Sunday, September 30, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-09-2012 வியாழன் இரவு 10 மணிக்கு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உபைதுற் ரஹ்மான் அவர்கள் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பற்றி உரையாற்றினார்கள். அனேக சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இரவு உணவு, து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பு ஆலோசனை

அல்லாஹ்வின் கிருபையால் 23-09-2012 ஞாயிறு அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் டவுண் கிளையின் தவ்ஹீத் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ஜித்தாவாழ் அனைத்து தமிழ் சகோதரர்கள் அனைவரையும் சந்திக்க முடிவு செய்து பகுதி வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிறைவுற்றது.

ஜித்தா-பாப் மக்கா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால், 21/09/2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் வாராந்திர பயான் நடைப்பெற்றது. அதில் மண்டல தாயி, சகோ. சௌக்கத் உசேன் அவர்கள், "நிலையில்லா உலகமும் நிரந்தற மறுமையும்" என்ற தலைப்பில் சிறப்பாக உறை நிகழ்த்தினார்கள். அதிகமான சகொதரர்கள் கலந்துகொண்டார்கள். அத்துடன், மண்டல துனைத்தலைவர் சகொ. ரஃபி மற்றும் மண்டல செயலாளர் சகொ. பாரி அவர்களால் தற்காலிகமாக கீழ் கண்ட நபர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டது.

பொருளாளராக             : சகோ. நியால் முஹம்மது.
துனை செயலாளராக : சகோ. நஜ்முத்தீன் 
பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-09-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "முஸ்லிம்களும் இந்திய சுதந்திரமும்" என்ற தலைப்பில் சகோதரர் சியாத் உரை நிகழ்த்தினார்.அதன் பின்பு குர்-ஆன் பயிற்ச்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பின்பு   மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா TABUK ASTRA பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை,  தபூக் அஸ்ட்ரா விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கடந்த 21-09-2012 வெள்ளி அன்று  மஹ்ரிப்பிற்கு பின் அவர்களின் கேம்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "நற்பண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் இறுதியில் ஹஜ் பற்றிய பலவிதமான  அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 21/09/2012  வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "வாழ்வியல் வசந்தம் இஸ்லாம்" என்ற தலைப்பில், இஸ்லாம் என்றால் என்னஅது நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு ஊடுறுவ வேண்டும்? என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்என்ற தலைப்பில் கடந்த வார உலகலாவிய நிகழ்வுகள் அனைத்தையும்,  குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான உலகலாவிய முஸ்லிம்களின் எழுச்சிமிகு போராட்டங்கள், அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் TNTJ வின் கண்டன ஆர்பாட்டங்கள், முற்றுகை போராட்டங்கள் ஆகிய அனைத்து விஷயங்களையும் தொகுத்து வழங்கினார்கள்.
மேலும் கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்என்ற தலைப்பில் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆ வுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
 

ஜித்தா மண்டல தபூக் கிளை தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில் 20-03-2012 வியாழன் இரவு மணி 11.30 முதல் 01 வரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது இதில்  கிளை தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எவ்வாறு?  "ஹதீஸ் கலை பகுதி-3 மாநில தலைமையில் சகோ. பி.ஜெ அவர்கள் நடத்திய பாடத்தின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன் –ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் [கொள்கை சகோதரர்களுக்கு]  எடுத்துரைத்தார். இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக்கொண்டனர்மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி  இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிர்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 21-09-2012 வெள்ளியன்று காலை 10 முதல் 11 மணி  வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோநிஜாம் அவர்கள் முதல் கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒருவர் பின் ஒருவராக தபூக்  கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி  நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

TNTJ ரத்ததான முகாம் அழைப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் சார்பில் 05-10-2012 அன்று கிங் பஹத் மருத்தவமனை-இரத்த வங்கியில் இரத்த தான முகாம் நடத்த திட்டமிட்டிருக்கின்றோம். தாங்களும் கலந்து கொள்வதோடு தாங்களுக்கு தெரிந்த சகோதரா்களையும் இந்த முகாமில் கலந்து கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அன்புடன் அழைக்கின்றோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவானாக.

Wednesday, September 19, 2012

TNTJ ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 16-9-2012 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் மண்டல துணைத் தலைவர் ரஃபி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதில் ஒரு நாள் நிகழ்ச்சி, கூட்டு குர்பானி, இரத்ததான முகாம் போன்ற ஜமாஅத் நிகழ்ச்சிகள் சம்பதமான ஆலோசனை பெறப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர பயான் 14/09/2012 வெள்ளி அஸர் தொழுகைக்குப்பின் அன்று கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ.அன்சாரி "அழைப்புப்பணியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து கிளை துணைச்செயலாளர் சகோ. இர்ஃபான் மாநில, மண்டல மற்றும் கிளையின் ஃபித்ரா கணக்குகள் பட்டியலை வாசித்துகாட்டினார். அடுத்ததாக மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி மாநில தலைமைக்கு மண்ணடியிலேயே இடம் கிடைத்திருப்பதையும் அதற்கு தேவைப்படும் தொகை பற்றியும் விளக்கினார். தொடர்ந்து மாநில தலைமையின் அறிவிப்புகள் பற்றியும், ஜித்தா மண்டல ஒருநாள் பல்சுவை நிகழ்ச்சி பற்றியும் அறிவிப்பு செய்யப்பட்டது. கேம்ப் தாவா மற்றும் தனிநபர் தாவா சந்திப்பு பற்றி முடுக்கிவிட ஆலோசனை செய்யப்பட்டது. ஆர்வுமுடன் பலரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். துஆவுடன் நிறைவுற்றது. 

Sunday, September 16, 2012

TNTJ ஜித்தா-மதீனா கிளை மஷூரா

14/9/2012 வெள்ளி கிழமை அன்று ஜித்தா மண்டலம் மதினா கிளையில் கிளை மஷூரா மதியம் 2.30 மணிக்கு கிளை செயலாளர் ஜியாத் ரஹ்மான் தலைமையில் நடை பெற்றது.இதில் கிளை செயல்பாடுகள் சம்மந்தமான பல விஷயங்கள் பற்றி விவாதிக்க பட்டது. முக்கியமாக ரசூல்(ஸல்) அவர்களை கொச்சை படுத்தும் விதமாக திரைப்படம் எடுத்த யூத மிருகத்திற்கும்,அவனை ஆதரிக்கும் அமெரிக்காவிற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் இது சம்பந்தமாக எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




TNTJ ஜித்தா-மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/9/2012 வெள்ளி கிழமை அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம்  மதினா கிளையில் மார்க்கக் சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் "வரும் முன் காப்போம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ, மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.


Saturday, September 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 13-09-2012 வியாழன் அன்று இரவு 11.30 முதல் 1 மணிவரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது இதில் கிளைத் தலைவர்  சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்,  குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எவ்வாறு?   [ஹதீஸ் கலை பகுதி-2]  மாநில தலைமையில் சகோ. P.J அவர்கள் நடத்திய பாடத்தின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன் - ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை  மர்கஸில் 06-09-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  "ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில், ஹஜ் என்றால் என்ன?  அது நமக்கு எப்படி கடமையாக்கப்பட்டது? என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்" என்ற தலைப்பில் கடந்தவார உலக நிகழ்வுகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கிளை பொருளாலர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்.  இதில் பிறமத சகோதரர்கள், உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி துஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-9-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் மண்டல து.தலைவர் ரஃபீ முன்னிலையில் நடைபெற்றது. அதில் தர்பியா முகாம் மற்றும் இரத்த தான முகாம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. புதிய கிளை சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 14-9-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் மண்ணறையும் மறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து இரத்த தானம் பற்றிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள். 75க்கும் அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



Wednesday, September 12, 2012

ஜித்தா மண்டல பாப்-மக்கா புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-09-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் பாப்-மக்கா பகுதியில் மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் தலைமையில் மண்டல செயலாலர் சகோ. அப்துல் பாரி அவர்கள் முன்னிலையில் புதிய கிளை துவக்கப்பட்டது. சகோ.ரஃபீ அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தின் அவசியம் என்ற தலைபில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். பின்னர் கிளை தலைவராக சகோ. மாலிக், செயலாளராக சகோ. சதக்கதுல்லாஹ்வும் இடைக்காலத்திற்க்கு பொறுப்பளிக்கப்பட்டார்கள். சகோ. பாரி அவர்கள் கிளை பணிகள் பற்றிய ஒழுங்குகள், ஆலோசனைகளை கூறினார்கள். பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, September 9, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய சகோ. இரவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 06-09-2012 வியாழன் அன்று  தபூக் AL AFARI POLY CLINICல் கிளை துணைச்செயலாளர் சகோஉமர் மாலீக் அவர்களுடன் பணி புரியும்  விருதாச்சலம்-காட்டூரைச் சேர்ந்த  சகோதரர் இரவி அவர்கள் TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

இவருக்கு கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறை கோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் எடுத்து கூறி, கலீமாவை சொல்லி கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். மேலும் அவர் தனது பெயரை முஹம்மது ரபீக் என்றும் மாற்றிக்கொண்டார். அவருக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம்திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்தவருடன் நடந்த விவாதம்பைபில் இறை வேதமாகுர்ஆன் இறை வேதமா? விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள் ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ். 

"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக, பாவமன்னிப்பு தேடுவீராக!! (திருக்குர்ஆன் – 110:2,3]

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை  மர்கஸில் 06-09-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை" என்ற தலைப்பில், மனிதன் மரணித்தப்பின் கப்ரில் நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்! என்ற தலைப்பில், கடந்த வார நிகழ்வுகளையும் (பி.ஜே Vs சைபுத்தீன் ரசாதி விவாத ஒப்பந்தங்கள் உள்பட) தொகுத்து வழங்கினார்கள்.

பின்பு கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள், ரவி உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

 

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிர்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 06-09-2012  வியாழன் அன்று இரவு 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு, கிளைத் தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ.  நிஜாம் அவர்கள் முன் உதாரண உரையை பேசியவுடன் பின்பு, ஒன்றின் பின் ஒருவராக தபூக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் பேசி தங்களது பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். து.ஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்