Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர ஆலோசனை கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-01-2013 வியாழன் அன்று இரவு 11 மணிக்கு ஜித்தா மண்டலம் தபூக் கிளையின் மாதாந்திர மஷூரா கிளை தலைவர் சகோ. அப்து அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு செலவு கணக்கை சமர்பித்தார்கள். பின்பு கிளை செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. ஜித்தா மண்டல நிர்வாகிகள் அனுப்பிய மாநில கட்டிட நிதி சம்பந்தமான கடிதம் பரிசீலிக்கப்பட்டு, அதிகபட்ச பங்களிப்பை கிளை சார்பாக அளிக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்பின் சகோ.அப்துல் அஜீஸ் பொறுப்புகள் ஒரு அமானிதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment