தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் [மஸ்ஜீத் மலிக் அப்துல் அஜீஸ் கூடாரத்தில்] 28/10/ 2011 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்கு பின் வாரந்திர பயான் நடைபெற்றது, அதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாமும் இறைநம்பிக்கையும் என்ற தலைப்பிலும், ஈமானின் சுவை என்ற தலைப்பில் கிளை செயலாளர் நிஜாம்தீனும் உரையைற்றினார்கள். இதில் சுமார் 45 சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மதிய உணவு, து.ஆ விற்க்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
Monday, October 31, 2011
தபூக் கிளையில் வாரந்திர பயான் நிகழ்ச்சி
Sunday, October 30, 2011
ஜித்தா மண்டலம், ஷர்ஃபியா கிளை இணைந்து பயான்
அல்லாஹ்வின் திருப்பெயரால்... ஜித்தாவில் கடந்த 28-10-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் குர்பானியின் சிறப்புகளும் அதன் சட்டங்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் தரப்பட்டது. சுமார் 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை மண்டல வெப்சைட்டில் நேரலையாகவும் கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா - செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம்
அல்லாஹ்வின் அருளால் கடந்த 28.10.2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகிற ஹஜ் பெருநாள் மறுநாள் நடக்க இருக்கிற மார்க்க மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளில் கிளையின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும், அதனைத்தொடர்ந்து நடக்க இருக்கும் மண்டல கிளைகள் ஒறுங்கிணைப்பு கூட்டத்தில் நமதுகிளைகளின் செயல்பாடு குறித்து, மண்டதலைமைக்கும், மாநில தலைமைக்கு நமது கருத்துக்கள், ஆலைசனைகள் தெரிவிப்பது குறித்தும் பேசப்பட்டது. அதோடு தாவா பணிகளுக்கு புள்ளிகள் பற்றியும் அவற்றில் நமது கிளையினால் செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. ஆன்லைன்மூலம் நடத்தப்படும் பயான் நிகழ்ச்சிகளுக்கு, கேள்விப்பதில் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற கேள்வியும் எழுந்தது. மாநில தலைமைதான் அதற்கு புள்ளிகள் கொடுக்க வேண்டும். மாநில தலைமையின் பைலாவில் புதிதாக சேர்க்க இருக்கும் விதிமுறைகளை படித்து காண்பிக்கப்பட்டது. ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
Friday, October 28, 2011
ஜித்தா மண்டல ஸ்திராஹ் நோட்டீஸ் & மேப்
அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இன்ஷாஅல்லாஹ் வரும் ஹஜ் பெருநாளைக்கும் மறுநாள் 07-11-2011 திங்கள் அன்று நடைபெற உள்ள ஸ்திராஹ் நிகழ்ச்சியின் நோட்டீஸையும், நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்க்கான வழிகாட்டும் மேப்பினையும் இணைத்துள்ளோம். இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவரையும், உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எதிர்ப்பார்க்கின்றோம். ஜித்தா மண்டல நிர்வாகிகள் |
2011 - அரஃபா தினம் - பெருநாள் அறிவிப்பு
Arafat Day on Nov. 5
By ARAB NEWS
Published: Oct 28, 2011 01:53 Updated: Oct 28, 2011 01:53
JEDDAH: The Arafat Day, when pilgrims stand in prayer in the plain of Arafat during Haj, will be on Saturday, Nov. 5, while Eid Al-Adha will be celebrated in the Kingdom on Sunday, the Supreme Court announced.
"It has been confirmed that the first day of Dul Hijjah is on Friday, Oct. 28 as the new crescent was sighted by a number of people on Thursday evening," the court said.
Thursday, October 27, 2011
Wednesday, October 26, 2011
வெளிநாடு மண்டலங்கள் மற்றும் கிளைகளின் தாவா பணிகளுக்கான புள்ளிகள் வழங்குதல் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு :
அஸ்ஸலாமு அலைக்கும்
- இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் வெளிநாடு மண்டலங்கள் மற்றும் கிளைகளின் தாவா பணிகள் கணக்கிடப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்
- உங்கள் கிளை மற்றும் மண்டலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் எந்த நிகழ்ச்சிகளையெல்லாம் புகைப்பட ஆதாரத்துடன் unarvunet@gmail.com என்ற நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கின்றீர்களோ அது மட்டுமே புள்ளிகளுக்குரியனவையாக கருதப்படும். அது அல்லாமல் ஆதார புகைப்படங்கள் இல்லாமல் அனுப்பப்படுபவை புள்ளிக்கணக்கில் வராது.
- தாவா பணிகளை கிளை செய்யுமேயானால் கிளைக்கு முழுமதிப்பெண்களும், கிளைகளுடைய பணிகளுக்காக மண்டலத்திற்கு கிளைகள் பெறக்கூடிய புள்ளிகளும், அத்துடன் 20 சதவீதம் போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். மண்டலமே அந்த தாவா பணிகளை செய்யுமேயானால் மண்டலத்திற்கு முழுபுள்ளிகள் வழங்கப்படும். (உதாரணத்திற்கு ஆன்லைன் நிகழ்ச்சியை கிளைகள் நடத்தினால் கிளைகளுக்கு 30புள்ளிகளும், மணடலத்திற்கு 20சதவீதபுள்ளிகளாக 6 புள்ளிகளுமாக மொத்தம் 30 + 6 = 36 புள்ளிகள் மண்டலத்திற்கு வழங்கப்படும். மண்டலமே அதை செய்யுமேயானால் மண்டலத்திற்கு 30 புள்ளிகள் மட்டும் வழங்கப்படும்
- ஒவ்வொரு மாதமும் தாவா பணியில் முன்னிலை வகிக்கும் வெளிநாட்டு மண்டலங்களின் பட்டியலும், கிளைகளின் பட்டியலும் உணர்வு இதழிலும், இணையதளத்திலும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்…
- துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தால் அவற்றை ஸ்கேன் செய்து தலைமைக்கு அனுப்பினால் தான் அவை புள்ளிகளுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
குறிப்பு:
unarvunet@gmail.com என்ற மெயில் ஐடிக்கு நீங்கள் செய்திகளை அனுப்பினாலேயே – உணர்வு இதழில் அந்த செய்தி பிரசுரிக்க தகுதியானதாக இருந்தால், உணர்வு இதழுக்கும், இணையதளத்தில் வெளியிட தகுதியானதாக இருந்தால் இணையதளத்திற்கும் ஃபார்வேட் ஆகிவிடும்.
வெளிநாடுகளுக்கான தாவா பணியின் விபரஙகள் புள்ளி
- ஆன்லைன் பயான் நிகழ்ச்சி 30 புள்ளிகள்
- உள்ளரங்கு நிகழ்ச்சிகள் 20 புள்ளிகள்
- துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் 20 புள்ளிகள்
- ஏகத்துவம் ஒரு வருட சந்தா 5 புள்ளிகள்
- தீன்குலப்பெண்மணி ஒரு வருட சந்தா 5 புள்ளிகள்
- உணர்வு வார இதழ் ஒரு வருட சாந்தா 20 புள்ளிகள்
- பேச்சுப்பயிற்சி முகாம்களை நடத்துதல் 20 புள்ளிகள்
- இஸ்லாத்தில் புதிய நபர்களை இணைத்தல் 30 புள்ளிகள்
- இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 20 புள்ளிகள்
- இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 20 புள்ளிகள்
- திருக்குர்-ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு 15 புள்ளிகள்
- 3 புத்தகங்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5 புள்ளிகள்
- 3 டிவிடிக்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5 புள்ளிகள்
- 5 சிடிக்கள் அன்பளிப்பு வழங்கினால்… 5 புள்ளிகள்
- கூட்டுக்குர்பானி ஒரு மாட்டுக்கு 50 புள்ளிகள்
- ஃபித்ரா - உள்ளூரில் வசூலிக்கும் 1000 ரூபாய்க்கு 10 புள்ளிகள்
- நூலகங்கள் அமைத்தல் 30 புள்ளிகள்
- மண்டல தர்பியா 30 புள்ளிகள்
ரஹ்மத்துல்லாஹ்
உறுப்பினர் சேர்க்கை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
இம்மடல் தங்களை பூரண உடல் நலத்துடனும், வீரியமிக்க தவ்ஹீத் சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் அயல் நாடுகளில் மார்க்க மற்றும் சமுதாயப்பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். மாநிலத்தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து மண்டல நிர்வாகிகளுக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய ஜமாஅத் அதிகமான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட மாபெரும் இயக்கமாக அல்லாஹ்வின் அருளால் வளர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஆயினும் நம்முடைய ஜமாஅத்தில் மனதார உறுப்பினர்களாக இணைந்து கொண்ட பலர் முறைப்படி உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெறாமல் உள்ளனர். இன்னும் பலர் நாம் எடுத்துச் சொன்னால் நமது கொள்கையை ஏற்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொள்ள தயாராக உள்ளனர், ஆயினும் இதற்காக நாம் முயற்சி எடுக்காததால் எத்தனையோ பேர் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.
எனவே இந்தப் பணியை முடுக்கி விடும் வகையில் நவம்பர் மாதத்தை உறுப்பினர் சேர்க்கை மாதமாக அறிவிப்பது என தீர்மானித்துள்ளோம் நவம்பர் மாதத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு கூடுதல் முன்னுரிமை அளித்து செயல்படுமாறும் அதற்காக வழங்கப்படும் அதிகப்புள்ளிகளைப் பெற்று உங்கள் மண்டலத்தை தரம் உயர்த்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். புதிய உறுப்பினர்களைச் சேர்த்தும் பழைய உறுப்பினர்களைப் புதுப்பித்தும் ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இத்தோடு 6 மாதத்திற்குள் உறுப்பினர்கள் அட்டை காலாவதி ஆகும் நிலையில் இருந்தால் அவர்களும் இப்போதே ரினீவல் செய்து கொள்ளுமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு ஒரு உறுப்பினருக்கு 5 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு..,
ஆர். ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச்செயலாளர்)
Tuesday, October 25, 2011
ஜித்தா மண்டல பெருநாள் விடுமுறை பல்சுவை நிகழ்ச்சி
Monday, October 24, 2011
ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளை பயான்
Saturday, October 22, 2011
ஜித்தா மண்டல இரத்ததான முகாம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்........... ஜித்தா மண்டலம் இரு வருடங்களுக்கு முன்பு ஒரு இரத்ததான முகாமை நடத்தியபின் முகாம்கள் நடத்திடாமல், அவசர இரத்ததானம் மட்டும் அளித்து வந்தது, இது பற்றி மாநில பொ.செ. சகோ. ரஹ்மத்துல்லா ஜித்தா வந்தபொழுது கேட்டபொழுது, அதற்க்காக சில காரணங்கள் எங்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அப்பொழுது மாநில பொ. செ அவர்கள் தொடர்ந்து அவசர இரத்ததானம் செய்து வந்தாலும் அவ்வப்பொழுது அடையாள இரத்ததான முகாம் நடத்துங்கள் என்று வலியுறுத்தினார்கள், அதன்படி இன்ஷாஅல்லாஹ் இனி ஒவ்வொரு வருடமும் ஹாஜிகள் பயனுறும் வகையில் அடையாள முகாம்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் 21-10-2011 வெள்ளி அன்று மதியம் 3 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலமும், ஜித்தா கிங் ஃபஹத் ஹாஸ்பிடலும் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது. இதில் நம் சகோதரர்கள் சுமார் 140 பேர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மருத்துவ சோதனைக்குப்பின் 118 பேர்களிடம் இரத்ததானம் பெறப்பட்டது. இம்முகாம் நடைபெற்றதை பார்த்த அந்த ஹாஸ்பிடலின் பாகிஸ்தானிய மருத்துவர் தாமும் கலந்து கொள்வதாக சொல்லி ஆர்வத்துடன் பங்கேற்றார். அதேபோல் அங்கு வந்த 3 சௌதி நாட்டினை சேர்ந்த இளம்பெண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய முன்வந்தனர். ஜித்தா நகர் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் தங்களது கிளை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்தனர்.மண்டல நிர்வாகிகள் இறுதிவரை இருந்து அனைவரையும் கவனித்து சிறப்பாக செயல்பட்டனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மேலாளர் நமது ஜமாத்திற்க்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் சிறப்பாக நிறைவேறியது. ஜித்தா மண்டல நிர்வாகிகள் |
Wednesday, October 19, 2011
இரத்ததானம் செய்வோர் கவனத்திற்க்கு
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இரத்த தானத்தில் எவ்வளவு ரத்தம் எடு்க்கப்படுகிறது?
300 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற ரத்தம் மீண்டும் நம் உடலில் உற்பத்தி ஆகிவிடுகிறது.
இரத்த தானத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் எவ்வளவு நாட்களில் உடலில் உற்பத்தி ஆகும்?
10 லிருந்து 20 நாட்களில்.
இரத்ததானம் ஏன் கொடுக்க வேண்டும்?
நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120நாட்கள் தான் உயிரோடு இருக்கும் பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நாம் ரத்தம் கொடுத்தாலும் கொடுக்க விட்டாலும் இது தான் செயல். ஆக அழிந்த பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றவருக்கு கொடு்த்து உயிர் காப்பது நல்லது தானே!
இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
இருபது நிமிடம்.
இரத்ததானம் செய்த பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடு்க்க வேண்டும்?
இருபது நிமிடம்.
இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?
நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்ததானம் செய்வது நல்லது. இரத்ததானம் கொடுப்பதற்கு முன் மோர் போன்ற திரவங்களை குடுப்பது நல்லது.
சின்ன சின்ன உடல் கோளாறுகள் இருப்பவர்கள் இரத்ததானம் செய்யலாமா?
உதவி்க்கு கீழே உள்ள பட்டியலை படிக்கவும்.
· சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு உள்ளவர்கள் கொடுக்கலாம்.
· ஆஸ்துமா- மூச்சுத்திணரல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.
இரத்ததானம் செய்யக்கூடாதவர்கள் பட்டியல் கீழே.
· இதயக்கோளாறுக்காக மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க மாத்திரைகள், டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுபவர்கள் இரத்த தானம் செய்யக்க கூடாது.
ரத்ததான செய்வோர் கவனத்திற்க்கு
|
Saturday, October 15, 2011
ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்
அல்லாஹ்வின் திருப்பெயரால் கடந்த 14-10-2011 வெள்ளி அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சகோ. முனீப் (தம்மாம்) அவர்கள் தேர்வு களமும், தீர்ப்பு திடலும் என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார்கள், இதில் சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஜித்தா மண்ட்ல இணையதளம் மூலம் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. கலந்து கொண்ட அனேகர்கள் உரை மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருந்த்தாக சொன்னார்கள். சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. மண்டல அறிவிப்புகளுக்கு பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் |
ஜித்தா மண்டல மதீனா கிளையில் ஆன்லைன் பயான்
அல்ஹம்துலில்லாஹ் ஜித்தா மண்டல மதீனா கிளையில் கடந்த வெள்ளி அன்று மதியம் 2.30 மணி முதல் 3.15 ஆன்லைன் மூலம் ரியாத்திலிருந்து சகோ. ஹாஃபீஸ் மௌலவி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 25 பேர்கள் கலந்து கொண்டனர். மதிய உணவிற்க்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
|
ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்
ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்.
அல்லாஹ்வின் அருட்கிருபையால் 15.10.2011 அன்று மாலை அஸர் முதல் மஃரிப் வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. மௌலவி பஸீர் முஹம்மது மன்பயி "ஸூரத்துல் இக்லாஸின் சிறப்புகள் மற்றும் ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
புதிதாக இஸ்லாத்தை தழுவிய ராமநாதபுரத்தைச் சார்ந்த சகோ.அமீருக்கு கிளையில் சார்பில் மார்க்க விளக்க புத்தகங்களை மௌலவி பஸீர் முஹம்மது மன்பயி வழங்கினார்கள். அந்த சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தெளிவாக விளக்கப் பட்டது. மிகக்கவனமாக செவியேற்றார்.
தொடர்ந்து ஜித்தா மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் அவர்கள் இரத்ததானம் பற்றியும்,பெருநாளுக்கு மறுநாள் நடக்க இருக்கும் பல்சுவை நிகழ்ச்சி பற்றியும் விளக்கினார்கள். கிளைத்தலைவர் மாநில தலைமையின்அறிக்கைகளை வாசித்தார். கிளையின் இந்த மாத செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டது. உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிறைவுற்றது.அல்ஹம்து லில்லாஹ்.
தபூக் கிளையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்ட சதீஷ்.
|
Thursday, October 13, 2011
Sarafiyah Branch Bayan
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புள்ள சகோதரர்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ் 14-10-2011 (வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் ஆரம்பித்து இஷா தொழுகைக்கான பாங்கு வரையில் பயான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம். இந்த நிகழ்ச்சி jeddahtntj.blogspot.com என்ற இணையதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பப்படும். இணைப்பை பார்வையிடவும். நன்றி. |
ஜித்தா-ஷர்ஃபியா கிளை மார்க்க சொற்பொழிவு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு. ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 14-10-2011 வெள்ளி அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 வரை(சௌதி நேரம்) சகோ. முனீப் அவர்கள் தேர்வுக்களமும் தீர்வுத் திடலும் என்ற தலைப்பில், இவ்வுலக வாழ்க்கை பற்றியும், மறுமையில் மஹ்ஷர் மைதானத்தின் நிலை பற்றியும் நமக்கு உரையாற்ற உள்ளார்கள். நம் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்வதுடன், உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் கலந்துகொள்ள சொல்லவும்.
இந்த நிகழ்ச்சியினை ஜித்தா மண்டல சைட்டில் jeddahtntj.blogspot.com இன்ஷாஅல்லாஹ் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது. நேரில் வரமுடியாதவர்கள் இணையதளத்தில் நேரடியாக பார்த்து பயன்பெறவும்.
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா
Friday, October 7, 2011
தபூக் கிளையில் இஸ்லாத்தில் இணைந்த சகோதரர்
ஆன்லை பயான் ஜித்தா-மதீனா
Wednesday, October 5, 2011
தபூக் கிளையில் வாரந்திர பயான்
|
மாற்று சகேதரர்களுடன் தபுக்கிளையின் நிர்வாகிகள் சந்திப்பு
|
ஜித்தா மண்டலம் நடத்தும் ரத்ததான முகாம்
Monday, October 3, 2011
ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி
அஸ்ஸலாமு அலைக்கும்
இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும்,
அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்
என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது
குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக
அமைந்துள்ளது. இதனால் தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.
ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம்
சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத் தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.
மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு 7500 முதல் 9000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் 8500 அளவில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 9100 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் 9100 அனுப்பி வைக்குமாறும் ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1300 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
நடுத்தரமான ஆட்டின் விலை மற்றும் அதற்கான கூலி சேர்த்து 6500 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் வாழும் பகுதி மக்களுக்காக ஒரு ஆடு வழங்க விரும்புவோர் 6500 அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விலை யாவும் உத்தேசமானது தான்.
நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஆடு மாடுகள் வாங்கி ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் வினியோகம் செய்யப்படும். இயன்ற வரை நீங்கள் வழங்கும் தொகைக்கே (கூலியைக் கழித்து) பிராணிகள் வாங்கப்படும். அந்த விலையில் ஆடுமாடுகள் கிடைக்காத பட்சத்தில் அதைவிட சற்றே குறைந்த விலையில் ஆடு மாடுகள் வாங்கப்படும். உங்களால் அனுப்பப்ட்ட 9100 விலையில்
மாடு கிடைக்காமல் 8500க்கு கிடைத்தால் இந்த வகையில் மிச்சமாகும்தொகை முஸ்லிம் அல்லாத நண்பர்கள் கேட்கும்போது இலவச குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வகைக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இதற்கு உடன்படும் அன்பர்கள் குர்பானிக்கான தொகைகளை
அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
குர்பானிக்கான டிடி மற்றும் செக் அனுப்புவோர்
UNARVU. A/c No : CA 01000200000698, UCO BANK, CHENNAI என்ற பெயரில் எடுத்து பின் வரும்
முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம்,
எண் 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை - 600001
போன் 044 - 25215226