Friday, April 26, 2013

40நாட்களில் 15பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!

ஏற்றம் பெறும் தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி : 40நாட்களில் 15பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, April 23, 2013, 11:24

ரக்கீப்போ ராமூஸ் - அப்துர்ரஹ்மான் ஆக

சிங்கள சகோதரர் மலிந்த - நூஹ் ஆக....

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழு கிறித்தவ சகோதரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்கும் காட்சி

மாரா கென்னத் - அப்துல் மாலிக் ஆக, அமர் கார்பியோ - அப்துல்லாஹ்வாக....

மூன்று இலங்கை சகோதரிகள் இஸ்லாத்தை தழுவிய போது...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலக் கிளையான தபூக் கிளை பிறமத அழைப்புப்பணியில் முத்திரை பதித்து வரும் செய்திகளை தொடர்ச்சியாக உணர்வு இதழில் வெளியிட்டு வருகின்றோம்.

அந்த வரிசையில் கடந்த 40 நாட்களில் மட்டும் உலகின் பல பகுதிகளிலிருந்து தபூக்கில் பணியாற்ற வந்த பிறமத சகோதர, சகோதரிகள் 15 பேர் தபூக் கிளை மூலமாக இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்…..

தபூக் கிளை மூலமாக பிலிப்பைன்ஸ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தாவா செய்வது பல மொழிகள் பேசக்கூடிய சகோதர, சகோதரிகள் தபூக் கிளை வாயிலாக இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த விபரம் பின்வருமாறு :

இஸ்லாத்தை ஏற்ற 7 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் :

கடந்த 14/03/2013 வெள்ளியன்று தபூக் செனய்யா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் பணிபுரியும் ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு:-

1- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த

- அமிர்ஜோன் மக்கபகல் – அப்துல்லாஹ்வாகவும்,

2- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த – கார்ல்வின்ஷன் – காலித் ஆகவும்,

3- பிலிப்பைன்ஸ் – செபூவைச்சேர்ந்த – கோக்கொ

மார்ட்டின் – உமர் ஆகவும்,

4- பிலிப்பைன்ஸ் – தாவாவ்வைச்சேர்ந்த – ஜோன் அல்டிரின் – யஹ்யாவாகவும்,

5- பிலிப்பைன்ஸ் – மிந்தநாவ்வைச்சேர்ந்த – மைக்கல் பிலிப் – முஹம்மது ஆகவும்,

6- பிலிப்பைன்ஸ் – சாந்தாகுருஷ்வைச்சேர்ந்த – அர்லியானோ – ஜஃபர் ஆகவும்,

7- பிலிப்பைன்ஸ் – கண்டோன்வைச் சேர்ந்த – பிரையன் ஜோன் – அய்யூப் ஆகவும் மாறி தங்களை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

மேற்கண்ட ஏழு பிலிப்பைன்ஸ் சகோதரர்களும் கிறித்தவ மதத்தைச்சேர்ந்த, தக்காலோக் மொழிபேசும் சகோதரர்களாவர். இவர்கள் அனைவருக்கும் தபூக் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களும், சகோ. அஹமது இஷ்புனுஷா (பிலிப்பைன் மொழி பேசக்கூடியவர்)அவர்களும் அவர்களுடைய(தக்காலோக்) மொழியிலும், ஆங்கில மொழியிலும் இஸ்லாத்தின் கொள்கை

விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி ஏகத்துவ கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

அதுபோல கடந்த 19/04/2013 தபூக் கிங் ஃபஹத் ஹாஸ்பிடல் மெடிக்கலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் – மனிலாவைச் சேர்ந்த

சகோதரர் ஜோவெல் ரக்கீப்போ ராமூஸ் (JOEL RAQUIPO RAMOS) அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அப்துர்ரஹ்மான் என்று அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். தக்காலோக் மொழி பேசும் அவருக்கு ஆங்கிலம், தக்காலோக் மொழிகளில் திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்கள், ஆடியோ கேஸட்டுகளும்

வழங்கப்பட்டன.

இஸ்லாத்தை ஏற்ற கென்யா நாட்டு சகோதரர் :

கடந்த 25-03-2013 அன்று தபூக் கிங் அப்துல் அஜீஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கென்யா நாட்டின் நைரோபியைச்சேர்ந்த சகோதரர். மாரா கெனீத் நோரே (Maara Kenneth Njorge) அவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சாந்தாகுருஷை சேர்ந்த சகோதரர் அமர் கார்பியோ சலாலோ (Amar Carpio Sallao) அவர்களும் தூய இஸ்லாத்தை தழுவினார்கள்.

கடந்த 20-03-2013 புதன் சென்னையைச் சேர்ந்த சகோ. முத்து அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்கள். அவருக்கும் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன், மற்றும் 15 மார்க்க புத்தகங்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டன.

இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதர, சகோதரிகள் :

தபூக் அல்-ஜஸீரா ஹோட்டலில் பணிபுரியும் இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்த, புத்த மத சகோதரர் மலிந்த, தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தபூக் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இலங்கை சகோதரர் முஹம்மது அஷீர் அவர்கள் சிங்களத்தில் கலிமா சொல்லிக் கொடுத்தார். அவர் தனது பெயரை நூஹ் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள குர்ஆன், மற்றும் புத்தகங்கள், ஆடியோ கேஸட்டுகள் வழங்கப்பட்டன.

கடந்த 14-03-2013 அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும், இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு தபூக் கிளை தலைவர் அஜிஸும் அவரது துணைவியார் சுமையாஹ்வும், தூய இஸ்லாத்தை விளக்கி கலிமா சொல்லிக்கொடுத்தனர். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா – சமீரா என்றும், அனோமா – ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

இவ்வாறாக தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி களை கட்டி வருகின்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

No comments:

Post a Comment