Thursday, April 18, 2013

இந்திய தூதரகம்

 இந்திய தூதரகம் சில தகவல்களை மக்களுக்கு எடுத்துச்செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டது.
           
         
  1. சவூதி அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மூன்று மாத காலத்தை முறையாக பயன்படுத்திக்கொல்லும்படி கேட்டுக்கொண்டது.அம்நேசத்தியை 
  2. எதிர பார்த்துக்கொண்டுதான்  இருக்கிறோம்.இன்னும் அறிவிக்கப்படவில்லை.

  3. ஃப்ரீ விசாவில் உள்ளவர்கள் இந்த மூன்று மாதத்திற்குள், தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனது கஃபாலத்தை மாற்றிக்கொள்ளுவதையோ, கஃபீலிடமே போய் வேலை செய்வதையோ அல்லது நாட்டிற்கு எக்ஸிட்தில் செல்வதையோ தவிர இந்த நாட்டு சட்டத்திற்கு புறம்பான ஆர்பாட்டம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தத்தம் சமுக மக்களை அமைப்புகள் கேட்டுக் கொள்ளலாம் எனக் கோரப்பட்டது.

  4. நிதாகத் பிரச்சினையால் சிகப்பு நிற பிரிவில் உள்ள நிறுவனத்திலிருந்து பச்சை நிற நிறுவனங்களுக்கு மாறுவதற்கு பழைய கஃபீலிடமிருந்து கடவுச்சீட்டு (passport) கிடைப்பதில்லை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் முறையாக இந்திய தூதரகத்தை அணுகினால் அதனை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டது. (நிதாகத் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்க்கான தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்மந்தமாக  திரு.பத்ருத்தீன் - 0596810574 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரக வலை தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.)

  5. கஃபீளை விட்டு ஓடிவந்தவர்களுக்கு இதுவரை சவூதி அரசாங்கத்திடமிருந்து பொது மன்னிப்பு சம்மந்தமான இறுதி  அறிவிப்பு வரவில்லை என்பதால் தூதரகத்தில் பதிவு செய்துவரும் மக்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான குறிப்பிட்ட தேதி கூறமுடியாதா சூழ்நிலை உள்ளதாக விளக்கி கூறப்பட்டது.. இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்பட்டது.

  6. உம்ரா விசாவில் வந்து சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், ஹுரூப், ஓடி வந்தவர்கள், ஃப்ரீ விசாவில் வந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்கு இருப்பதை விடுத்து நாட்டிற்கு செல்வதற்கு அவசரநிலை சான்றிதழ் (Emergency Certificate) பெற கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொண்டு
    http://cgijeddah.mkcl.org/downloads/New%20emergency%20Form%202013.pdf
     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இந்திய தூதரகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டது.. 
    (முகவரி : Labour Section, Consulate General of India, PO Box No. 952, Jeddah-21421. Address: Villa No. 34, behind National Commercial Bank, Near Al-Huda Mosque, Tahlia Street, Jeddah, Telephone: 02- 6603779; 02-2610189; Fax: 02-2840238)

No comments:

Post a Comment