அஸ்ஸலாமு அலைக்கும்,,,,
கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. "நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை, தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.
"ஆன்-லைன்' விண்ணப்பமும் ஏற்பு: விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை பதிய வேண்டும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். "ஆன்-லைன்' வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு: பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்: * விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13 * விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13 * விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13 * பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13 * "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13 * "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13 * மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13 * கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13 இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
|
No comments:
Post a Comment