Wednesday, August 14, 2013

ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (09-08-2013) வெள்ளிக்கிழமை இனிதே நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

த த ஜமாஅத் ஜித்தா மண்டல துணை தலைவர், செயலாளர் மற்றும் பொறுளாளர் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு இனிதே துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
சகோ. ரபீக் (ஜித்தா மண்டல துணை தலைவர்) அவர்கள் "_நாம் எப்படி நடந்து கொள்வது " என்ற தலைப்பில் துவக்க உரை ஆற்றினார்கள். 

துவக்க உரை முடிந்தவுடன் 11.00 மணி முதல் 11.30 வரை கடையநல்லூர் அணைத்து கிளைகளின் செயல்பாடுகள் Power Point மூலம் அணைத்து சகோதரர்களுக்கும் போட்டு 
காட்டப்பட்டது. அதோடு ஒரு வருட வரவு / செலவு கணக்கு எல்லாருக்கும் மத்தியில் விரிவாக விவரிக்கப்பட்டது.

11.30 முதல் 12.30  மணி வரை ஜூம்மா உரை  மண்டல தாயி அப்துல் ஹக் அவர்கள் நிகழ்த்தினார் 12.30 லிருந்து 01.30 வரை   ல் கத்தாரிலிருந்து மேலான்மைகுழு உறுப்பினர் சகோ அப்துந் நாசர் அவர்கள் சத்தியப்பாதை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அதன்  பிறகு வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாற்றம் நடைபெற்றது. மதியம் ௦02.30 மணி முதல் 03.30 மணி வரை கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்களிடம் ஆன்லைன் மூலம் நேரடி கலந்துரையாடல் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் 75 சகோதரர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் துவாவுடன் பொதுக்குழு இனிதே நிறைவுற்றது .எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே 





No comments:

Post a Comment