Wednesday, October 19, 2011

இரத்ததானம் செய்வோர் கவனத்திற்க்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

 

இரத்த தானத்தில் எவ்வளவு ரத்தம் எடு்க்கப்படுகிறது?

300 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற ரத்தம் மீண்டும் நம் உடலில் உற்பத்தி ஆகிவிடுகிறது.

 

இரத்த தானத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் எவ்வளவு நாட்களில் உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 20 நாட்களில்.

 

இரத்ததானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120நாட்கள் தான் உயிரோடு இருக்கும் பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நாம் ரத்தம் கொடுத்தாலும் கொடுக்க விட்டாலும் இது தான் செயல். ஆக அழிந்த பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றவருக்கு கொடு்த்து உயிர் காப்பது நல்லது தானே!

 

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

இருபது நிமிடம்.

 

இரத்ததானம் செய்த பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடு்க்க வேண்டும்?

இருபது நிமிடம்.

 

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்ததானம் செய்வது நல்லது. இரத்ததானம் கொடுப்பதற்கு முன் மோர் போன்ற திரவங்களை குடுப்பது நல்லது.

 

சின்ன சின்ன உடல் கோளாறுகள் இருப்பவர்கள் இரத்ததானம் செய்யலாமா?

உதவி்க்கு கீழே உள்ள பட்டியலை படிக்கவும்.

·         சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு உள்ளவர்கள் கொடுக்கலாம்.

·         ஆஸ்துமா- மூச்சுத்திணரல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

 

இரத்ததானம் செய்யக்கூடாதவர்கள் பட்டியல் கீழே.

·         இதயக்கோளாறுக்காக மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க மாத்திரைகள், டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுபவர்கள் இரத்த தானம் செய்யக்க கூடாது.

No comments:

Post a Comment