Thursday, January 12, 2012

ஜித்தா மண்டல நிர்வாகிகள் & பேருந்து ஓட்டுனரின் மனித நேய சேவை

கடந்த 05-01-2012 அன்று ஜித்தா மண்டலம், நகர கிளைகளுடன் இணைந்து மதீனா ஜியாராஹ் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 200 பேர்கள், இந்த பயணத்தில் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். அப்பொழுது துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்த ஜி.சி.டி கம்பெனியில் பணிபுரியும் சகோ. ஷேக் ஃபரீதின் இக்காமா என்ற குடியிறுப்பு அட்டையும், 2500 ரியால் பணமும் பர்ஸுடன் காணாமல் போய்விட்டதாக மண்டல நிர்வாகிகளான சகோ.யூனுஸிடமும், பாரியிடமும் புகார் செய்தார். உடனே அவர்கள், துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பேருந்தின் ஓட்டுனராகிய பர்மாவை சேர்ந்த சகோ. இஸ்மாயிலை தொடர்பு கொண்டனர். அவர் பஸ்ஸின் உள்ளே அல்லாமல் வெளியில் கீழே கிடந்த ஒரு பர்ஸை நான் கண்டெடுத்து அது என்னிடம் உள்ளது. இன்றுதான் பேருந்தில் சென்றவர் விபரபட்டியலை பார்த்து அது உங்களுடையதுதான் என்று தெரிந்து கொண்டேன், அந்த பர்ஸ் என்னிடம்தான் உள்ளது, வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறவே,நிர்வாகிகள் உடன் சென்று அவரிடம் பர்ஸை பெற்று, உரியவரிடம் ஒப்படைத்தார்கள், ஷேக் ஃபரீத் மனமுவந்து 100 ரியாலை அந்த ஓட்டுனருக்கு அளித்தார், அவரும் அதனை சந்தோஷமுடன் பெற்றுக்கொண்டார். 
தன்னிடம் இல்லை என்று அந்த ஓட்டுனர் கூறிவிட்டால், நாம் ஒன்றும் செய்திருக்க முடியாது. என்றாலும், இறையச்சத்தின் பேரில் அந்த ஓட்டுனர் நடந்து கொண்டவிதம், பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment