Monday, October 28, 2013

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் யான்பு கிளை தர்பியா!


அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த  22.10.2013 செவ்வாய் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா வகுப்பு நடந்தது அதில் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தவ்ஹீத் ஜாமத்தின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்!




Saturday, October 26, 2013

TNTJ - JEDDAH - SENAIYA BAYAN

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 20-10-2013 அன்று ஜித்தா மண்டலம் செனைய்யா
கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாநில பொது செயலாளர் சகோ.
கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மஹ்ஷரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.

அனேக சகோதர்ர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே
நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ - JEDDAH - SARAFIYA BRANCH BAYAN

அஸ்ஸலாுு அைைக்ுும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிுுைையால் கடந்த 19-10-2013 அன்ுு ஜித்தா மண்டலம் ஷரபியா
கிைையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாநில பொது செயலாளர் சகோ.
கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நபிகளாரின் 6 அம்ச கோரிக்கை என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். அனேக சகோதர்ர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர.
துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

14-வது சௌதி கூட்டமைப்பு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் அருளால் கடந்த 18-10-2013 அன்று 14-வது சௌதி கூட்டமைப்பு
கூட்டம் ஜித்தாவில் மாநில பொது செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ்
அவா்களின் தலைமையில் நடைபெற்றது. அனைத்து மண்டல பொறுப்பாளர்களும் கலந்து
கொண்டனர். ஜமாஅத் சம்பந்தமாக சில கருத்தாலோசனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

TNTJ - சௌதி கூட்டமைப்பின் சார்பில் தர்பியா முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 17-10-2013 அன்று சௌதி கூட்டமைப்பின்
சார்பில் அனைத்து மண்டலங்களும் கலந்து கொள்ளும் வகையில் சுமார் 80 பேர்
கலந்து கொள்ளத்தக்க வகையில் தர்பியா முகாம் ஜித்தாவில் நடத்தப்பட்டது.
அதை மாநில பொது செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நடத்தி
வைத்தார்கள்.

அனைத்து சகோதரா்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி
அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது என கலந்து கொண்டவா்கள் கருத்து
தெரிவித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, October 24, 2013

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால்
பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின்
கருத்து அல்ல.

பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட
முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.

பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது
சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது
பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க.
முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க
மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.

ஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் ஆதரவைக் கேட்டு
கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை
ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில்
அளித்தோம்.

பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத்
எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு,
பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்

Saturday, October 19, 2013



அஸ்ஸலாமு அலைக்கும்





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 ஜித்தா மண்டலம் 



Saturday, October 12, 2013



அக்னிப் பரீட்சையில் மீண்டும் பீஜே பேட்டி!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் ஏற்கனவே கசோதரர் பீஜே அவர்களின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது. தற்போது மீண்டும் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 13.10.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.30மணிக்கு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் மீண்டும் பீஜே அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது. 

தமிழக போலீசாரின் தற்போதைய கைது நடவடிக்கை சரியான பாதையில்தான் செல்கின்றதா? 
மோடி பிரதமராக முடியாதா? 
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் டிஎன்டிஜேவின் ஆதரவு யாருக்கு? 
என்பன உள்ளிட்ட அனல் பறக்கும் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில்களை அந்நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்

Thursday, October 10, 2013



ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

  
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அர்குர்ஆன் 23:99,100)

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது. இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்கு திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல்நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இவ்வாறு மனிதன்கேட்கிறான்நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவதுஇயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால்பிறரைப் பயமுறுத்தவும்பிறருக்குத் தொல்லை தரவும்பிறர் மீது மேலாடிஅமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத்திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும்மனிதன் மரணித்த பின்புஅவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸஹ் எனும் அரபிச் சொல்இடம் பெற்றுள்ளதுபர்ஸஹ் என்றால் கண்களுக்குப் புலப்படாதஉடைக்க முடியாததிரை என்பது பொருள்இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ளமற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. என்ற கருத்தை 55வது அத்தியாயம்19,20 வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்விஞ்ஞானிகளும் இதனைஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும்,ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

அதே வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன்பயன்படுத்தியுள்ளான்மனிதன் இறந்த பின் அவனுக்கும் இவ்வுலகுக்கும் இடையே"பர்ஸஹ் எனும் திரை போடப்படுவதாக வல்ல இறைவன் குறிப்பிடுகின்றான்.இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாதுஎன்பதை இதன் மூலம் அறிவிக்கின்றான்இறைவனின் இவ்வசனத்தை நம்பக் கூடியஒரு முஸ்லிம்ஆவிகள் வந்து நடமாடுவதை எப்படி நம்ப முடியும்ஒன்றுக்கொன்றுமுரணான இரண்டு நம்பிக்கைகள்ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

 "பர்ஸஹ் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும்போடப்படுவதில்லைமாறாகமனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும்காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும்இறைவன் அதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும்ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போதுஅனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்பேய்களுக்குஇஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதிசெய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லைஎன்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்அவர்கள் இரண்டாவது கருத்துக்குஇடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூற்கள் : புகாரி, முஸ்லிம்

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபி (ஸல்) அவர்களின் போதனையை பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் ​உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் "முன்கர் மற்றொருவர் "நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் எனறு அம்மலக்குகள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி "உறங்குவீராக! என்று கூறப்படும். "நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் "நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் "இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் "நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி "இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும் கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபி (ஸல்அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும்பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

வீரத்தின் விளை நிலம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


வீரத்தின் விளை நிலம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹஜ்ஜூடைய மாதம் வந்து விட்டாலே இப்ராஹீம் அலை அவர்களுடைய நினைவு யாருக்கும் வராமல் இருக்குமா?.

இறைவனுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒருவர் தன்னையே அர்ப்பணிக்க தயாராகினார் என்றால் அது இப்ராஹீம் (அலை) அவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியுமா ?.

ஏகத்துவ பிரச்சாரம் என்றதும்ஏகத்துவ விவாதம் என்றதும் அவர்களது உள்ளத்தில் பீறிட்டு எழுந்த வீரத்தைத் தான் வார்த்தைகளால் வடித்திட முடியுமா ?

யாரும் நெருங்க முடியாத அரசனின் அவைக்குள் தனி ஒரு மனிதனாக சென்று விவாதம் நடத்திய வீரத்தை விவரிக்க வார்த்தைகள் உண்டா ?

பாமர மக்களிடம் புரியும் விதம் செயல் வடிவத்தில் விளக்கிய விதத்தின் புத்திக் கூர்மையை வர்ணித்திட வார்த்தைகள் உண்டா ?

வீரத்தின் விளை நிலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தின் முன் நிருத்தப்பட்டப் பொழுது துவண்டுப் போனார்களா ?. தள தளர்த்துப் போனார்;களா வெள வெளத்துப் போனர்களா ?.

நெருப்பை வார்த்தவர்களைக் கண்டு அஞ்சி ஒடுங்கினார்களா மண்ணும் கடவுள் தான்மரமும் கடவுள் தான் கல்லும் கடவுள் தான்கண்டதெல்லாம் கடவுள் தான் என்றுக் கூறி நெருப்பை அணைத்து விடச் சொல்லி கெஞ்சி அடிபணிந்தார்களா ?.

இல்லை ! இல்லவே இல்லை !.

அவர்கள் அஞ்சியது அல்லாஹ் ஒருவனுக்கே> கோரிக்கை வைத்தது அல்லாஹ் ஒருவனிடமே !.

அல்லாஹ்வை தவிற அஞ்சுவதற்கும்அடி பணிவதற்கும் உலகில் எவருக்கும் தகுதி இல்லை என்பதை சொல்லால் மட்டுமல்லாமல் செயலிலும் வடித்துக் காட்டியவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் என்றால் மிகையாகுமா ?

வீரமும்கம்பீரமும் நிறைந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னைப் படைத்த ரப்பிடம் மட்டும் கூனிக் குறுகிய விதம்தனது தேவையை அழுதுக் கேட்ட விதம் உலக இறைநம்பிக்கையாளர்களுக்கோர் எடுத்துக்காட்டும்சிறந்த உதாரணமுமாகும்.

ஹஜ்ஜூடைய மாதம் வந்து விட்டாலே இப்ராஹீம் அலை அவர்களுடைய நினைவு யாருக்கும் வராமல் இருக்காது.

அந்த நினைவுகளில் நெருப்பு குண்டத்தில் எறியப்படுவதற்கு முன் அவர்கள் ஓதிய துஆவை யாராலும் மறக்க முடியாது. !

இன்றும்என்றும் உலகம் முடியும் காலம் வரை மக்கள் மனங்களை விட்டு நீங்காமல் நின்று கொண்டிருக்கும் துஆ ''ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது> எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் (ஹஸ்பியல்லாஹ் வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்நூல்: புகாரி 4564.

உலகம் முடியும் கலம் வரை நெருக்கடியை சந்திக்கும்ஒவ்வொருவருடைய நாவும் மொழியக் கூடிய துஆ '' ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

யாருக்கெல்லாம் என்ன மாதிரியான நெருக்கடி வருகிறதோஅல்லாஹ்வால் தான் அந்த நெருக்கடியை நீக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறதோ அவர்கள் ஓத வேண்டிய துஆ ''  
ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

ஏக இறைவனின் இறுதித் தூதரும்உலக மாந்தர் அனைவருக்கும் முன்மாதிரியாக அனுப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களும் யுத்தம் போன்ற நெருக்கடியான நேரங்களில் ஓதிய துஆவும்மக்களை ஓதச் சொன்ன துஆவும் '' ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆ.

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்ட போது அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள்> நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்எனவே> அவர்களுக்கு அஞ்சுங்கள் என மக்கள் (சிலர்) கூறிய போது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போது மானவன்;அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். புகாரி: 4563.

ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல் (பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பாளன்) என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் 'அம்மனிதரைத் திரும்பி வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவரிடம்> 'நீ என்ன சொன்னாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்'' என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் இயலாமையைப் பழிக்கின்றான். என்றாலும் அறிவுப்பூர்வமாக நடந்து கொள். காரியம் உன்னை (கை) மீறி விட்டால் 'ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்என்று சொல்'' என கூறினார்கள். அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)> நூல்: அஹ்மத் 22858.

இனி என்ன தயக்கம்?

உலகில் பிறந்து விட்ட நாம் ஒவ்வொருவரும் யாருடைய சூழ்ச்சிக்குள்ளாவது சிக்கிக்கொள்ளத் தான் செய்கிறோம் அது மீள முடியாத சூழ்ச்சி என்றால் அதிலிருந்து மீண்டு எழுவதுற்கு கண்கள் கண்ணீரை சிந்தநா தழு தழுக்க ஓதிடுங்கள் '' ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் '' என்ற இப்ராஹீம் அலை அவர்கள் ஓதிய துஆவை.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, October 7, 2013

ஜித்தா - ஷரஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் பேரருளால், 04/10/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா
கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயீ சகோ. நஸ்ருதீன்
அவர்கள், "அல்லாஹ்வின் கோபம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் து/ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 04-10-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- ஜித்தா மண்டலம் - பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. அதில் சகோ. முனீப் அவா்கள் இறையச்சம் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா்.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்சௌதி அரேபியா.