசத்துக்குப் போவது எப்படியானாலும், ஆபத்துதான் என்று தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து அட்லாண்டிக் கடல் தாண்டி வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் போய்ச் சேர்ந்தார்கள். இவர்களுள் மத்திய ஆசியாவுக்கு முஸ்லிம் தேசங்களுக்கு வந்தவர்கள்தான் அதிகம். அங்கேதான் பாதுகாப்பு அதிகம் என்பது அவர்களது நம்பிக்கை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 மார்ச், 2005

Sunday, February 17, 2013

சகோ. முஹம்மது அலி மரணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.

நாம் அனைவரும் ஒரு குறுகிய காலகட்டத்திற்க்கு இவ்வுலகில் வாழவந்தவர்களாக இருக்கின்றோம். நாம் அனைவரும் ஒரு நாள் மரணத்தின் ருசியை அறியகூடியவர்களாகவே இருக்கின்றோம். இதில் நம்மோடு வாழ்ந்த பலரின் மரணம் ஒரு சம்பவமாகவே இருக்கின்றது. ஆனால் ஒருசிலரின் மரணம் நம்முல் ஒரு தாக்கத்தையும், படிப்பினையையும் ஏற்படுத்த கூடியாத அமைகின்றன. அப்படி ஒரு சகோதரர் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

தஞ்சை மாவட்டம் மேலத் திருப்பூந்துருத்தியை சேர்ந்த சகோ. முஹம்மது அலி அவர்கள் ஜித்தாவின் சுலைமானியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். குறைந்த சம்பளத்தை கொண்டு தன் குடும்பத்தை ஓரளவு செம்மையாக கவனித்து வந்ததோடு, தன் பிள்ளைகளையும் வாழ்வில் தனியாக நின்று சம்பாதிக்கும் அளவிற்க்கு உயர்த்திவிட்டார். அவர்கள் தவ்ஹீத் கொள்கையில் ஈடுபாடாக இருக்கவேண்டும் என்று கவலைபட்டதுடன் அதனை அவர்களிடம் எடுத்துரைத்தும் வந்தார். 

இந்த நிலையில் நமது ஜமாத் செயல்பாடுகளை அறிந்து அதில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்க்கு தன்னாலான அதிகபட்ச பங்களிப்பை செய்யவேண்டும் என்று எண்ணி தன்வேலை நேரம் முடிந்த உடன் ரோட்டோரம் உள்ள பெப்ஸி டின், குப்ஸ் இவைகளை திரட்டி அதனை விற்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயை மாநில தலைமை கட்டிட நிதிக்கு பலமுறை அளித்து வந்தார். மண்டல நிர்வாகிகள் அவரிடம் இந்த தொகையை கொண்டு உங்கள் குடும்பத்திற்க்கு ஏதாவது செய்துகொள்ளுங்கள், இத்தனை கஷ்டப்பட்டு திரட்டிய தொகையை முழுவது ஜமாத்திற்க்கு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் உங்களின் மனதை பார்ப்பவனாக இருக்கின்றான், இன்ஷா அல்லாஹ் அவன் உங்களை பொருந்திக்கொள்வான் என்று சொன்னால். அவர், எனக்கு கிடைக்கும் சம்பளம் எனக்கும், என் குடும்பத்திற்க்கும் போதும், இந்த வேலையை நான் செய்வது ஜமாத்திற்க்கு என்னாலான பங்களைப்பை செய்யத்தான், இதனை நீங்கள் மறுத்தால் இந்த வேலையை நான் விட்டுவிடுவேனே தவிர அதனை தொடரமாட்டேன் என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தனக்கு வயதாகிவிட்டது என்றும் ஊரில் இருந்து தொழில் செய்யலாம் என்று உள்ளேன், அதனால் ஒன்வேயில் செல்கிறேன் என்று கூறி தாயகத்திர்க்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 16-02-2013 அன்று வஃபாத்தாகி விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜு ஊன். 17-02-2013 அன்று காலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

சகோதரர்களே அந்த சகோதரரின் கபுர் மற்றும் மறுமை வாழ்வு வெற்றிக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து.ஆ செய்வோம். அவரின் பங்களிப்புகளை அல்லாஹ் பூரணமாக ஏற்று அவருக்கு ஸதகத்துல் ஜாரியா நன்மையை கியாமத்வரை வாரி வழங்கவும் து.ஆ செய்வோம். அவரின் நன்மைகளில் பங்களிக்கும் ஆர்வத்தை நமக்கும் தரவேண்டுமெனவும் அப்போது து.ஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

Saturday, February 16, 2013

TNTJ ஜித்தா-யான்பு கிளையின் கடையநல்லூர் பள்ளிக்கான நன்கொடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் ஜித்தா மண்டலம் யான்பு கிளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தங்களின் பள்ளியின் கட்டுமான தேவைக்கு உதவிடுமாறு வேண்டுகோள் வைத்ததை அடுத்து யான்பு கிளையின் சார்பாக இந்திய ரூபாய் சுமார் 17000 தொகை அளவிற்கு 1200 சௌதி ரியால் ஜித்தா மண்டல தலைமையின் வழியாக 16-02-2013 சனி அன்று அனுப்பி கடையநல்லூர் மக்கா நகர் கிளைக்கு வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-ஸாஹர் கிளையில பிரசுரம் விநியோகம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஸாஹர் கிளையில் 13-02-2013 புதன் அன்று பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா-ஸாஹர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் அருளால், ஜித்தா மண்டலம் ஸாஹர் கிளையில் 13-02-2013 புதன் அன்று பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள் "நபிமொழி அறிவோம்" என்ற தலைப்பில் பல ஹதீஸ்களை வாசித்தார்கள். இதில் திரளான பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி மற்றும் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை கிளை நிர்வாகிகளால் பேச்சு பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு பயிற்ச்சி எடுத்து பயனடைந்தனர். 

ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பிலும், சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அர்ஷின் நிழலில் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் மறுமை வெற்றியே மகத்தானது என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினார்கள். இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-02-2013 வியாழன் அன்று தனி நபர் தாஃவா நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள், திருச்சியை சேர்ந்த சகோ. துரைமுருகன் அவர்களுக்கு தூய இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறி, பி.ஜெ மொழிபெயர்ப்பு குர் ஆனையும், 10 இஸ்லாமிய தமிழ் புத்தகங்களையும், பல்வேறு தலைப்புகளில் 25 டி.வி.டிக்களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இரு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று தபூக் விமான நிலையத்தில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாடு மிந்தனாவை சேர்ந்த இரு சகோதரர்கள் தூய இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளைக்கம் மற்றும் வணக்க வழிபாடுகளை பற்றி எடுத்துரைத்து, அவர்கள் மொழியிலான குர் ஆன் மற்றும் புத்தகங்களை வழங்கி கலீமாவை சொல்லிக்கொடுத்தார்கள். சகோ. ஜோஸப் அவர்கள் தனது பெயரை யூசுஃப் என்றும். சகோ. ரெய்னால்டோ தனது பெயரை அப்துல் ரஜாக் என்றும் மாற்றிக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்;

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை பேச்சு பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் பேச்சு பயிற்ச்சி வகுப்பு மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ அவர்களால் நடத்தப்பட்டது. இதில் சிலர் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்று பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் 05-02-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. நஸ்ருதீன் அவர்கள் து.ஆ வின் நன்மைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, February 15, 2013

நிலமெல்லாம் ரத்தம் - 30

30 - சலாஹுதீன் மரணமும், கிறிஸ்துவர்களும்:-

மூன்றாவது சிலுவைப்போரில் வெற்றி பெற்றபிறகு சுல்தான் சலாவுதீன் நெடுநாள் உயிர்வாழவில்லை. யுத்தத்தின்போது ஏற்கெனவே அவருக்கு விஷக்காய்ச்சல் கண்டிருந்தது. ஒருமாதிரி மனோபலத்தில் தாக்குப்பிடித்து யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் பெற்றிருந்தார். தாம் அதிகநாள் உயிர்வாழ மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. ஜெருசலேம் சிம்மாசனத்தில் அந்த முறை அமர்ந்த நாளாக ஊரில் ஏராளமான கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்ட ஆரம்பித்தார். வழிபாட்டிடங்கள் அவசியம்தான். ஆனால் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வல்லவை என்று சொல்லியிருக்கிறார் சலாவுதீன். யுத்தத்தில் ஒரு வெற்றி என்றால், அதன் அடையாளமாக ஒரு மசூதியாவது, தேவாலயமாவது எழுப்புவது அந்நாளைய மன்னர்களின் வழக்கம். சலாவுதீன் அந்த வெற்றிக்குப் பின் ஒரு மசூதியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மாறாக இடிக்கப்பட்டிருந்த அரசுக் கட்டடங்கள் பலவற்றைச் சீரமைத்து கல்லூரிகளாகத்தான் எழுப்பினார். இந்த வகையிலும் அவர் மற்ற கலீஃபாக்கள், சுல்தான்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவராகவே இருந்திருக்கிறார்!

கொஞ்சநாள் ஓய்வெடுக்கலாம் என்று ஜெருசலேத்திலிருந்து புறப்பட்டு சிரியாவில் உள்ள டெமஸ்கஸுக்குப் (அந்நாளில் திமஷ்க்.) போனவர், அங்கேயே கி.பி. 1193-ம் ஆண்டு உயிர்நீத்தார். வயதொன்றும் அதிகமில்லை. ஐம்பத்தாறுதான். சலாவுதீனின் மரணம் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் நிலைகுலையச் செய்தது என்று பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இதில் மிகை ஏதுமில்லை. ஏனெனில், அன்றைய தேதியில் சிலுவைப்போர் வீரர்களுக்கு சவால் விடக்கூடிய வல்லமை பொருந்தியவராக அவர் ஒருவர்தான் இருந்தார். அச்சமூட்டுவதற்காகவே லட்சக்கணக்கான வீரர்களை ஐரோப்பாவிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள் அப்போது. அந்தப் பெரும்படைகளைக் கண்டு மிரளாமல் எதிர்த்து நின்றவர் சலாவுதீன்.

போர்க்கள வீரம் மட்டுமல்ல காரணம். தனிவாழ்விலும் அப்பழுக்கற்ற சுல்தானாக அவர் இருந்திருக்கிறார். சுல்தான் இறந்தபிறகு அவரது சொத்து விவரங்களை ஆராய்வதற்காக ஓர் அரசுக்குழுவை நியமித்திருந்தார்கள். மன்னரின் தனிப்பட்ட வரவு செலவுக் கணக்குகள், அவர் தம் பெயரிலும் தமது உறவினர்கள் பெயரிலும் என்னென்ன அசையாச் சொத்துகள் வைத்திருக்கிறார் போன்ற தகவல்களைச் சேகரிக்கச் சென்ற அந்தக் குழு வியப்பில் மூர்ச்சையாகிப் போனது. காரணம், எத்தனை தேடியும் மன்னரின் சொத்தாக அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது ஒரே ஒரு தினாரும் ஆறு திஹ்ரம்களும் மட்டுமே. நமது மொழியில் புரியும்படி சொல்லுவதென்றால் ஒரு ரூபாய் அறுபது காசு. இதில் மிகையே இல்லை. தமக்கென்று ஒரு பைசா கூட கடைசிவரை சேர்த்து வைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார் சலாவுதீன்! அவரது மனைவி உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு இது விஷயமாக வருத்தம் இருந்திருக்குமோ என்னவோ, ஆட்சி அதிகாரத்தை மேலாடையாகக் கூட இல்லை; ஒரு கைக்குட்டை மாதிரிதான் வைத்திருந்தார் அவர்.

சலாவுதீனின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்லப்படுவது, எகிப்துக்கு அவர் ஓர் அரசியல் முக்கியத்துவம் பெற்றுத் தந்ததைத்தான். மத்திய ஆசியாவின் எத்தனையோ பகுதிகள் அந்நியப் படையெடுப்புகளாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் சிதறுண்டுபோன காலகட்டத்தில் சிதறிக்கிடந்த எகிப்தை சில்லறை சேர்ப்பதுபோல ஒன்று சேர்த்து, ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து, மத்தியக் கிழக்கின் மிக முக்கியமான முஸ்லிம் சாம்ராஜ்ஜியங்களுள் ஒன்றென அதற்கொரு தனியடையாளம் பெற்றுத்தந்தவர் சலாவுதீன். பாலஸ்தீன், சிரியா வரை அந்த ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரித்து, வலுவான பாதுகாப்பு அரணாகத் தாமே முன்னின்று காத்தவர் அவர். தவிர, பாக்தாத் கலீஃபாவின் அரசுடன் எகிப்துக்கு நிரந்தரமான, நீடித்த நல்லுறவு ஏற்படவும் காரணமாக இருந்தவர். அவரது மரணம் எப்படி முஸ்லிம்களுக்கு மாபெரும் துயரத்தைத் தந்ததோ, அதே அளவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஐரோப்பியர்களுக்குத் தந்ததையும் இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும்.

சலாவுதீன் இறந்து சரியாக இரண்டே ஆண்டுகளில் நான்காவது சிலுவைப்போருக்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டது ஐரோப்பா. அப்போது போப்பாண்டவராக இருந்தவரின் பெயர் செல்ஸ்டின் 3. ‘ஒரு சரியான தலைவன் இல்லாத பிரதேசமாக இப்போது பாலஸ்தீன் இருக்கிறது. சலாவுதீனுக்குப் பிறகு அவரளவு திறமைசாலிகள் யாரும் அங்கே இன்னும் உதிக்கவில்லை. ஆகவே, தாக்குவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று ஐரோப்பிய மன்னர்களுக்கு அவர் கடிதம் எழுதினார்.

போப்பாண்டவர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசமுடியாது. இத்தனைக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மானிய மன்னர்கள் முந்தைய சிலுவைப்போரின் இறுதிச் சமயத்தில் அவரவருக்கு ஏதோ ஓரளவில் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் ஊர் திரும்பியிருந்தார்கள். ஆனால், அரசு ரீதியில் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் பற்றி மதகுருவான போப்பாண்டவரிடம் விளக்கிக்கொண்டிருக்க முடியாது. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலெல்லாம் அரசர்கள் அளிக்கும் தீர்ப்புகளை போப்பாண்டவர்கள் மாற்றி எழுதும் வல்லமை பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்! ஆகவே, மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. வேறென்ன? நேரே புறப்பட்டு பாலஸ்தீனை அடையும் நோக்கமுடன் ஒரு நெடும்பயணம். வழியில் அதே சிரியாவில் ஒரு கோட்டை முற்றுகை. இம்முறை பெய்ரூத் கோட்டை. பெய்ரூத்தை சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றிக்கொண்டதும் முஸ்லிம்களின் படை (சலாவுதீனின் வாரிசாக இந்தப் போரை முன்னின்று நடத்தியவரின் பெயர் மலிகல் ஆதில்.) ஜாஃபா என்ற இடத்திலிருந்த கிறிஸ்துவர்களின் கோட்டையை முற்றுகையிட்டு, கைப்பற்றிக்கொண்டார்கள். இந்த ஜாஃபா முற்றுகையின்போது ஏராளமான கிறிஸ்துவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு இழப்பு நேரிட்டதால் கிறிஸ்துவர்கள் உடனடியாகப் போர் நிறுத்தம் கோரினார்கள்.

சலாவுதீன் இறப்பதற்கு முன்னால் சொல்லிவிட்டுப் போனது அது. எதிரி போர் நிறுத்தத்துக்கு விருப்பம் தெரிவித்தால், எந்த நிலையிலிருந்தாலும் சம்மதித்துவிட வேண்டும். ஆகவே யுத்தம் நிறுத்தப்பட்டது. உண்மையில் சலாவுதீன் முன்னின்று நடத்திய அந்த மூன்றாவது சிலுவைப்போர்தான் கடைசிப் பேரழிவுப் போர். அப்புறம் நடந்த சிலுவைப்போர்களெல்லாம் விளையாட்டேபோல நடத்தப்பட்ட யுத்தங்கள்தாம். இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை! உண்மையிலேயே அப்படித்தான் நடந்திருக்கிறது. உதாரணமாக, ஐந்தாவது சிலுவைப்போரை எடுத்துக்கொள்ளலாம். இன்னஸண்ட் 3 (Pope Innocent 3) என்னும் போப்பின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போருக்கு அடிப்படைக் காரணம் ஜெருசலேத்தைக் கைப்பற்றுவதல்ல. பணம் திரட்டுவதுதான்! முந்தைய யுத்தங்களினால் ஏற்பட்டிருந்த இழப்புகளைச் சரிக்கட்டுவதன்பொருட்டு, ஒரு சிறிய யுத்தத்தை ஆரம்பித்துவிட்டு, அதைச் சொல்லி ஐரோப்பா முழுவதும் வசூல் நடத்திக் குவித்துவிட்டார்கள்.

இந்தப் போரில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் தெரிவித்துவிட்டார். இன்னும் சில சிறு மன்னர்களும் இந்த ஐந்தாம் சிலுவைப்போரைப் புறக்கணிக்க (பின்னே? ஓயாமல் யுத்தம் என்றால் யாரால் முடியும்?), சாத்தியமுள்ள மன்னர்களின் உதவியுடன் யுத்தத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார் போப். ஆனால் நடந்தது மிகப்பெரிய நகைச்சுவை. ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் பாலஸ்தீனை நோக்கி முன்னேறாமல், நேரே கான்ஸ்டாண்டிநோபிளுக்குப் போய் அங்கே ஆட்சி புரிந்துகொண்டிருந்த கிரேக்க மன்னருக்கு எதிராகச் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த கிரேக்க மன்னர், அவரது குடிபடைகள் எல்லோருமே கிறிஸ்துவர்கள்! கிறுக்குப் பிடித்து ஒரு கிறிஸ்துவ நகரின்மீதே தொடுக்கப்பட்ட இந்த யுத்தத்தைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டார் போப் இன்னஸண்ட் 3. ஆனால் நிலைமை கைவிட்டுப் போய்விட்டது. கான்ஸ்டாண்டிநோபிளைத் தாக்கிய சிலுவைப் போர் வீரர்கள், போரில் வென்றதோடு விடவில்லை. முழு நகரையும் தீவைத்துக் கொளுத்தினார்கள். தப்பியோடியவர்களை வெட்டி வீழ்த்தியும், அகப்பட்ட பெண்கள் அத்தனைபேர் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியும் வெறியாட்டம் போட்டார்கள். இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் சொன்ன காரணம் : “கான்ஸ்டாண்டிநோபிள்வாசிகள் சிலுவைப் போர் வீரர்களை முழு மனத்துடன் ஆதரிக்கவில்லை என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அதனால்தான் தாக்கினோம்.’’ புகழ்பெற்ற கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர் நிகிடாஸ் (ழிவீநீமீtணீs) என்பவர், “சலாவுதீனின் படைகள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது ஒரு கிறிஸ்துவப் பெண்ணின் மானமும் பறிபோகவில்லை. வெறிகொண்ட கிறிஸ்துவ வீரர்களுக்கு புத்திதான் மழுங்கியதென்றால் கண்களுமா இருண்டுபோயின?’’ என்று வெறுப்புற்று எழுதுகிறார்.

சிலுவையைத் தொழுவோர் மீதே நிகழ்த்தப்பட்ட இந்த ஐந்தாம் சிலுவைப்போர் இப்படியாக அபத்த முடிவை அடைந்தபிறகு, கி.பி. 1217-ல் போப் இன்னஸண்ட் 3 அடுத்த சிலுவைப்போருக்கான அழைப்பை விடுத்தார். இம்முறை ஐரோப்பாவின் கிழக்கு தேசங்கள் பலவற்றிலிருந்து பெரும்பான்மையான வீரர்கள் அணிதிரண்டார்கள். சுமார் மூன்று லட்சம் பேர் என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இரண்டிலிருந்து இரண்டே கால் லட்சம் வீரர்கள் என்று இன்னொரு கணக்கு. ஆனால் இரு தரப்புமே தவறாமல் ஒப்புக்கொள்கிற ஒரே விஷயம் இந்தப் படையில் கிழவர்கள், பெண்கள், குருடர்கள், கால் முடமானவர்களெல்லாம் இருந்தார்கள் என்பதைத்தான்!

அதாவது பெரியதொரு படையாகக் காட்டியாகவேண்டும் என்பதற்காக, அகப்பட்ட ஆட்களையெல்லாம் திரட்டிப் படையில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள்! கிட்டத்தட்ட காட்டுமிராண்டி யுத்தம் போல்தான் இப்போர் நடந்திருக்கிறது. எந்தப் போர் இலக்கணத்துக்குள்ளும் அடங்காமல் கொலைவெறி ஆட்டம் ஆடித் தீர்த்திருக்கிறார்கள். சலாவுதீனின் வம்சாவழியினர் பலம் குன்றியிருந்த நேரம் அது. அவரது பேரன்கள் இரண்டுபேர் சாம்ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டு ஆண்டுகொண்டிருந்தார்கள். அவர்களால் சிலுவைப்போர் வீரர்களைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்கள். கிறிஸ்துவர்கள் இந்தத் தாக்குதலில் கைப்பற்றிய புதிய இடங்களை விட்டுக்கொடுத்துவிட்டால், முன்னாளில் சலாவுதீன் கைப்பற்றிய கிறிஸ்துவக் கோட்டைகளை மீண்டும் அவர்களுக்கே தந்துவிடுவதாகச் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால், சிலுவைப்போர் வீரர்கள் இதற்கு உடன்படவில்லை. எகிப்து பலம் குன்றியிருக்கும் நேரத்தில் அதை நேரடியாகத் தாக்கி வெற்றி பெறுவது சுலபம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் சற்றும் எதிர்பாராவிதமாக நைல் நதியில் அப்போது வெள்ளம் பெருக்கெடுத்து, காரியத்தைக் கெடுத்தது. படைகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் ஆகிப்போனது. வேறு வழியின்றி, கிறிஸ்துவர்கள் ஊர் திரும்ப நினைத்தார்கள். ஜெருசலேத்தைக் கைப்பற்றுவது என்கிற ஆதார நோக்கமுடன் தொடங்கப்பட்டவை சிலுவைப்போர்கள். நடுவில் இந்த நோக்கம் சிலமுறை திசைமாறியிருக்கிறது. கணக்கு வழக்கே இல்லாமல் பல காலமாகத் தொடர்ந்த இந்த யுத்தங்களால் எந்தத் தரப்புக்கும் லாபம் இல்லை என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம். பல ஐரோப்பிய நாடுகளின் மதவெறி, ஆள்பலம், பணபலம் என்ன என்பதை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியதுதான் சிலுவைப்போர்களால் ஆன பயன். மத்திய ஆசிய சுல்தான்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பதையும் பிற்கால கலீஃபாக்கள் செயல்திறன் அற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் கூட இந்த யுத்தங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றன.

ஒருவாறாக, போர்வெறி சற்று மட்டுப்பட்டு ஐரோப்பிய தேசங்கள், சொந்தக் கவலைகளில் மூழ்கத் தொடங்கிய பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடு வருடங்களில் மத்திய ஆசியா பதவிவெறி பிடித்த சுல்தான்களின் சுயலாப நடவடிக்கைகளின் மூலம் மேலும் வலிமை குன்றி, நலிவடையத் தொடங்கியிருந்தது. தோதாக மங்கோலியர்கள் தம் படையெடுப்பை அப்போது துரிதப்படுத்தியிருந்தார்கள். எந்தக் கணமும் பாக்தாத்தை நோக்கி மங்கோலியப்படைகள் வந்துவிடலாம் என்கிற சூழ்நிலை. பாக்தாத்துக்கு வந்தால், பக்கத்து வீடுதான் பாலஸ்தீன். யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று அப்போது மூன்று தரப்பினருமே இணைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால்கூட செங்கிஸ்கானின் வம்சாவழியினரின் அசுரப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாது என்கிற நிலைமை. பயத்தில் சுருண்டுகிடந்தது பாலஸ்தீன். அந்நியப் படையெடுப்பு மேகங்கள் மிகவும் கருமையாக அதன் மீது படர்ந்திருந்தன. அதுவரை ஏற்பட்டிருந்த இழப்புகளின் வலி அதைக்காட்டிலும் கொடுமையாகப் பாதித்திருந்தது வேறு விஷயம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 மார்ச், 2005