Thursday, October 24, 2013

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால்
பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின்
கருத்து அல்ல.

பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட
முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.

பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது
சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது
பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க.
முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க
மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.

ஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் ஆதரவைக் கேட்டு
கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை
ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில்
அளித்தோம்.

பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத்
எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு,
பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்

No comments:

Post a Comment