Saturday, October 22, 2011

ஜித்தா மண்டல இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...........

ஜித்தா மண்டலம் இரு வருடங்களுக்கு முன்பு ஒரு இரத்ததான முகாமை நடத்தியபின் முகாம்கள் நடத்திடாமல், அவசர இரத்ததானம் மட்டும் அளித்து வந்தது, இது பற்றி மாநில பொ.செ. சகோ. ரஹ்மத்துல்லா ஜித்தா வந்தபொழுது கேட்டபொழுது, அதற்க்காக சில காரணங்கள் எங்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அப்பொழுது மாநில பொ. செ அவர்கள் தொடர்ந்து அவசர இரத்ததானம் செய்து வந்தாலும் அவ்வப்பொழுது அடையாள இரத்ததான முகாம் நடத்துங்கள் என்று வலியுறுத்தினார்கள், அதன்படி இன்ஷாஅல்லாஹ் இனி ஒவ்வொரு வருடமும் ஹாஜிகள் பயனுறும் வகையில் அடையாள முகாம்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. 

அதனடிப்படையில் 21-10-2011 வெள்ளி அன்று மதியம் 3 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலமும், ஜித்தா கிங் ஃபஹத் ஹாஸ்பிடலும் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது. இதில் நம் சகோதரர்கள் சுமார் 140 பேர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மருத்துவ சோதனைக்குப்பின் 118 பேர்களிடம் இரத்ததானம் பெறப்பட்டது.  

இம்முகாம் நடைபெற்றதை பார்த்த அந்த ஹாஸ்பிடலின் பாகிஸ்தானிய மருத்துவர் தாமும் கலந்து கொள்வதாக சொல்லி ஆர்வத்துடன் பங்கேற்றார். அதேபோல் அங்கு வந்த 3 சௌதி நாட்டினை சேர்ந்த இளம்பெண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய முன்வந்தனர். 

ஜித்தா நகர் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் தங்களது கிளை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்தனர்.மண்டல நிர்வாகிகள் இறுதிவரை இருந்து அனைவரையும் கவனித்து சிறப்பாக செயல்பட்டனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மேலாளர் நமது ஜமாத்திற்க்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் சிறப்பாக நிறைவேறியது.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment