Tuesday, June 4, 2013

மன இறுக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


மன இறுக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


வீட்டு வேலைஅலுவலக வேலைகுழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும்ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும்மனதை அமைதிப்படுத்ததனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.

மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம்,பிரச்சினையைமன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோயின் தாக்கம்நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது. எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி,வயிற்று வலிகோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம்.

மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது. மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல்கெட்ட நண்பர்கள் சேர்க்கைதற்கொலை முயற்சிசூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல்தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது.

மன இறுக்கத்தைத் தவிர்க்க  பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

No comments:

Post a Comment