Thursday, September 5, 2013


பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் நன்மையா ?


பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை,தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால்பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன்,கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால்,ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும்சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

அதாவது, 1 டம்ளர் பழச்சாறில், 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே,பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில், 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம்பழங்களைவிடஉலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment