உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
|
Monday, April 29, 2013
சிறுநீரகக் கல் உருவாவது எப்படி? நாம் அறிய வேண்டிய தகவல் !!
Saturday, April 27, 2013
செனைய கிளையின் ஆலோசனை கூட்டம்
கூட்டம் (26/04/2013- வெள்ளிகிழமை ) அல்-போசான் கேம்பில் நடைபெற்றது .
கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையில் மற்றும் கிளை செயலாளர்
சகோ:யாகூப் முன்னிலையிலும் கூட்டம் ஆரம்பமானது,.
கிளை து.தலைவர் சகோ: அப்துல் அஜீஸ் அவர்கள் "சுயபரிசோதனை" என்ற தலைப்பில்
உரையாற்றினார் ..
இக்கூட்டத்தில் "இஸ்திர நிகழ்ச்சி மற்றும் மதீனா பயணம்" குறித்து
ஆலோசிக்கப்பட்டது .
இக்கூட்டத்திற்கு மண்டல செயலாளர் சகோ: அப்துல் பாரி மற்றும் து.செயலாளர்
சகோ: நசுருதீன் அவர்களும் செனைய கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் &
ஆலோசகர்கள் உட்பட 15கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .
இறுதியாக துவா ஓதிய பிறகு கூட்டம் நிறைவுபெற்றது ..
அல்ஹம்துலில்லாஹ்...
Friday, April 26, 2013
40நாட்களில் 15பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!
ஏற்றம் பெறும் தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி : 40நாட்களில் 15பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலக் கிளையான தபூக் கிளை பிறமத அழைப்புப்பணியில் முத்திரை பதித்து வரும் செய்திகளை தொடர்ச்சியாக உணர்வு இதழில் வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வரிசையில் கடந்த 40 நாட்களில் மட்டும் உலகின் பல பகுதிகளிலிருந்து தபூக்கில் பணியாற்ற வந்த பிறமத சகோதர, சகோதரிகள் 15 பேர் தபூக் கிளை மூலமாக இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்…..
தபூக் கிளை மூலமாக பிலிப்பைன்ஸ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தாவா செய்வது பல மொழிகள் பேசக்கூடிய சகோதர, சகோதரிகள் தபூக் கிளை வாயிலாக இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த விபரம் பின்வருமாறு :
இஸ்லாத்தை ஏற்ற 7 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் :
கடந்த 14/03/2013 வெள்ளியன்று தபூக் செனய்யா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் பணிபுரியும் ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.
அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு:-
1- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த
- அமிர்ஜோன் மக்கபகல் – அப்துல்லாஹ்வாகவும்,
2- பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த – கார்ல்வின்ஷன் – காலித் ஆகவும்,
3- பிலிப்பைன்ஸ் – செபூவைச்சேர்ந்த – கோக்கொ
மார்ட்டின் – உமர் ஆகவும்,
4- பிலிப்பைன்ஸ் – தாவாவ்வைச்சேர்ந்த – ஜோன் அல்டிரின் – யஹ்யாவாகவும்,
5- பிலிப்பைன்ஸ் – மிந்தநாவ்வைச்சேர்ந்த – மைக்கல் பிலிப் – முஹம்மது ஆகவும்,
6- பிலிப்பைன்ஸ் – சாந்தாகுருஷ்வைச்சேர்ந்த – அர்லியானோ – ஜஃபர் ஆகவும்,
7- பிலிப்பைன்ஸ் – கண்டோன்வைச் சேர்ந்த – பிரையன் ஜோன் – அய்யூப் ஆகவும் மாறி தங்களை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
மேற்கண்ட ஏழு பிலிப்பைன்ஸ் சகோதரர்களும் கிறித்தவ மதத்தைச்சேர்ந்த, தக்காலோக் மொழிபேசும் சகோதரர்களாவர். இவர்கள் அனைவருக்கும் தபூக் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களும், சகோ. அஹமது இஷ்புனுஷா (பிலிப்பைன் மொழி பேசக்கூடியவர்)அவர்களும் அவர்களுடைய(தக்காலோக்) மொழியிலும், ஆங்கில மொழியிலும் இஸ்லாத்தின் கொள்கை
விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி ஏகத்துவ கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
அதுபோல கடந்த 19/04/2013 தபூக் கிங் ஃபஹத் ஹாஸ்பிடல் மெடிக்கலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் – மனிலாவைச் சேர்ந்த
சகோதரர் ஜோவெல் ரக்கீப்போ ராமூஸ் (JOEL RAQUIPO RAMOS) அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அப்துர்ரஹ்மான் என்று அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். தக்காலோக் மொழி பேசும் அவருக்கு ஆங்கிலம், தக்காலோக் மொழிகளில் திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்கள், ஆடியோ கேஸட்டுகளும்
வழங்கப்பட்டன.
இஸ்லாத்தை ஏற்ற கென்யா நாட்டு சகோதரர் :
கடந்த 25-03-2013 அன்று தபூக் கிங் அப்துல் அஜீஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கென்யா நாட்டின் நைரோபியைச்சேர்ந்த சகோதரர். மாரா கெனீத் நோரே (Maara Kenneth Njorge) அவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சாந்தாகுருஷை சேர்ந்த சகோதரர் அமர் கார்பியோ சலாலோ (Amar Carpio Sallao) அவர்களும் தூய இஸ்லாத்தை தழுவினார்கள்.
கடந்த 20-03-2013 புதன் சென்னையைச் சேர்ந்த சகோ. முத்து அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்கள். அவருக்கும் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன், மற்றும் 15 மார்க்க புத்தகங்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டன.
இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதர, சகோதரிகள் :
தபூக் அல்-ஜஸீரா ஹோட்டலில் பணிபுரியும் இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்த, புத்த மத சகோதரர் மலிந்த, தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தபூக் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இலங்கை சகோதரர் முஹம்மது அஷீர் அவர்கள் சிங்களத்தில் கலிமா சொல்லிக் கொடுத்தார். அவர் தனது பெயரை நூஹ் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள குர்ஆன், மற்றும் புத்தகங்கள், ஆடியோ கேஸட்டுகள் வழங்கப்பட்டன.
கடந்த 14-03-2013 அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும், இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு தபூக் கிளை தலைவர் அஜிஸும் அவரது துணைவியார் சுமையாஹ்வும், தூய இஸ்லாத்தை விளக்கி கலிமா சொல்லிக்கொடுத்தனர். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா – சமீரா என்றும், அனோமா – ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
இவ்வாறாக தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி களை கட்டி வருகின்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
Thursday, April 25, 2013
மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும்,
அஸ்ஸலாமு அலைக்கும்,,,,
|
அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள்.
அல் குர்ஆன்.16:93
Wednesday, April 24, 2013
செனையா கிளை - பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக
(23/04/2013-செவ்வாய் கிழமை ) அன்று AGM- கேம்பில் பயான் ஏற்பாடு
செய்யப்பட்டது ..
இதில் சகோ: ரபீக் அவர்கள் "மறுமையை நினைவு கூறுவோம் " என்ற தலைப்பில்
உரையாற்றினார் ..
இந்நிகழ்ச்சியில் 25கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் ..
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் "தொழுகையில் ஓத வேண்டிய
துவாக்கள் " என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்...
டிஜிபி அலுவலகம் முற்றுகை - நாள் : 27-04-13
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, April 23, 2013,
தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள்
கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்களை கைது செய்து, பொய்
வழக்குப்போட்டு, தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தினுள் டிஎன்டிஜேயினர் நுழைய தடை
விதித்து அராஜகம் செய்து, எடுத்தேறி வந்து வன்முறையில் ஈடுபட்டு கொலை
வெறித்தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து,
ஒருபக்க சார்பாக நடந்து கொள்ளும் காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து
சென்னையில்…
டிஜிபி அலுவலகம் முற்றுகை
நாள் : 27-04-13 இன்ஷா அல்லாஹ்
சனிக்கிழமை காலை 11மணிக்கு
அலைகடலென திரண்டு வாரீர்!
அழைக்கிறது.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மர்கஸ் அமைவதைக் காரணம் காட்டி ஒன்றிணைந்த வன்முறையாளர்கள்:
கடையநல்லூரில் காவல்துறையினரின் பாரபட்சம்! »
Tuesday, April 23, 2013
TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை சகோதரர் - சமித் இந்துனில்!...
ஓட்டுனராக பணிபுரியும் புத்த மதத்தைச் சேர்ந்த, இலங்கை - மாத்தரயைச்சேர்ந்த
மார்க்கம்இஸ்லாத்தைதனதுவாழ்கைநேறியாகஏற்றுக் கொண்டார்.
தமிழில்ளிருந்து
சிங்கலத்திற்கு மொழிபெயர்ப்பு உதவியாளராக இருந்தவர் - கொழூம்பைச் சேர்ந்த
சகோ, முஹம்மது அஷிர் அவர்கள்என்பது குறிப்பிடதக்கது.
மேலும் அவருக்கு சிங்கல மொழியிலான குர்ஆன் மற்றும்
முக்கிய நூல்களையும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்….!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம்
TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!
இன்நிகழ்ச்சியில்சகோ, அப்துல்அஜீஸ் அவர்கள்"உலக வாழ்க்கை ஒரு
முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
மேலும்சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "ஜும்ஆவின்
ஒழுங்குகள்"என்றதலைப்பிலும் மிகச் சிறப்பாகசிற்றுரையாற்றினார்.
இறுதியில் நபிவழிதுஆவுடன், மதிய
உணவிற்குபின் நிகழ்ச்சிஇனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல)
செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட
அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)
Sunday, April 21, 2013
ஷரபியா - அரப்லங்கா உணவகத்தில் துஆ நோட்டிஸ்
|
ஷரபியா-நிகாத் கேம்பில் வாராந்திர பயான் & பயிற்சி
|
மாதாந்திர கூட்டம்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,
|
Thursday, April 18, 2013
செனைய்யா கிளை -கேம்ப் பயான்
17/04/2013- புதன் கிழமை அன்று TNTJ - செனையா கிளையிலுள்ள ஆரிப்கோ கேம்ப்பில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது .. இதில் சகோ:நசுருதீன் அவர்கள் "அல்லாஹ்வின் திருப்தியை பெறுவது எப்படி " என்ற தலைப்பில் உரையாற்றினார் ..
10-கும் மேற்பட்ட சகோதரர்கள் இதில் கலந்துகொண்டனர் .. அல்ஹம்துலில்லாஹ் ....
செனைய்யா கிளை - ஜித்தா மண்டலம்
இந்திய தூதரகம்
- சவூதி அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மூன்று மாத காலத்தை முறையாக பயன்படுத்திக்கொல்லும்படி கேட்டுக்கொண்டது.அம்நேசத்தியை
- எதிர பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- ஃப்ரீ விசாவில் உள்ளவர்கள் இந்த மூன்று மாதத்திற்குள், தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனது கஃபாலத்தை மாற்றிக்கொள்ளுவதையோ, கஃபீலிடமே போய் வேலை செய்வதையோ அல்லது நாட்டிற்கு எக்ஸிட்தில் செல்வதையோ தவிர இந்த நாட்டு சட்டத்திற்கு புறம்பான ஆர்பாட்டம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தத்தம் சமுக மக்களை அமைப்புகள் கேட்டுக் கொள்ளலாம் எனக் கோரப்பட்டது.
- நிதாகத் பிரச்சினையால் சிகப்பு நிற பிரிவில் உள்ள நிறுவனத்திலிருந்து பச்சை நிற நிறுவனங்களுக்கு மாறுவதற்கு பழைய கஃபீலிடமிருந்து கடவுச்சீட்டு (passport) கிடைப்பதில்லை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் முறையாக இந்திய தூதரகத்தை அணுகினால் அதனை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டது. (நிதாகத் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்க்கான தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்மந்தமாக திரு.பத்ருத்தீன் - 0596810574 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரக வலை தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.)
- கஃபீளை விட்டு ஓடிவந்தவர்களுக்கு இதுவரை சவூதி அரசாங்கத்திடமிருந்து பொது மன்னிப்பு சம்மந்தமான இறுதி அறிவிப்பு வரவில்லை என்பதால் தூதரகத்தில் பதிவு செய்துவரும் மக்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான குறிப்பிட்ட தேதி கூறமுடியாதா சூழ்நிலை உள்ளதாக விளக்கி கூறப்பட்டது.. இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்பட்டது.
- உம்ரா விசாவில் வந்து சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், ஹுரூப், ஓடி வந்தவர்கள், ஃப்ரீ விசாவில் வந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்கு இருப்பதை விடுத்து நாட்டிற்கு செல்வதற்கு அவசரநிலை சான்றிதழ் (Emergency Certificate) பெற கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொண்டு
http://cgijeddah.mkcl.org/downloads/New%20emergency%20Form%202013.pdf
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இந்திய தூதரகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டது..
(முகவரி : Labour Section, Consulate General of India, PO Box No. 952, Jeddah-21421. Address: Villa No. 34, behind National Commercial Bank, Near Al-Huda Mosque, Tahlia Street, Jeddah, Telephone: 02- 6603779; 02-2610189; Fax: 02-2840238)
Monday, April 15, 2013
TNTJ - JEDDAH சனாயியா கிளை(AGM கேம்ப்-ல்) மார்க்க சொற்பொழிவு
ஜித்தா - சனாயியா கிளை (AGM கேம்ப்-ல்) மார்க்க சொற்பொழிவு
|
Sunday, April 14, 2013
ஜித்தா - சனாயா கிளை (ஆரிப்கோ) கேம்பில் பயான் நிகழ்ச்சி.
|
TNTJ ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளை வாராந்திர பயான்
அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 12/04/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ.. ஹபீபுர்ரஹ்மான் அவர்கள், "நபிவழி திக்ருகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் து/ஆ வுடன் பயான் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
|
நபிமொழி அறிவோம் - ஜித்தா-ஸாகர் கிளையில் குயிஸ் நிகழ்ச்சி
|
TNTJ - ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) |
மாநில துணை செயலாளர்கள்
1. சகோ. எக்மோர் சாதிக்
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார்
3. சகோ. கோவை அப்துர் ரஹீம்
4. சகோ. நெல்லை யூசுஃப்
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான்
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம்
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14-4-2013) கும்பகோணத்தில் கூடியது. இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .
மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்
மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்
மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளனர்..
மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்
மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்
மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளனர்..
Saturday, April 13, 2013
ஜித்தா சனாயா கிளை (பாச்சி கம்பெனி) பயான் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம்
இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை! - மதினா கிளை பயான்
பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு
பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் நேரடி
ஒளிபரப்பு.....
நாள் : 14.04.13 இன்ஷா அல்லாஹ் இரவு 7மணிக்கு
உரை : பி.ஜைனுல் ஆபிதீன். அவர்கள்.
தலைப்பு : முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி
உரை : கோவை ரஹ்மத்துல்லாஹ் .அவர்கள்.
தலைப்பு : மதங்களைக் கடந்த மனிதநேயம்
TNTJ Web TV
TNTJ வி்ன் வெப்டிவி தற்போது Live WebTv ஆக மாற்றப்பட்டுள்ளது. தினமும் 4
மணி நேர நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். ஆன்ட்ராய், ஐபோன்,
மொபைல் உள்ளிட்ட டிவிவைஸ்களிலும் வெப்டிவியை காணலாம். கண்டு பயன்
பெறுங்கள்!
Friday, April 12, 2013
Thursday, April 11, 2013
அந்தப் பழைய காலுறை...என்னோடு வரவேண்டும்..!!
என்னோடு வரவேண்டும்..!!
அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.
தன் மகனை அருகழைத்தார்.
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான்
உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி
சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை
நிறைவேற்றுவாயா?"
"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன்.
அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய
துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என்
கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"
ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான
கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும்
ஒப்புக் கொண்டான்.
அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும்
விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடை கொடுத்து அனுப்ப
உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது.
பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு
தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டிய
வரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின்
கால்களில்
அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,
"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.
"இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று
சொல்லிப் பார்த்தான் மகன். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
"இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.
மகனோ மீண்டும் மீண்டும்
கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான்
சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை;
தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும்
சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க
அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்!
ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை
தான்!"
இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர்,
அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும்
வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம்
என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று
நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.
இறந்த அறிஞரின்
நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப்
படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து
விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக் களிலிருந்து ஒரே
ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;
நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.
இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும்
தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி,
நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா;
அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச்
செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப்
பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும்
வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"
அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து
பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை
உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.
'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது
(திருக்குர்ஆன் 7:8)
'அல்லாஹ்வின்
திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)
Wednesday, April 10, 2013
சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்"
"விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்"
(08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள்
பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்.....( நன்றி : ரியாத் ஃபெய்ஸல் )
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.
மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால், முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால், தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ, பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ரா/ஹஜ் விசாவில் வருபவர்கள், அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன், சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும், உம்ரா/ஹஜ் விசாவில் வந்தவர்கள், மக்கா, ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும், யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் "வெளிநாட்டவராக" (இக்காமா வைத்திருப்பவர் - Expatriate) இருந்தால், அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா / விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல், இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது, விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ்/உம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது, அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்,
மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும், சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ, அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் / நிறுவனத்திற்கு வேலை செய்யாமல், பிற கஃபீல்/நிறுவனம்/சொந்த தொழில் செய்வது - பணி புரிவது குற்றம். மேலும், தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி, தற்போது பணிபுரியும் நிறுவத்தில் "கஃபாலத் - ஸ்பான்ஸர்ஷிப்" மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
11. தொழிலாளியின் கஃபீல் / நிறுவனத்தில் வேலை செய்யாமல், தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு, தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும், அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை - SR 5000 அபராதம் & ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - SR 20000 அபராதம் & இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - SR 50000 அபராதம் & மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும், சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ, இக்காமா காலாவதி ஆனவர்களையோ, விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
மீறினால்: முதல் முறை - SR 10000 அபராதம் & ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - SR 20000 அபராதம் & மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - SR 30000 அபராதம் & ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும், இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்,
மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்...
ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால், கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி, எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில், அவருடைய கஃபீல்/நிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
இணையதளம்: www.moi.gov.sa/auth/portal/passports/home -> Click "Violations & Penalties"