Tuesday, June 11, 2013

ஸ்மார்ட் போன் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது


"இளைஞர்களில் பெரும்பாலோர்தங்களிடம்ஸ்மார்ட் போன் இல்லாமல் போய்விடுமோ" எனமனதளவில் பயப்படுவதாக,நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகசிஸ்கோ என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம்,  30 வயதுக்கு கீழ் உள்ள , 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில்பெரும்பாலானவர்கள்ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்துசிஸ்கோ முதன்மை தொழில்நுட்ப அலுவலர்,கெவின் பிளாக் கூறியதாவது: ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட பலர்ஒருவேளை அந்தபோன் தொலைந்து போய்விட்டால் தங்களால் எதுவுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
அவர்களது ஆழ்மனதிலும் இந்த எண்ணம் நன்கு வேரூன்றிவிட்டதை எங்களால் உணரமுடிந்தது. ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால்தங்களது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக பலர் கருதுகின்றனர்.
நவீன யுகத்தின் கதாநாயகனாக உள்ள மொபைல் போன், "நோமோ போபியா" என்ற உளவியல் ரீதியிலான குறைபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஐந்து பேரில்ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே,எஸ்.எம்.எஸ்.அனுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு கெவின் பிளாக் கூறினார்.
காலையில் படுக்கையில் இருந்து எழுவது முதல்இரவு படுக்கப் போகும் வரைதொலைபேசியே கதி எனஏராளமான இளைஞர்கள் மாறிப்போயிருந்ததை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்தை சேர்ந்தகம்ப்யூட்டர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும்கைக்கேல் கார் க்ரெய்க் என்பவர் குறிப்பிடுகையில், "ஸ்மார்ட் போன் மீதான இந்த மோகம் பலரை பன்படுத்தியிருந்தாலும் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
10 நிமிடத்திற்கு ஒரு முறைஇவர்கள்தங்களது மொபைல் போனில்இ-மெயில் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து சோதிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு, 96முறை இப்படி சோதிக்கின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment