Thursday, October 10, 2013

வீரத்தின் விளை நிலம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


வீரத்தின் விளை நிலம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹஜ்ஜூடைய மாதம் வந்து விட்டாலே இப்ராஹீம் அலை அவர்களுடைய நினைவு யாருக்கும் வராமல் இருக்குமா?.

இறைவனுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒருவர் தன்னையே அர்ப்பணிக்க தயாராகினார் என்றால் அது இப்ராஹீம் (அலை) அவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியுமா ?.

ஏகத்துவ பிரச்சாரம் என்றதும்ஏகத்துவ விவாதம் என்றதும் அவர்களது உள்ளத்தில் பீறிட்டு எழுந்த வீரத்தைத் தான் வார்த்தைகளால் வடித்திட முடியுமா ?

யாரும் நெருங்க முடியாத அரசனின் அவைக்குள் தனி ஒரு மனிதனாக சென்று விவாதம் நடத்திய வீரத்தை விவரிக்க வார்த்தைகள் உண்டா ?

பாமர மக்களிடம் புரியும் விதம் செயல் வடிவத்தில் விளக்கிய விதத்தின் புத்திக் கூர்மையை வர்ணித்திட வார்த்தைகள் உண்டா ?

வீரத்தின் விளை நிலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தின் முன் நிருத்தப்பட்டப் பொழுது துவண்டுப் போனார்களா ?. தள தளர்த்துப் போனார்;களா வெள வெளத்துப் போனர்களா ?.

நெருப்பை வார்த்தவர்களைக் கண்டு அஞ்சி ஒடுங்கினார்களா மண்ணும் கடவுள் தான்மரமும் கடவுள் தான் கல்லும் கடவுள் தான்கண்டதெல்லாம் கடவுள் தான் என்றுக் கூறி நெருப்பை அணைத்து விடச் சொல்லி கெஞ்சி அடிபணிந்தார்களா ?.

இல்லை ! இல்லவே இல்லை !.

அவர்கள் அஞ்சியது அல்லாஹ் ஒருவனுக்கே> கோரிக்கை வைத்தது அல்லாஹ் ஒருவனிடமே !.

அல்லாஹ்வை தவிற அஞ்சுவதற்கும்அடி பணிவதற்கும் உலகில் எவருக்கும் தகுதி இல்லை என்பதை சொல்லால் மட்டுமல்லாமல் செயலிலும் வடித்துக் காட்டியவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் என்றால் மிகையாகுமா ?

வீரமும்கம்பீரமும் நிறைந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னைப் படைத்த ரப்பிடம் மட்டும் கூனிக் குறுகிய விதம்தனது தேவையை அழுதுக் கேட்ட விதம் உலக இறைநம்பிக்கையாளர்களுக்கோர் எடுத்துக்காட்டும்சிறந்த உதாரணமுமாகும்.

ஹஜ்ஜூடைய மாதம் வந்து விட்டாலே இப்ராஹீம் அலை அவர்களுடைய நினைவு யாருக்கும் வராமல் இருக்காது.

அந்த நினைவுகளில் நெருப்பு குண்டத்தில் எறியப்படுவதற்கு முன் அவர்கள் ஓதிய துஆவை யாராலும் மறக்க முடியாது. !

இன்றும்என்றும் உலகம் முடியும் காலம் வரை மக்கள் மனங்களை விட்டு நீங்காமல் நின்று கொண்டிருக்கும் துஆ ''ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது> எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் (ஹஸ்பியல்லாஹ் வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்நூல்: புகாரி 4564.

உலகம் முடியும் கலம் வரை நெருக்கடியை சந்திக்கும்ஒவ்வொருவருடைய நாவும் மொழியக் கூடிய துஆ '' ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

யாருக்கெல்லாம் என்ன மாதிரியான நெருக்கடி வருகிறதோஅல்லாஹ்வால் தான் அந்த நெருக்கடியை நீக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறதோ அவர்கள் ஓத வேண்டிய துஆ ''  
ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

ஏக இறைவனின் இறுதித் தூதரும்உலக மாந்தர் அனைவருக்கும் முன்மாதிரியாக அனுப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களும் யுத்தம் போன்ற நெருக்கடியான நேரங்களில் ஓதிய துஆவும்மக்களை ஓதச் சொன்ன துஆவும் '' ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்ட போது அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள்> நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்எனவே> அவர்களுக்கு அஞ்சுங்கள் என மக்கள் (சிலர்) கூறிய போது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போது மானவன்;அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். புகாரி: 4563.

ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல் (பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பாளன்) என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் 'அம்மனிதரைத் திரும்பி வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவரிடம்> 'நீ என்ன சொன்னாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்'' என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் இயலாமையைப் பழிக்கின்றான். என்றாலும் அறிவுப்பூர்வமாக நடந்து கொள். காரியம் உன்னை (கை) மீறி விட்டால் 'ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்என்று சொல்'' என கூறினார்கள். அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)> நூல்: அஹ்மத் 22858.

இனி என்ன தயக்கம்?

உலகில் பிறந்து விட்ட நாம் ஒவ்வொருவரும் யாருடைய சூழ்ச்சிக்குள்ளாவது சிக்கிக்கொள்ளத் தான் செய்கிறோம் அது மீள முடியாத சூழ்ச்சி என்றால் அதிலிருந்து மீண்டு எழுவதுற்கு கண்கள் கண்ணீரை சிந்தநா தழு தழுக்க ஓதிடுங்கள் '' ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆவை.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

No comments:

Post a Comment