அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 05-01-2012 வியாழன் இரவு புறப்பட்டு 06-01-2012 வெள்ளி இரவு திரும்பும் வகையில் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை இணைந்து மதீனா நகருக்கு ஜியாராஹ் பயணம் ஒன்றினை குறைந்த கட்டணத்தில், லாப நோக்கின்றி 3 வேளை உணவு, தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிகளோடு ஏற்பாடு செய்திருந்தது, இதில் பயணத்துஆவுடன் புறப்பட்ட பேருந்திற்க்கு கிளைத்தலைவர் சகோ.அமீன் பொறுப்பாளராக இருந்து, இந்த பயணத்தின் நோக்கங்கள் என்ன என்பது விளக்கினார். நாம் போய் பார்க்க இருக்கும் இடங்கள் பற்றி அதன் வரலாற்றை விளக்கி கூறினார். அந்தந்த இடம் வந்தததும் வரலாறு நினைவூட்டப்பட்டது. உஹது யுத்தம் நடந்த இடத்தில் அதன் விளக்கம் விளக்கப்பட்டது. செனைய்யா கிளை பேருந்தில் கேள்விகள் கேட்க்கப்பட்டு சரியான பதில் சொன்னவர்களுக்கு 90 புத்தகங்கள், பரிசாக வழங்கப்பட்டது. மாஷா அல்லாஹ். எல்லாரும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். ஃபிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்படது. குறிப்பாக உருது பேசக்கூடிய சகோதர்களுக்கும் உருதிலும் கேள்வி கேட்கப்பட்டது. சரியான பதில் சொன்னார்கள்.பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த மதீனா பயணத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் இந்த பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. எல்லாரும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று சொன்னார்கள் இது போல் வருடத்திற்கு இரண்டு தடவை நடத்தலாம் என்றும். இது போல் மக்காவுக்கும் அழைத்துச் செல்லலாம் என்றும். ஆலோசனை தந்தனர். திரும்ப வரும் போது துஆ மற்றும் நிகழ்ச்சி நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ். |
Tuesday, January 10, 2012
ஜித்தா-செனைய்யா மதீனா ஜியாராஹ் பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment